Home Tamil சவாலுடன் வெற்றி இலக்கினை நோக்கிய இங்கிலாந்து கிரிக்கெட் அணி

சவாலுடன் வெற்றி இலக்கினை நோக்கிய இங்கிலாந்து கிரிக்கெட் அணி

314
SLC

சுற்றுலா இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று (17) நிறைவுக்கு வந்திருக்கின்றது. 

இங்கிலாந்து அணியுடன் இணையும் மொயின் அலி

இன்றைய நாளுக்கான ஆட்டத்தில் லஹிரு திரிமான்ன, அஞ்செலோ மெதிவ்ஸ், லசித் எம்புல்தெனிய ஆகியோரின் போராட்டத்தினைத் தாண்டி இங்கிலாந்து கிரிக்கெட் அணி தமக்கான வெற்றியைப் பெற வேண்டிய நிலையில் காணப்படுகின்றது. 

காலி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வருகின்ற இந்த டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நேற்று (17) நிறைவுக்கு வந்திருந்தது. போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட நிறைவில் தமது இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பாடி வந்த இலங்கை கிரிக்கெட் அணி 156 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்தது. களத்தில் லஹிரு திரிமான்ன 76 ஓட்டங்களுடனும், லசித் எம்புல்தெனிய ஓட்டமெதுவுமின்றியும் இருந்தனர். 

இன்று போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்தினை விட 130 ஓட்டங்கள் பின்தங்கியவாறு தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை தொடர்ந்த இலங்கை அணிக்கு நேற்று போராட்டம் காட்டியிருந்த லஹிரு திரிமான்ன டெஸ்ட் போட்டிகளில் தான் பெற்ற இரண்டாவது சதத்துடன் வலுச்சேர்த்தார். 

பின்னர், திரிமான்னவின் விக்கெட் சேம் கர்ரனின் வேகத்திற்குப் பறிபோனது. ஆட்டமிழக்கும் போது லஹிரு திரிமான்ன 12 பௌண்டரிகள் உடன் 111 ஓட்டங்களை எடுத்திருந்தார். அதோடு, திரிமான்னவின் சதம் அவர் டெஸ்ட் போட்டிகளில் 08 வருடங்களின் பின்னர் பெற்ற சதமாகவும் மாறியிருந்தது. 

திரிமான்னவினை அடுத்து அஞ்செலோ மெதிவ்ஸ் தன்னுடைய 36ஆவது டெஸ்ட் அரைச்சதத்துடன் இலங்கை அணிக்காக துடுப்பாட்டத்தில் போராட்டம் ஒன்றினை வெளிப்படுத்தியிருந்தார். இதனால், இலங்கை அணி இங்கிலாந்தினை விட பின்தங்கியிருந்த 130 ஓட்டங்களையும் கடந்தது. 

தொடர்ந்து நான்காம் நாளின் மூன்றாவது இடைவெளியில் ஏனைய துடுப்பாட்டவீரர்கள் பிரகாசிக்கத் தவற மெதிவ்ஸின் விக்கெட்டும் பறிபோனது. இதனால், இலங்கை கிரிக்கெட் அணி 136.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து தமது இரண்டாம் இன்னிங்ஸில் 359 ஓட்டங்களை எடுத்துக் கொண்டது. 

இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பில் அஞ்செலோ மெதிவ்ஸ் 4 பௌண்டரிகள் அடங்கலாக 71 ஓட்டங்களை எடுத்தார். 

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் ஜேக் லீச் 122 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருக்க, டொம் பெஸ் 3 விக்கெட்டுக்களையும் சேம் கர்ரன் 2 விக்கெட்டுக்களையும் சுருட்டினர். 

இலங்கை கிரிக்கெட் அணியின் இரண்டாம் இன்னிங்ஸினை அடுத்து  போட்டியின் வெற்றி இலக்காக 74 ஓட்டங்கள் நிர்ணயம் செய்யப்பட்டது. 

இந்த வெற்றி இலக்கினை அடைவதற்கு பதிலுக்கு தமது இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பாடி வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி லசித் எம்புல்தெனியவின் அபார பந்துவீச்சினால் தடுமாற்றத்துக்கு உள்ளாகியிருப்பதுடன் போட்டியின் நான்காம் நாள் நிறைவில் தமது இரண்டாம் இன்னிங்ஸிற்காக 15 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 38 ஓட்டங்களுடன் காணப்படுகின்றது. 

சரிவிலிருந்து மீள முயற்சிக்கும் இலங்கை அணி

களத்தில் ஜொன்னி பெயர்ஸ்டோவ் 11 ஓட்டங்களுடனும், டேன் லாவ்ரன்ஸ் 7  ஓட்டங்களுடனும் காணப்படுகின்றனர். 

இலங்கை அணியின் பந்துவீச்சு சார்பில் இங்கிலாந்தின் ஆரம்பத் துடுப்பாட்டவீரர்கள் (ஷேக் கிராவ்லி, டோம் சிப்லி) இருவரினையும் ஆட்டமிழக்கச் செய்த லசித் எம்புல்தெனிய 2 விக்கெட்டுக்களைச் சாய்த்திருந்தார். 

இனி போட்டியின் வெற்றி இலக்கிற்காக 36 ஓட்டங்கள் தேவைப்பட நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை நாளை தொடர்கின்றது. 

போட்டியின் சுருக்கம்

Result


Sri Lanka
135/10 (46.1) & 359/10 (136.5)

England
421/10 (117.1) & 76/3 (24.2)

Batsmen R B 4s 6s SR
Lahiru Thirimanne c Jonathan Bairstow b Stuart Broad 4 22 0 0 18.18
Kusal Perera c Joe Root b Dominic Bess 20 28 2 0 71.43
Kusal Mendis c Jos Buttler b Stuart Broad 0 2 0 0 0.00
Angelo Mathews c Joe Root b Stuart Broad 27 54 1 1 50.00
Dinesh Chandimal c Sam Curran b Jack Leach 28 71 1 0 39.44
Niroshan Dickwella c Dominic Sibley b Dominic Bess 12 21 1 0 57.14
Dasun Shanaka c Jos Buttler b Dominic Bess 23 48 3 0 47.92
Wanindu Hasaranga b Dominic Bess 19 22 2 0 86.36
Dilruwan Perera b Dominic Bess 0 2 0 0 0.00
Lasith Embuldeniya run out (Jack Leach) 0 1 0 0 0.00
Asitha Fernando not out 0 7 0 0 0.00


Extras 2 (b 0 , lb 1 , nb 1, w 0, pen 0)
Total 135/10 (46.1 Overs, RR: 2.92)
Fall of Wickets 1-16 (6.3) Lahiru Thirimanne, 2-16 (6.5) Kusal Mendis, 3-25 (10.2) Kusal Perera, 4-81 (28.6) Angelo Mathews, 5-81 (29.2) Dinesh Chandimal, 6-105 (38.1) Niroshan Dickwella, 7-126 (42.5) Dasun Shanaka, 8-126 (42.5) Dilruwan Perera, 9-130 (43.5) Lasith Embuldeniya, 10-135 (46.1) Wanindu Hasaranga,

Bowling O M R W Econ
Stuart Broad 9 3 20 3 2.22
Sam Curran 4 2 8 0 2.00
Mark Wood 6 1 21 0 3.50
Dominic Bess 10.1 3 30 5 2.97
Jack Leach 17 2 55 1 3.24
Batsmen R B 4s 6s SR
Zak Crawley c Wanindu Hasaranga b Lasith Embuldeniya 9 26 1 0 34.62
Dominic Sibley c Lahiru Thirimanne b Lasith Embuldeniya 4 15 0 0 26.67
Jonathan Bairstow c Kusal Mendis b Lasith Embuldeniya 47 93 2 0 50.54
Joe Root c Lasith Embuldeniya b Dilruwan Perera 228 321 18 1 71.03
Dan Lawrence c Kusal Mendis b Dilruwan Perera 73 150 6 1 48.67
Jos Buttler c Niroshan Dickwella b Asitha Fernando 30 57 3 0 52.63
Sam Curran b Asitha Fernando 0 1 0 0 0.00
Dominic Bess run out (Minod Bhanuka) 0 4 0 0 0.00
Jack Leach lbw b Dilruwan Perera 4 20 1 0 20.00
Mark Wood c Niroshan Dickwella b Dilruwan Perera 2 9 0 0 22.22
Stuart Broad not out 11 13 2 0 84.62


Extras 13 (b 7 , lb 0 , nb 6, w 0, pen 0)
Total 421/10 (117.1 Overs, RR: 3.59)
Fall of Wickets 1-10 (4.2) Dominic Sibley, 2-17 (8.4) Zak Crawley, 3-131 (42.2) Jonathan Bairstow,

Bowling O M R W Econ
Lasith Embuldeniya 45 4 176 3 3.91
Asitha Fernando 14 1 44 2 3.14
Wanindu Hasaranga 15 1 63 0 4.20
Dilruwan Perera 36.1 2 109 4 3.02
Dasun Shanaka 7 1 22 0 3.14
Batsmen R B 4s 6s SR
Kusal Perera c Jack Leach b Sam Curran 62 109 5 1 56.88
Lahiru Thirimanne c Jos Buttler b Sam Curran 111 251 12 0 44.22
Kusal Mendis c Jos Buttler b Jack Leach 15 65 1 0 23.08
Lasith Embuldeniya c Dominic Sibley b Dominic Bess 0 11 0 0 0.00
Angelo Mathews c & b Jack Leach 71 219 4 0 32.42
Dinesh Chandimal c Joe Root b Dominic Bess 20 28 3 0 71.43
Niroshan Dickwella c Jos Buttler b Dominic Bess 29 74 1 0 39.19
Dasun Shanaka b Jack Leach 4 5 0 0 80.00
Wanindu Hasaranga c Joe Root b Jack Leach 12 18 2 0 66.67
Dilruwan Perera st Jos Buttler b Jack Leach 24 38 5 0 63.16
Asitha Fernando not out 0 6 0 0 0.00


Extras 11 (b 7 , lb 1 , nb 3, w 0, pen 0)
Total 359/10 (136.5 Overs, RR: 2.62)
Bowling O M R W Econ
Stuart Broad 17 11 14 0 0.82
Sam Curran 11 1 37 2 3.36
Dominic Bess 33 4 100 3 3.03
Mark Wood 21 5 49 0 2.33
Jack Leach 41.5 6 122 5 2.94
Joe Root 11 1 19 0 1.73
Dan Lawrence 2 0 10 0 5.00


Batsmen R B 4s 6s SR
Zak Crawley c Kusal Mendis b Lasith Embuldeniya 8 21 1 0 38.10
Dominic Sibley b Lasith Embuldeniya 2 5 0 0 40.00
Jonathan Bairstow not out 35 62 2 0 56.45
Joe Root run out (Niroshan Dickwella) 1 3 0 0 33.33
Dan Lawrence not out 21 52 0 0 40.38


Extras 9 (b 0 , lb 9 , nb 0, w 0, pen 0)
Total 76/3 (24.2 Overs, RR: 3.12)
Bowling O M R W Econ
Lasith Embuldeniya 12 3 29 2 2.42
Dilruwan Perera 11.2 2 34 0 3.04
Wanindu Hasaranga 1 0 4 0 4.00



போட்டியின் ஐந்தாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<