Home Tamil பிரியஞ்சனின் அரைச்சதத்தால் இங்கிலாந்துக்கு எதிராக வலுப்பெற்ற இலங்கை தரப்பு

பிரியஞ்சனின் அரைச்சதத்தால் இங்கிலாந்துக்கு எதிராக வலுப்பெற்ற இலங்கை தரப்பு

180

சுற்றுலா இங்கிலாந்து அணிக்கும் இலங்கை கிரிக்கெட் பதினொருவர் அணிக்குமிடையிலான முதலாவது பயிற்சிப்போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் தனது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிவரும் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 39 ஓட்டங்களை பெற்றுள்ளது.

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை அணியுடன் விளையாடுவதற்காக ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. குறித்த டெஸ்ட் தொடர் எதிர்வரும் 19ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் சுற்றுலா இங்கிலாந்து அணி இலங்கை கிரிக்கெட் பதினொருவர் அணியுடனும், இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை பதினொருவர் அணியுடனும் தலா ஒவ்வொரு பயிற்சிப் போட்டிகளில் விளையாடவுள்ளது.

அன்ட்ரே ரசலின் சிக்ஸர் மழையுடன் டி20 தொடரை வென்றது மேற்கிந்திய தீவுகள்

துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சில் சோபிக்கத் தவறிய இலங்கை அணி மேற்கிந்திய…

அந்த அடிப்படையில் முதல் பயிற்சி போட்டியாக சுற்றுலா இங்கிலாந்து அணிக்கும் இலங்கை கிரிக்கெட் பதினொருவர் அணிக்கும் இடையில் 3 நாட்கள் கொண்ட பயிற்சிப்போட்டி நேற்று (07) கட்டுநாயக்கவில் ஆரம்பமாகியது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன் பிரகாரம் முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி நேற்றைய முதல் நாள் ஆட்டநேர முடிவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 316 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. 

துடுப்பாட்டத்தில் விக்கெட் காப்பாளர் ஜொஸ் பட்லர் 79 ஓட்டங்களையும், அணித்தலைவர் ஜோ ரூட் 78 ஓட்டங்களையும், ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஷக் கிரௌலி 43 ஓட்டங்களையும் அதிகபட்ச ஓட்டங்களாக பெற்றுக்கொண்டனர். இலங்கை அணியின் பந்துவீச்சில் லஹிரு சமரகோன் 63 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், நிசல தாரக்க 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும், கவிஷ்க அஞ்சுல 43 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும், சமிக்க கருணாரத்ன, தரிந்து கௌஷால் மற்றும் மலிந்த புஸ்பகுமார ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர். 

Photos: Sri Lanka vs England – 1st Warm-Up Match | Day 01

இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் பதினொருவர் அணி தமது முதல் இன்னிங்ஸிற்காக இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கியது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய லஹிரு உதார மற்றும் சங்கீத் குரே ஆகியோர் 15, 19 ஓட்டங்களுடன் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அதன் பின்னர் மூன்றாவது விக்கெட் இணைப்பாட்டமாக லஹிரு மிலந்த மற்றும் அஷான் பிரியஞ்சன் ஆகியோருக்கிடையில் 49 ஓட்டங்கள் இணைப்பாட்டமாக பகிரப்பட்டது. 

இவ்வேளையில் லஹிரு மிலந்த 31 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்துவந்த அணித்தலைவர் மிலிந்த சிறிவர்த்தன அடுத்த பந்தில் ஓட்டமின்றி வந்த வேகத்திலேயே அரங்கம் திரும்பினார். அதன் பின்னர் ஐந்தாவது விக்கெட் இணைப்பாட்டமானது இலங்கை கிரிக்கெட் பதினொருவர் அணிக்கு ஆறுதல் அளித்தது. அஷான் பிரியஞ்சன் மற்றும் பிரியமல் பெரேரா ஆகியோர் 5ஆவது விக்கெட் இணைப்பாட்டமாக 60 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டனர்.

இரண்டு முக்கிய வீரர்களின் உபாதைகளினால் அவதியுறும் இலங்கை அணி

பல்லேகல சர்வதேச மைதானத்தில் இன்று (06) நடைபெற்ற இலங்கை மற்றும் மேற்கிந்திய…

இந்நிலையில் பிரியமல் பெரேரா 29 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அதன் பின்னர், நிதானமாக இலங்கை கிரிக்கெட் பதினொருவர் அணிக்கு ஓட்டங்களை பெற்றுக்கொடுத்துவந்த அஷான் பிரியஞ்சன் அரைச்சதம் கடந்து 11 பௌண்டரிகளுடன் 77 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். அதன் பின்னர் துடுப்பெடுத்தாட களமிறங்கிய வீரர்கள் நிலைத்துநின்று ஆட முடியாமல் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். 

பிரமோத் மதுவந்த 14 ஓட்டங்களுடனும், சமிக்க கருணாரத்ன வெறும் 4 ஓட்டங்களுடனும், மனோஜ் சரத்சந்திர 35 ஓட்டங்களுடனும் இறுதியாக லஹிரு சமரகோன் 17 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்க இலங்கை கிரிக்கெட் பதினொருவர் அணி 80 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 245 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அதன் அடிப்படையில் இலங்கை கிரிக்கெட் பதினொருவர் அணி முதல் இன்னிங்ஸில் 71 ஓட்டங்கள் பின்னிலை வகித்தது. 

Photos: Sri Lanka vs England – 1st Warm-Up Match | Day 02

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் மெட் பார்கின்சன் 68 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும், டொம் பெஸ் 54 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், கிறிஸ் வோக்ஸ் 2 விக்கெட்டுக்களையும், ஷாகிப் மஹ்மூத் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். 71 ஓட்டங்கள் முன்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இங்கிலாந்து அணியின் முதல் விக்கெட் இரண்டாவது ஓவரிலேயே வீழ்த்தப்பட்டது. டொம் சிப்லேய் ஓட்டமின்றி வெளியேறினார். 

பின்னர் இரண்டாவது விக்கெட் இணைப்பாட்டமாக முறியடிக்கப்படாமல் 30 ஓட்டங்கள் குவிக்கப்பட்ட நிலையில் இன்றைய இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது. ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுக்கள் கைவசமுள்ள நிலையில் 110 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது. ஆடுகளத்தில் ஷக் கிரௌலி 27 ஓட்டங்களுடனும், ஜோ டென்லி 11 ஓட்டங்களுடனும் காணப்படுகின்றனர். நாளை (9) குறித்த பயிற்சி போட்டியின் மூன்றாவதும் இறுதியுமான நாளாகும்.  

ஸ்கோர் விபரம்

Result

Match drawn

Sri Lanka Board President’s XI
245/10 (80)

England
316/10 (85.3) & 320/7 (79.1)

Batsmen R B 4s 6s SR
Zak Crawley b Lahiru Samarakoon 43 45 9 0 95.56
Dominic Sibley lbw b Kaveesha Anjula 14 41 2 0 34.15
Joe Denly c Manoj Sarathchandra b Nisala Tharaka 32 54 6 0 59.26
Joe Root lbw b Kaveesha Anjula 78 93 9 0 83.87
Ben Stokes c & b Nisala Tharaka 3 5 0 0 60.00
Ollie Pope c Lahiru Milantha b Chamika Karunaratne 8 14 2 0 57.14
Jos Buttler lbw b Lahiru Samarakoon 79 159 5 1 49.69
Keaton Jennings lbw b Tharindu Kaushal 19 47 2 0 40.43
Ben Foakes not out 27 47 2 0 57.45
Sam Curran lbw b Malinda Pushpakumara 3 4 0 0 75.00
Chris Woakes c Manoj Sarathchandra b Lahiru Samarakoon 0 5 0 0 0.00


Extras 10 (b 4 , lb 4 , nb 1, w 1, pen 0)
Total 316/10 (85.3 Overs, RR: 3.7)
Fall of Wickets 1-52 (13.1) Dominic Sibley, 2-69 (16.1) Zak Crawley, 3-124 (28.5) Joe Denly, 4-128 (30.1) Ben Stokes, 5-142 (34.1) Ollie Pope, 6-197 (50.6) Joe Root, 7-258 (68.4) Keaton Jennings, 8-312 (83.3) Jos Buttler, 9-315 (84.2) Sam Curran, 10-316 (85.3) Chris Woakes,

Bowling O M R W Econ
Nisala Tharaka 11 1 41 2 3.73
Chamika Karunaratne 9 3 23 1 2.56
Malinda Pushpakumara 15 2 45 1 3.00
Lahiru Samarakoon 11.3 1 63 3 5.58
Kaveesha Anjula 11 3 43 2 3.91
Duvindu Tillakarathne 18 1 51 0 2.83
Tharindu Kaushal 10 0 42 1 4.20
Batsmen R B 4s 6s SR
Sangeeth Cooray c & b Dominic Bess 19 36 2 0 52.78
Lahiru Udara c Stuart Broad b Chris Woakes 15 37 1 0 40.54
Lahiru Milantha c Saqib Mahmood b Matthew Parkinson 31 53 4 1 58.49
Ashan Priyanjan c Sam Curran b Saqib Mahmood 77 126 11 0 61.11
Milinda Siriwardane c Saqib Mahmood b Matthew Parkinson 0 1 0 0 0.00
Priyamal Perera c Zak Crawley b Chris Woakes 29 65 3 0 44.62
Promod Maduwantha c Sam Curran b Matthew Parkinson 14 89 0 0 15.73
Manoj Sarathchandra c Joe Root b Dominic Bess 35 54 6 0 64.81
Chamika Karunaratne c Ben Foakes b Matthew Parkinson 4 4 1 0 100.00
Lahiru Samarakoon c Ben Foakes b Dominic Bess 17 15 4 0 113.33
Nisala Tharaka not out 0 3 0 0 0.00


Extras 4 (b 0 , lb 1 , nb 3, w 0, pen 0)
Total 245/10 (80 Overs, RR: 3.06)
Fall of Wickets 1-34 (11.4) Lahiru Udara, 2-34 (12.3) Sangeeth Cooray, 3-83 (27.4) Lahiru Milantha, 4-83 (27.5) Milinda Siriwardane, 5-143 (45.4) Priyamal Perera, 6-184 (60.2) Ashan Priyanjan, 7-219 (74.5) Promod Maduwantha, 8-223 (76.3) Chamika Karunaratne, 9-231 (77.4) Manoj Sarathchandra, 10-245 (79.6) Lahiru Samarakoon,

Bowling O M R W Econ
Stuart Broad 6 2 13 0 2.17
Sam Curran 7 3 16 0 2.29
Dominic Bess 18 5 54 3 3.00
Chris Woakes 7 2 21 2 3.00
Matthew Parkinson 17 2 64 4 3.76
Saqib Mahmood 8 3 13 1 1.62
Joe Root 7 1 26 0 3.71
Joe Denly 10 0 33 0 3.30


Batsmen R B 4s 6s SR
Zak Crawley c Priyamal Perera b Duvindu Tillakarathne 91 99 17 0 91.92
Dominic Sibley c Lahiru Udara b Kaveesha Anjula 0 2 0 0 0.00
Joe Denly c Priyamal Perera b Chamika Karunaratne 27 49 5 0 55.10
Ben Stokes c Sangeeth Cooray b Duvindu Tillakarathne 43 42 8 0 102.38
Ollie Pope lbw b Kaveesha Anjula 77 115 6 0 66.96
Keaton Jennings lbw b Sangeeth Cooray 23 63 1 0 36.51
Ben Foakes not out 24 71 0 0 33.80
Sam Curran c Chamika Karunaratne b Tharindu Kaushal 26 39 2 1 66.67


Extras 9 (b 0 , lb 4 , nb 5, w 0, pen 0)
Total 320/7 (79.1 Overs, RR: 4.04)
Fall of Wickets 1-9 (1.2) Dominic Sibley, 2-76 (16.5) Joe Denly, 3-168 (30.5) Ben Stokes, 4-170 (32.1) Zak Crawley, 5-233 (53.5) Keaton Jennings, 6-283 (68.3) Ollie Pope, 7-320 (79.1) Sam Curran,

Bowling O M R W Econ
Nisala Tharaka 10 1 49 0 4.90
Kaveesha Anjula 10 1 45 2 4.50
Malinda Pushpakumara 20 2 50 0 2.50
Chamika Karunaratne 5 1 12 1 2.40
Lahiru Samarakoon 8.1 2 39 1 4.81
Tharindu Kaushal 8 2 39 0 4.88
Duvindu Tillakarathne 12 1 62 2 5.17
Sangeeth Cooray 6 0 18 1 3.00



>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<