Home Tamil இலங்கையை வைட்வொஷ் செய்தது இங்கிலாந்து

இலங்கையை வைட்வொஷ் செய்தது இங்கிலாந்து

243

சுற்றுலா இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து கிரிக்கெட் அணி 6 விக்கெட்டுக்களால் இலகு வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.

நெருக்கடி உருவாக்கிய எம்புல்தெனிய – போராட்டத்துடன் ஜோ ரூட்

மேலும், இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியிலும் வெற்றி பெற்ற இங்கிலாந்து கிரிக்கெட் அணி இப்போட்டியின் வெற்றியுடன் சேர்த்து தொடரினை 2-0 என முழுமையாகக் கைப்பற்றி வைட்வொஷ் வெற்றியொன்றினை பதிவு செய்திருக்கின்றது.  

காலி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நேற்று (24) நிறைவுக்கு வந்த நிலையில், இலங்கையின் முதல் இன்னிங்ஸினை (381) அடுத்து பதிலுக்கு தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடிய இங்கிலாந்து கிரிக்கெட் அணி 339 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்தது. இங்கிலாந்து அணிக்காக களத்தில் ஆட்டமிழக்காது இருந்த ஜேக் லீச் மற்றும் ஜேம்ஸ் அன்டர்சன் ஓட்டம் எதனையும் பெறாமல் இருந்தனர். 

இன்று (25) போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தில் இலங்கை அணியினை விட 42 ஓட்டங்கள் பின்தங்கியவாறு தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினைத் தொடர்ந்த இங்கிலாந்து கிரிக்கெட் அணி 344 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து தமது துடுப்பாட்டத்தை நிறைவு செய்து கொண்டது. 

முதல் டெஸ்ட்டுக்கான பாகிஸ்தான் குழாம் அறிவிப்பு

இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டத்தில் ஜோ ரூட் 18 பௌண்டரிகள் அடங்கலாக 186 ஓட்டங்களை எடுத்திருக்க, லசித் எம்புல்தெனிய 137 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்களைச் சாய்த்து டெஸ்ட் போட்டிகளில் தனது சிறந்த பந்துவீச்சினை பதிவு செய்தார். 

தொடர்ந்து 37 ஓட்டங்கள் முன்னிலை பெற்றவாறு தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த இலங்கை கிரிக்கெட் அணி, இங்கிலாந்தின் சுழல் வீரர்களால் மிகப் பெரிய துடுப்பாட்ட அனர்த்தம் ஒன்றினை சந்தித்தது. 

அதன்படி, நான்காம் நாளின் மதிய போசணத்திற்கு முன்னதாக குசல் ஜனித் பெரேரா (14),  தினேஷ் சந்திமால் (9), அஞ்செலோ மெதிவ்ஸ் (5) போன்ற  முக்கிய முன்வரிசைத் துடுப்பாட்ட வீரர்களை பொறுப்பற்ற முறையில் பறிகொடுத்த இலங்கை கிரிக்கெட் அணி, நான்காம் நாளின் மதிய போசணத்தின் போது 67 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டது.

அபு தாபி T10 லீக்கில் விளையாடவுள்ள கெவின் கொத்திகொட!

மதிய போசணத்தின் பின்னும் மோசமான துடுப்பாட்டத்தினை தொடர்ந்த இலங்கை கிரிக்கெட் அணி 35.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 126 ஓட்டங்களை மாத்திரமே தமது இரண்டாம் இன்னிங்ஸில் எடுத்தது.  

இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டம் சார்பில், பின்வரிசையில் களமிறங்கிய லசித் எம்புல்தெனிய 40 ஓட்டங்களைப் பெற்று தனது தரப்பில் வீரர் ஒருவர் பெற்ற கூடுதல் ஓட்டங்களை பதிவு செய்தார். 

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் சுழல் பந்துவீச்சாளர்களான டொம் பெஸ் மற்றும் ஜக் லீக் ஆகியோர் தலா 4 விக்கெட்டுக்கள் வீதம் சாய்க்க, ஜோ ரூட்டும் 2 விக்கெட்டுக்களை சுருட்டினார். 

இலங்கை அணியின் மோசமான துடுப்பாட்டத்தினை தொடர்ந்து போட்டியின் வெற்றி இலக்காக 164 ஓட்டங்கள் நிர்ணயம் செய்யப்பட்டது. 

இந்த வெற்றி இலக்கினை அடைய தமது இரண்டாம் இன்னிங்ஸ்  துடுப்பாட்டத்தினை நான்காம் நாளின் தேநீர் இடைவேளைக்கு முன்னர் ஆரம்பம் செய்த இங்கிலாந்து கிரிக்கெட் அணி போட்டியின் வெற்றி இலக்கினை 43.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 164 ஓட்டங்களுடன் அடைந்தது.

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியுடன் இணையும் குமார் சங்கக்கார

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வெற்றி இலக்கினை அடைவதற்கு உதவிய வீரர்களில் டோம் சிப்லே அவரின் இரண்டாவது டெஸ்ட் அரைச்சதத்துடன் ஆட்டமிழக்காமல் 56 ஓட்டங்கள் பெற, ஜோஸ் பட்லர் 46 ஓட்டங்களை எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணியின் பந்துவீச்சு சார்பில் லசித் எம்புல்தெனிய 3 விக்கெட்டுக்களை கைப்பற்றியும், ரமேஷ் மெண்டிஸ் ஒரு விக்கெட்டினைச் சாய்த்திருந்தும் அவர்களது பந்துவீச்சு வீணாகியிருந்தது. 

போட்டியின் ஆட்டநாயகனாக இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைவரான ஜோ ரூட் தெரிவாகினார். 

இப்போட்டியின் வெற்றியுடன் டெஸ்ட் தொடரினையும் முழுமையாக வென்றிருக்கும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி, ஐ.சி.சி. இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்காக வழங்கப்படும் 120 புள்ளிகளையும் தமக்கு சொந்தமாக்கியிருக்கின்றது. அதேநேரம், இந்த டெஸ்ட் தொடர் இலங்கை கிரிக்கெட் அணி ஐ.சி.சி. இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் பறிகொடுத்த நான்காவது தொடராக மாறுகின்றது. 

போட்டியின் சுருக்கம்

Result


Sri Lanka
381/10 (139.3) & 126/10 (35.5)

England
344/10 (116.1) & 164/4 (43.3)

Batsmen R B 4s 6s SR
Lahiru Thirimanne c Jos Buttler b James Anderson 43 95 5 0 45.26
Kusal Perera c Joe Root b James Anderson 6 14 1 0 42.86
Oshada Fernando b James Anderson 0 4 0 0 0.00
Angelo Mathews c Jos Buttler b James Anderson 110 238 11 0 46.22
Dinesh Chandimal lbw b Mark Wood 52 121 4 1 42.98
Niroshan Dickwella c Jack Leach b James Anderson 92 144 10 0 63.89
Ramesh Mendis c Jos Buttler b Mark Wood 0 16 0 0 0.00
Dilruwan Perera c Jack Leach b Sam Curran 67 170 8 1 39.41
Suranga Lakmal c Zak Crawley b James Anderson 0 2 0 0 0.00
Lasith Embuldeniya c Joe Root b Mark Wood 7 33 0 1 21.21
Asitha Fernando not out 0 10 0 0 0.00


Extras 4 (b 0 , lb 2 , nb 1, w 1, pen 0)
Total 381/10 (139.3 Overs, RR: 2.73)
Fall of Wickets 1-7 (4.1) Kusal Perera, 2-7 (4.5) Oshada Fernando, 3-76 (26.2) Lahiru Thirimanne, 4-193 (68.6) Dinesh Chandimal, 5-232 (88.6) Angelo Mathews, 6-243 (91.6) Ramesh Mendis, 7-332 (120.4) Niroshan Dickwella,

Bowling O M R W Econ
James Anderson 29 13 40 6 1.38
Sam Curran 18.3 3 60 1 3.28
Jack Leach 38 5 119 0 3.13
Mark Wood 28 4 84 3 3.00
Dominic Bess 26 2 76 0 2.92
Batsmen R B 4s 6s SR
Dominic Sibley lbw b Lasith Embuldeniya 0 14 0 0 0.00
Zak Crawley c Lahiru Thirimanne b Lasith Embuldeniya 5 24 0 0 20.83
Jonathan Bairstow c Oshada Fernando b Lasith Embuldeniya 28 73 5 0 38.36
Joe Root run out (Oshada Fernando) 186 309 18 0 60.19
Dan Lawrence c Lahiru Thirimanne b Lasith Embuldeniya 3 21 0 0 14.29
Jos Buttler c Oshada Fernando b Ramesh Mendis 55 95 7 0 57.89
Sam Curran c Lahiru Thirimanne b Lasith Embuldeniya 13 43 0 1 30.23
Dominic Bess c Lahiru Thirimanne b Lasith Embuldeniya 32 95 4 0 33.68
Mark Wood c Lahiru Thirimanne b Lasith Embuldeniya 1 6 0 0 16.67
Jack Leach lbw b Dilruwan Perera 1 17 0 0 5.88
James Anderson not out 4 5 1 0 80.00


Extras 16 (b 8 , lb 3 , nb 5, w 0, pen 0)
Total 344/10 (116.1 Overs, RR: 2.96)
Bowling O M R W Econ
Suranga Lakmal 16 7 31 0 1.94
Lasith Embuldeniya 42 6 137 7 3.26
Asitha Fernando 10 2 31 0 3.10
Dilruwan Perera 32.1 4 86 1 2.68
Ramesh Mendis 16 1 48 1 3.00
Batsmen R B 4s 6s SR
Kusal Perera lbw b Jack Leach 14 25 2 0 56.00
Lahiru Thirimanne c Zak Crawley b Jack Leach 13 33 0 0 39.39
Oshada Fernando c Zak Crawley b Dominic Bess 3 19 0 0 15.79
Angelo Mathews b Dominic Bess 5 11 0 0 45.45
Dinesh Chandimal c James Anderson b Jack Leach 9 6 2 0 150.00
Niroshan Dickwella c Dan Lawrence b Dominic Bess 7 14 1 0 50.00
Ramesh Mendis c Jos Buttler b Jack Leach 16 20 3 0 80.00
Dilruwan Perera c Zak Crawley b Dominic Bess 4 13 0 0 30.77
Suranga Lakmal not out 11 32 1 0 34.38
Lasith Embuldeniya c Jonathan Bairstow b Joe Root 40 42 6 1 95.24
Asitha Fernando b Joe Root 0 1 0 0 0.00


Extras 4 (b 3 , lb 0 , nb 1, w 0, pen 0)
Total 126/10 (35.5 Overs, RR: 3.52)
Bowling O M R W Econ
James Anderson 2 0 6 0 3.00
Sam Curran 2 0 9 0 4.50
Dominic Bess 16 1 49 4 3.06
Jack Leach 14 1 59 4 4.21
Joe Root 1.5 1 0 2 0.00


Batsmen R B 4s 6s SR
Zak Crawley c Oshada Fernando b Lasith Embuldeniya 13 19 1 0 68.42
Dominic Sibley not out 56 144 2 0 38.89
Jonathan Bairstow lbw b Lasith Embuldeniya 29 28 3 1 103.57
Joe Root b 11 16 1 0 68.75
Dan Lawrence c Niroshan Dickwella b Lasith Embuldeniya 2 9 0 0 22.22
Jos Buttler not out 46 48 1 0 95.83


Extras 7 (b 0 , lb 4 , nb 3, w 0, pen 0)
Total 164/4 (43.3 Overs, RR: 3.77)
Bowling O M R W Econ
Lasith Embuldeniya 20 3 73 3 3.65
Dilruwan Perera 13.3 1 39 0 2.93
Ramesh Mendis 10 0 48 1 4.80



முடிவு – இங்கிலாந்து கிரிக்கெட் அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<