சுற்றுலா இங்கிலாந்து அணிக்கும் இலங்கை கிரிக்கெட் பதினொருவர் அணிக்கும் இடையிலான 3 நாட்கள் கொண்ட முதலாவது பயிற்சிப் போட்டியானது இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து வீரர்களின் சிறப்பான துடுப்பாட்டம் காரணமாக சமநிலையில் நிறைவுக்கு வந்துள்ளது.
இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி குறித்த தொடரில் பங்கேற்பதற்கு முன்னர் இரண்டு பயிற்சிப் போட்டிகளில் பங்கேற்கிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் (07) ஆரம்பமான முதலாவது பயிற்சிப் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் தனது இரண்டாவது இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 1 விக்கெட் இழப்பிற்கு 39 ஓட்டங்களை பெற்றிருந்தது.
பிரியஞ்சனின் அரைச்சதத்தால் இங்கிலாந்துக்கு எதிராக வலுப்பெற்ற இலங்கை தரப்பு
சுற்றுலா இங்கிலாந்து அணிக்கும் இலங்கை கிரிக்கெட் பதினொருவர் அணிக்குமிடையிலான முதலாவது பயிற்சிப்போட்டியின்…
110 ஓட்டங்கள் முன்னிலை பெற்ற நிலையில் இன்றைய மூன்றாவதும் இறுதியுமான நாளில் ஆட்டத்தை ஆரம்பித்த இங்கிலாந்து அணிக்கு இரண்டாவது விக்கெட் இணைப்பாட்டம் சிறந்த அத்திவாரமாக அமைந்தது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஸக் க்ரௌலி மற்றும் ஜோ டென்லி ஆகியோர் இணைப்பாட்டமாக 67 ஓட்டங்களை பகிர்ந்து கொண்ட வேளையில் ஜோ டென்லி 27 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
பின்னர் மூன்றாவது விக்கெட்டுக்காக ஸக் க்ரௌலியுடன் இணைந்த பென் ஸ்டோக்ஸ் வேகமாக துடுப்பெடுத்தாடினார். இருவரும் சேர்ந்து இணைப்பாட்டமாக 92 ஓட்டங்களை குவித்தனர். பென் ஸ்டோக்ஸ் 43 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழந்தார். பென் ஸ்டோக்ஸின் ஆட்டமிழப்பை தொடர்ந்து போட்டியில் அரைச்சதம் கடந்த ஸ்க் க்ரௌலி 91 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
Photos: Sri Lanka vs England – 1st Warm-Up Match | Day 03
அதன் பின்னர் புதிய இணைப்பாட்டம் ஒன்று ஆரம்பித்தது. ஒல்லி போப் மற்றும் கீட்டன் ஜீனிங்ஸ் ஆகியோர் ஐந்தாவது விக்கெட் இணைப்பாட்டமாக 63 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டனர். இந்நிலையில் கீட்டன் ஜீனிங்ஸ் 23 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் இங்கிலாந்து அணிக்காக அரைச்சதம் விளாசிய ஒல்லி போப் 77 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். அதன் பின்னர் சாம் கரண் 26 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க இன்றைய நாள் ஆட்டம் நிறைவுக்குவந்தது.
ஐந்து தடவைகள் டி20 உலகக்கிண்ண சம்பியனான அவுஸ்திரேலிய மகளிர்
இந்திய மகளிர் அணியுடன் இன்று (08) நடைபெற்ற ஐ.சி.சி…
போட்டி நிறைவுக்குவந்த நிலையில் இங்கிலாந்து அணி தங்களது இரண்டாவது இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 320 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன் இலங்கை கிரிக்கெட் பதினொருவர் அணியை விட சுற்றுலா இங்கிலாந்து அணி 430 ஓட்டங்கள் முன்னிலை பெற்றிருந்தது. அணித்தலைவர் ஜோ ரூட், விக்கெட் காப்பாளர் ஜொஸ் பட்லர் மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் துடுப்பெடுத்தாடாமல் ஏனைய இளம் வீரர்களுக்கு இரண்டாவது இன்னிங்ஸில் வாய்ப்பு வழங்கியிருந்தமை இங்கே குறிப்பிடத்தக்கது.
இலங்கை கிரிக்கெட் பதினொருவர் அணியின் பந்துவீச்சில் கவிஷ்க அஞ்சுல 45 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும், துவிந்து திலகரத்ன 62 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும், சாமிக்க கருணாரத்ன, சங்கீத் குரே மற்றும் தரிந்து கௌஷால் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட் வீதமும் வீழ்த்தினர்.
சுற்றுலா இங்கிலாந்து அணிக்கும் இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் அணிக்கும் இடையிலான இரண்டாவது பயிற்சி போட்டியானது 4 நாட்கள் கொண்ட பயிற்சிப் போட்டியாக எதிர்வரும் வியாழக்கிழமை (12) கொழும்பு பி. சரவணமுத்து மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
சத்திர சிகிச்சையின் பின்னர் இந்திய அணிக்கு திரும்பிய ஹார்டிக் பாண்டியா
சுற்றுலா தென்னாபிரிக்க அணியுடன் நடைபெறவுள்ள 3…
இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 19 ஆம் திகதி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
ஸ்கோர் விபரம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Zak Crawley | b Lahiru Samarakoon | 43 | 45 | 9 | 0 | 95.56 |
Dominic Sibley | lbw b Kaveesha Anjula | 14 | 41 | 2 | 0 | 34.15 |
Joe Denly | c Manoj Sarathchandra b Nisala Tharaka | 32 | 54 | 6 | 0 | 59.26 |
Joe Root | lbw b Kaveesha Anjula | 78 | 93 | 9 | 0 | 83.87 |
Ben Stokes | c & b Nisala Tharaka | 3 | 5 | 0 | 0 | 60.00 |
Ollie Pope | c Lahiru Milantha b Chamika Karunaratne | 8 | 14 | 2 | 0 | 57.14 |
Jos Buttler | lbw b Lahiru Samarakoon | 79 | 159 | 5 | 1 | 49.69 |
Keaton Jennings | lbw b Tharindu Kaushal | 19 | 47 | 2 | 0 | 40.43 |
Ben Foakes | not out | 27 | 47 | 2 | 0 | 57.45 |
Sam Curran | lbw b Malinda Pushpakumara | 3 | 4 | 0 | 0 | 75.00 |
Chris Woakes | c Manoj Sarathchandra b Lahiru Samarakoon | 0 | 5 | 0 | 0 | 0.00 |
Extras | 10 (b 4 , lb 4 , nb 1, w 1, pen 0) |
Total | 316/10 (85.3 Overs, RR: 3.7) |
Fall of Wickets | 1-52 (13.1) Dominic Sibley, 2-69 (16.1) Zak Crawley, 3-124 (28.5) Joe Denly, 4-128 (30.1) Ben Stokes, 5-142 (34.1) Ollie Pope, 6-197 (50.6) Joe Root, 7-258 (68.4) Keaton Jennings, 8-312 (83.3) Jos Buttler, 9-315 (84.2) Sam Curran, 10-316 (85.3) Chris Woakes, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Nisala Tharaka | 11 | 1 | 41 | 2 | 3.73 | |
Chamika Karunaratne | 9 | 3 | 23 | 1 | 2.56 | |
Malinda Pushpakumara | 15 | 2 | 45 | 1 | 3.00 | |
Lahiru Samarakoon | 11.3 | 1 | 63 | 3 | 5.58 | |
Kaveesha Anjula | 11 | 3 | 43 | 2 | 3.91 | |
Duvindu Tillakarathne | 18 | 1 | 51 | 0 | 2.83 | |
Tharindu Kaushal | 10 | 0 | 42 | 1 | 4.20 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Sangeeth Cooray | c & b Dominic Bess | 19 | 36 | 2 | 0 | 52.78 |
Lahiru Udara | c Stuart Broad b Chris Woakes | 15 | 37 | 1 | 0 | 40.54 |
Lahiru Milantha | c Saqib Mahmood b Matthew Parkinson | 31 | 53 | 4 | 1 | 58.49 |
Ashan Priyanjan | c Sam Curran b Saqib Mahmood | 77 | 126 | 11 | 0 | 61.11 |
Milinda Siriwardane | c Saqib Mahmood b Matthew Parkinson | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Priyamal Perera | c Zak Crawley b Chris Woakes | 29 | 65 | 3 | 0 | 44.62 |
Promod Maduwantha | c Sam Curran b Matthew Parkinson | 14 | 89 | 0 | 0 | 15.73 |
Manoj Sarathchandra | c Joe Root b Dominic Bess | 35 | 54 | 6 | 0 | 64.81 |
Chamika Karunaratne | c Ben Foakes b Matthew Parkinson | 4 | 4 | 1 | 0 | 100.00 |
Lahiru Samarakoon | c Ben Foakes b Dominic Bess | 17 | 15 | 4 | 0 | 113.33 |
Nisala Tharaka | not out | 0 | 3 | 0 | 0 | 0.00 |
Extras | 4 (b 0 , lb 1 , nb 3, w 0, pen 0) |
Total | 245/10 (80 Overs, RR: 3.06) |
Fall of Wickets | 1-34 (11.4) Lahiru Udara, 2-34 (12.3) Sangeeth Cooray, 3-83 (27.4) Lahiru Milantha, 4-83 (27.5) Milinda Siriwardane, 5-143 (45.4) Priyamal Perera, 6-184 (60.2) Ashan Priyanjan, 7-219 (74.5) Promod Maduwantha, 8-223 (76.3) Chamika Karunaratne, 9-231 (77.4) Manoj Sarathchandra, 10-245 (79.6) Lahiru Samarakoon, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Stuart Broad | 6 | 2 | 13 | 0 | 2.17 | |
Sam Curran | 7 | 3 | 16 | 0 | 2.29 | |
Dominic Bess | 18 | 5 | 54 | 3 | 3.00 | |
Chris Woakes | 7 | 2 | 21 | 2 | 3.00 | |
Matthew Parkinson | 17 | 2 | 64 | 4 | 3.76 | |
Saqib Mahmood | 8 | 3 | 13 | 1 | 1.62 | |
Joe Root | 7 | 1 | 26 | 0 | 3.71 | |
Joe Denly | 10 | 0 | 33 | 0 | 3.30 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Zak Crawley | c Priyamal Perera b Duvindu Tillakarathne | 91 | 99 | 17 | 0 | 91.92 |
Dominic Sibley | c Lahiru Udara b Kaveesha Anjula | 0 | 2 | 0 | 0 | 0.00 |
Joe Denly | c Priyamal Perera b Chamika Karunaratne | 27 | 49 | 5 | 0 | 55.10 |
Ben Stokes | c Sangeeth Cooray b Duvindu Tillakarathne | 43 | 42 | 8 | 0 | 102.38 |
Ollie Pope | lbw b Kaveesha Anjula | 77 | 115 | 6 | 0 | 66.96 |
Keaton Jennings | lbw b Sangeeth Cooray | 23 | 63 | 1 | 0 | 36.51 |
Ben Foakes | not out | 24 | 71 | 0 | 0 | 33.80 |
Sam Curran | c Chamika Karunaratne b Tharindu Kaushal | 26 | 39 | 2 | 1 | 66.67 |
Extras | 9 (b 0 , lb 4 , nb 5, w 0, pen 0) |
Total | 320/7 (79.1 Overs, RR: 4.04) |
Fall of Wickets | 1-9 (1.2) Dominic Sibley, 2-76 (16.5) Joe Denly, 3-168 (30.5) Ben Stokes, 4-170 (32.1) Zak Crawley, 5-233 (53.5) Keaton Jennings, 6-283 (68.3) Ollie Pope, 7-320 (79.1) Sam Curran, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Nisala Tharaka | 10 | 1 | 49 | 0 | 4.90 | |
Kaveesha Anjula | 10 | 1 | 45 | 2 | 4.50 | |
Malinda Pushpakumara | 20 | 2 | 50 | 0 | 2.50 | |
Chamika Karunaratne | 5 | 1 | 12 | 1 | 2.40 | |
Lahiru Samarakoon | 8.1 | 2 | 39 | 1 | 4.81 | |
Tharindu Kaushal | 8 | 2 | 39 | 0 | 4.88 | |
Duvindu Tillakarathne | 12 | 1 | 62 | 2 | 5.17 | |
Sangeeth Cooray | 6 | 0 | 18 | 1 | 3.00 |
முடிவு – போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுற்றது
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க