Home Tamil நெருக்கடி உருவாக்கிய எம்புல்தெனிய – போராட்டத்துடன் ஜோ ரூட்

நெருக்கடி உருவாக்கிய எம்புல்தெனிய – போராட்டத்துடன் ஜோ ரூட்

356
SLC

சுற்றுலா இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று (24) நிறைவுக்கு வந்திருக்கின்றது. 

இன்றைய நாளில் இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு, ஜோ ரூட் தனது அபார சதத்துடன் பெறுமதி சேர்த்த போதும், இலங்கை கிரிக்கெட் அணியின் சுழல் பந்துவீச்சாளரான லசித் எம்புல்தெனிய நெருக்கடியினை உருவாக்கியிருந்தார். 

அபுதாபி T10 லீக்கில் களமிறங்கும் ‘குட்டி மாலிங்க’

காலி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வருகின்ற இந்த டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நேற்று (24) நிறைவுக்கு வந்த நிலையில், இலங்கையின் முதல் இன்னிங்ஸை (381) அடுத்து பதிலுக்கு துடுப்பாடிய இங்கிலாந்து கிரிக்கெட் அணி 98 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்தது. களத்தில், இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைவர் ஜோ ரூட் 67 ஓட்டங்களுடனும், ஜொன்னி பெயர்ஸ்டோவ் 24 ஓட்டங்களுடனும் இருந்தனர். 

பின்னர், இன்று (24) போட்டியின் மூன்றாம் நாளில் இலங்கை அணியினை விட 286 ஓட்டங்கள் பின்தங்கியவாறு தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினைத் தொடர்ந்த இங்கிலாந்து கிரிக்கெட் அணி தொடக்கத்தில் ஜொன்னி பெயர்ஸ்டோவின் விக்கெட்டினை பறிகொடுத்தது. லசித் எம்புல்தெனியவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்த ஜொன்னி பெயர்ஸ்டோவ் 28 ஓட்டங்களுடன் மைதானத்தினை விட்டு வெளியேறினார். 

அதன் பின்னர் புதிய துடுப்பாட்ட வீரராக களம் வந்த டேன் லோவ்ரன்ஸ் உம், வெறும் 03 ஓட்டங்களுடன் மைதானத்தினை விட்டு எம்புல்தெனியவின் பந்துவீச்சில் வெளியேறினார். ஆனால், இத்தருணத்தில் ஜோடி சேர்ந்த ஜோஸ் பட்லர் மற்றும் ஜோ ரூட் ஆகியோர் இரண்டாம் நாளின் மதிய போசண இடைவேளை வரை இணைப்பாட்டம் ஒன்றுக்கான அடித்தளம் ஒன்றினைப் போட்டனர். மூன்றாம் நாளின் தேநீர் இடைவேளை வரை நீடித்த இந்த இணைப்பாட்டத்திற்குள் ஜோ ரூட் தனது 19ஆவது டெஸ்ட் சதத்தினைப் பூர்த்தி செய்ய, ஜோஸ் பட்லரும் அவரின் 18ஆவது டெஸ்ட் அரைச்சதத்தினைப் பெற்றார். 

Video: Lasith Malinga வின் திடீர் ஓய்வு: மும்பை இந்தியன்ஸுடன் மனக் கசப்பா?

பின்னர், இந்த இரண்டு வீரர்களும் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் 5ஆம் விக்கெட்டுக்காக 97 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்த நிலையில் மூன்றாம் நாளின் தேநீர் இடைவேளையுடன் இந்த இணைப்பாட்டம் முடிவடைந்தது. இந்த இணைப்பாட்டத்தின் முடிவாகிய ஜோஸ் பட்லர் 55 ஓட்டங்களுடன் ரமேஷ் மெண்டிஸின் கன்னி டெஸ்ட் விக்கெட்டாக மாறினார். 

எனினும், தொடர்ந்து துடுப்பாட்டத்தில் அசத்திய ஜோ ரூட், இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் 07ஆம் விக்கெட்டுக்காக டொம் பேஸ் உடன் இணைந்து மூன்றாம் நாளின் மூன்றாம் இடைவெளியில் 81 ஓட்டங்களைப் பகிர்ந்தார். பின்னர், டொம் பெஸ்ஸின் விக்கெட்டும் எம்புல்தெனியவின் சுழலில் அவர் 32 ஓட்டங்களைப் பெற்ற போது விழுந்தது. 

துடுப்பாட்டத்தில் அசத்திய இலங்கை கிரிக்கெட் அணி

பின்னர், ஜோ ரூட்டின் விக்கெட்டினையும் ரன் அவுட் முறையில் பறிகொடுத்த இங்கிலாந்து கிரிக்கெட் அணி, மூன்றாம் நாளின் ஆட்டநேரம் நிறைவுக்கு வரும் போது 114.2 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 339 ஓட்டங்களுடன் காணப்படுகின்றது. 

களத்தில் ஜேக் லீச் ஓட்டமெதுவுமின்றி நிற்க, ஜோ ரூட் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டத்திற்கு 18 பௌண்டரிகள் அடங்கலாக 186 ஓட்டங்களை எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

அதேநேரம், இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில் லசித் எம்புல்தெனிய 7 விக்கெட்டுக்களைச் சாய்த்து அபாரமாக செயற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

இனி போட்டியின் நான்காம் நாளில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இலங்கையினை விட 42 ஓட்டங்கள் பின்தங்கியவாறு தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை தொடரவிருக்கின்றது. 

போட்டியின் சுருக்கம்

Result


Sri Lanka
381/10 (139.3) & 126/10 (35.5)

England
344/10 (116.1) & 164/4 (43.3)

Batsmen R B 4s 6s SR
Lahiru Thirimanne c Jos Buttler b James Anderson 43 95 5 0 45.26
Kusal Perera c Joe Root b James Anderson 6 14 1 0 42.86
Oshada Fernando b James Anderson 0 4 0 0 0.00
Angelo Mathews c Jos Buttler b James Anderson 110 238 11 0 46.22
Dinesh Chandimal lbw b Mark Wood 52 121 4 1 42.98
Niroshan Dickwella c Jack Leach b James Anderson 92 144 10 0 63.89
Ramesh Mendis c Jos Buttler b Mark Wood 0 16 0 0 0.00
Dilruwan Perera c Jack Leach b Sam Curran 67 170 8 1 39.41
Suranga Lakmal c Zak Crawley b James Anderson 0 2 0 0 0.00
Lasith Embuldeniya c Joe Root b Mark Wood 7 33 0 1 21.21
Asitha Fernando not out 0 10 0 0 0.00


Extras 4 (b 0 , lb 2 , nb 1, w 1, pen 0)
Total 381/10 (139.3 Overs, RR: 2.73)
Fall of Wickets 1-7 (4.1) Kusal Perera, 2-7 (4.5) Oshada Fernando, 3-76 (26.2) Lahiru Thirimanne, 4-193 (68.6) Dinesh Chandimal, 5-232 (88.6) Angelo Mathews, 6-243 (91.6) Ramesh Mendis, 7-332 (120.4) Niroshan Dickwella,

Bowling O M R W Econ
James Anderson 29 13 40 6 1.38
Sam Curran 18.3 3 60 1 3.28
Jack Leach 38 5 119 0 3.13
Mark Wood 28 4 84 3 3.00
Dominic Bess 26 2 76 0 2.92
Batsmen R B 4s 6s SR
Dominic Sibley lbw b Lasith Embuldeniya 0 14 0 0 0.00
Zak Crawley c Lahiru Thirimanne b Lasith Embuldeniya 5 24 0 0 20.83
Jonathan Bairstow c Oshada Fernando b Lasith Embuldeniya 28 73 5 0 38.36
Joe Root run out (Oshada Fernando) 186 309 18 0 60.19
Dan Lawrence c Lahiru Thirimanne b Lasith Embuldeniya 3 21 0 0 14.29
Jos Buttler c Oshada Fernando b Ramesh Mendis 55 95 7 0 57.89
Sam Curran c Lahiru Thirimanne b Lasith Embuldeniya 13 43 0 1 30.23
Dominic Bess c Lahiru Thirimanne b Lasith Embuldeniya 32 95 4 0 33.68
Mark Wood c Lahiru Thirimanne b Lasith Embuldeniya 1 6 0 0 16.67
Jack Leach lbw b Dilruwan Perera 1 17 0 0 5.88
James Anderson not out 4 5 1 0 80.00


Extras 16 (b 8 , lb 3 , nb 5, w 0, pen 0)
Total 344/10 (116.1 Overs, RR: 2.96)
Bowling O M R W Econ
Suranga Lakmal 16 7 31 0 1.94
Lasith Embuldeniya 42 6 137 7 3.26
Asitha Fernando 10 2 31 0 3.10
Dilruwan Perera 32.1 4 86 1 2.68
Ramesh Mendis 16 1 48 1 3.00
Batsmen R B 4s 6s SR
Kusal Perera lbw b Jack Leach 14 25 2 0 56.00
Lahiru Thirimanne c Zak Crawley b Jack Leach 13 33 0 0 39.39
Oshada Fernando c Zak Crawley b Dominic Bess 3 19 0 0 15.79
Angelo Mathews b Dominic Bess 5 11 0 0 45.45
Dinesh Chandimal c James Anderson b Jack Leach 9 6 2 0 150.00
Niroshan Dickwella c Dan Lawrence b Dominic Bess 7 14 1 0 50.00
Ramesh Mendis c Jos Buttler b Jack Leach 16 20 3 0 80.00
Dilruwan Perera c Zak Crawley b Dominic Bess 4 13 0 0 30.77
Suranga Lakmal not out 11 32 1 0 34.38
Lasith Embuldeniya c Jonathan Bairstow b Joe Root 40 42 6 1 95.24
Asitha Fernando b Joe Root 0 1 0 0 0.00


Extras 4 (b 3 , lb 0 , nb 1, w 0, pen 0)
Total 126/10 (35.5 Overs, RR: 3.52)
Bowling O M R W Econ
James Anderson 2 0 6 0 3.00
Sam Curran 2 0 9 0 4.50
Dominic Bess 16 1 49 4 3.06
Jack Leach 14 1 59 4 4.21
Joe Root 1.5 1 0 2 0.00


Batsmen R B 4s 6s SR
Zak Crawley c Oshada Fernando b Lasith Embuldeniya 13 19 1 0 68.42
Dominic Sibley not out 56 144 2 0 38.89
Jonathan Bairstow lbw b Lasith Embuldeniya 29 28 3 1 103.57
Joe Root b 11 16 1 0 68.75
Dan Lawrence c Niroshan Dickwella b Lasith Embuldeniya 2 9 0 0 22.22
Jos Buttler not out 46 48 1 0 95.83


Extras 7 (b 0 , lb 4 , nb 3, w 0, pen 0)
Total 164/4 (43.3 Overs, RR: 3.77)
Bowling O M R W Econ
Lasith Embuldeniya 20 3 73 3 3.65
Dilruwan Perera 13.3 1 39 0 2.93
Ramesh Mendis 10 0 48 1 4.80



போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் நாளை தொடரும்

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<