சுற்றுலா இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று (16) நிறைவுக்கு வந்திருக்கின்றது.
இன்று போட்டியின் மூன்றாம் நாள் நிறைவில் துடுப்பாட்டம், பந்துவீச்சு என இரு துறைகளிலும் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்திய இலங்கை கிரிக்கெட் அணி இப்போட்டியில் தமக்கு ஏற்பட்ட சரிவில் இருந்து வெளிவர முயற்சி எடுக்கின்றது.
அஷ்வினால் 800 விக்கெட்டுகளை வீழ்த்த முடியும் – முரளிதரன்
காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நேற்று (15) நிறைவுக்கு வந்திருந்தது. இரண்டாம் நாள் நிறைவில் இலங்கை அணியின் முதல் இன்னிங்ஸை (135) அடுத்து தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடிய இங்கிலாந்து அணி 320 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்தது. களத்தில், ஜோ ரூட் 168 ஓட்டங்களுடனும், ஜோஸ் பட்லர் 7 ஓட்டங்களுடனும் காணப்பட்டிருந்தனர்.
இன்று போட்டியின் மூன்றாம் நாளில் இலங்கை வீரர்களை விட 185 ஓட்டங்கள் முன்னிலை பெற்றவாறு தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை தொடர்ந்த இங்கிலாந்து அணி தமது முன்னிலையினை அதிகரிக்க எதிர்பார்த்த போதும், அவர்களுக்கு புதிய பந்து மாற்றத்தோடு இலங்கையின் வேகப் பந்துவீச்சாளரான அசித்த பெர்னாண்டோ நெருக்கடியினை உருவாக்கினார். இதனால், ஜோஸ் பட்லர் இங்கிலாந்து அணி சார்பில் இன்றைய நாளில் பறிபோன முதல் விக்கெட்டாக மாறினார். பட்லர் ஆட்டமிழக்கும் போது 30 ஓட்டங்களை பெற்றிருந்தார்.
ஜோஸ் பட்லரினை அடுத்து புதிய வீரராக வந்த சம் கர்ரனும் ஓட்டம் எதனையும் பெறாமல் அசித்த பெர்னாண்டோவின் விக்கெட் வேட்டைக்கு இரையாகினார். பின்னர், இங்கிலாந்து அணியின் ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் இலங்கையின் சுழல் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள தடுமாறினர். மறுமுனையில், ஜோ ரூட் தனது நான்காவது இரட்டைச் சதத்தினைப் பதிவு செய்தார்.
இலங்கை அணிக்கு நெருக்கடி கொடுத்துவரும் இங்கிலாந்து!
முடிவில், 117.1 ஓவர்களுக்கு தமது அனைத்து விக்கெட்டுகளையும் மூன்றாம் நாளின் மதிய போசணத்திற்கு முன்னதாக பறிகொடுத்த இங்கிலாந்து அணி தமது முதல் இன்னிங்ஸிற்காக 421 ஓட்டங்களை எடுத்தது.
இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டம் சார்பில் ஜோ ரூட் 321 பந்துகளினை எதிர்கொண்டு 18 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 228 ஓட்டங்களை எடுத்திருந்தார்.
இலங்கை அணியின் பந்துவீச்சு சார்பில் டில்ருவான் பெரேரா 4 விக்கெட்டுகளையும், லசித் எம்புல்தெனிய 3 விக்கெட்டுகளையும், அசித்த பெர்னாண்டோ 2 விக்கெட்டுகளையும் சாய்த்திருந்தனர்.
பின்னர், இங்கிலாந்து வீரர்களை விட 286 ஓட்டங்கள் பின்தங்கியவாறு தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை இலங்கை அணி ஆரம்பம் செய்தது.
இலங்கை அணிக்கு ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக வந்த குசல் ஜனித் பெரேரா மற்றும் லஹிரு திரிமான்ன ஆகியோர் சிறந்த ஆரம்பத்தினை வழங்கினர். இதனால், மூன்றாம் நாளின் தேநீர் இடைவேளையினை இலங்கை கிரிக்கெட் அணி விக்கெட் எதனையும் பறிகொடுக்காது 90 ஓட்டங்களுடன் அடைந்தது.
ஒன்பது புதுமுக வீரர்களை அறிமுகம் செய்யும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி
பின்னர், போட்டியின் மூன்றாம் நாளின் மூன்றாம் இடைவெளியில் இலங்கை கிரிக்கெட் அணியின் முதல் விக்கெட்டாக குசல் ஜனித் பெரேரா மாறினார். குசல் ஜனித் பெரேரா ஆட்டமிழக்கும் போது தன்னுடைய 7ஆவது டெஸ்ட் அரைச்சதத்துடன் ஒரு சிக்ஸர் மற்றும் 5 பௌண்டரிகள் அடங்கலாக 62 ஓட்டங்களை எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து ஏனைய ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான லஹிரு திரிமான்னவும் அரைச்சதம் பெற, இலங்கை அணி போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வரும் போது தமது இரண்டாம் இன்னிங்ஸில் 156 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து காணப்படுகின்றது.
அதேநேரம், தற்போது இங்கிலாந்தினை விட 130 ஓட்டங்கள் பின்தங்கி காணப்படும் இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பில், லஹிரு திரிமான்ன 76 ஓட்டங்களுடனும், லசித் எம்புல்தெனிய ஓட்டமேதுமின்றியும் களத்தில் நிற்கின்றனர்.
இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு சார்பில் ஜேக் லீச் மற்றும் சம் கர்ரன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.
போட்டியின் சுருக்கம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Dimuth Karunarathne | c Quinton de Kock b Anrich Nortje | 2 | 32 | 0 | 0 | 6.25 |
Kusal Perera | c Aiden Markram b Wiaan Mulder | 60 | 67 | 11 | 0 | 89.55 |
Lahiru Thirimanne | c Faf du Plessis b Wiaan Mulder | 17 | 30 | 3 | 0 | 56.67 |
Kusal Mendis | c Rassie van der Dussen b Wiaan Mulder | 0 | 4 | 0 | 0 | 0.00 |
Minod Bhanuka | c Rassie van der Dussen b Anrich Nortje | 5 | 10 | 1 | 0 | 50.00 |
Niroshan Dickwella | c Quinton de Kock b Anrich Nortje | 7 | 10 | 1 | 0 | 70.00 |
Dasun Shanaka | c Quinton de Kock b Anrich Nortje | 4 | 17 | 0 | 0 | 23.53 |
Wanindu Hasaranga | c Quinton de Kock b Lutho Sipamla | 29 | 27 | 5 | 0 | 107.41 |
Dushmantha Chameera | c Quinton de Kock b Anrich Nortje | 22 | 29 | 4 | 0 | 75.86 |
Vishwa Fernando | not out | 2 | 11 | 0 | 0 | 18.18 |
Asitha Fernando | b Anrich Nortje | 4 | 6 | 1 | 0 | 66.67 |
Extras | 5 (b 0 , lb 5 , nb 0, w 0, pen 0) |
Total | 157/10 (40.3 Overs, RR: 3.88) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Lungi Ngidi | 10 | 3 | 44 | 0 | 4.40 | |
Anrich Nortje | 14.3 | 1 | 56 | 6 | 3.92 | |
Lutho Sipamla | 9 | 3 | 27 | 1 | 3.00 | |
Wiaan Mulder | 7 | 3 | 25 | 3 | 3.57 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Dean Elgar | c Lahiru Thirimanne b Dushmantha Chameera | 127 | 163 | 22 | 0 | 77.91 |
Aiden Markram | c Kusal Mendis b Asitha Fernando | 5 | 21 | 0 | 0 | 23.81 |
Rassie van der Dussen | c Niroshan Dickwella b Dasun Shanaka | 67 | 127 | 12 | 0 | 52.76 |
Quinton de Kock | c Kusal Mendis b Vishwa Fernando | 10 | 20 | 1 | 0 | 50.00 |
Faf du Plessis | c Niroshan Dickwella b Dasun Shanaka | 8 | 15 | 1 | 0 | 53.33 |
Temba Bavuma | lbw b Vishwa Fernando | 19 | 30 | 3 | 1 | 63.33 |
Wiaan Mulder | lbw b Vishwa Fernando | 7 | 17 | 1 | 0 | 41.18 |
Keshav Maharaj | c Niroshan Dickwella b Asitha Fernando | 2 | 8 | 0 | 0 | 25.00 |
Anrich Nortje | c Kusal Mendis b Vishwa Fernando | 13 | 16 | 2 | 0 | 81.25 |
Lutho Sipamla | c Dasun Shanaka b Vishwa Fernando | 5 | 19 | 1 | 0 | 26.32 |
Lungi Ngidi | not out | 14 | 18 | 3 | 0 | 77.78 |
Extras | 25 (b 8 , lb 14 , nb 0, w 3, pen 0) |
Total | 302/10 (75.4 Overs, RR: 3.99) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Vishwa Fernando | 23.4 | 0 | 101 | 5 | 4.32 | |
Asitha Fernando | 19 | 5 | 61 | 2 | 3.21 | |
Dushmantha Chameera | 14 | 1 | 53 | 1 | 3.79 | |
Dasun Shanaka | 15 | 4 | 42 | 2 | 2.80 | |
Wanindu Hasaranga | 4 | 0 | 23 | 0 | 5.75 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Dimuth Karunarathne | c Wiaan Mulder b Anrich Nortje | 103 | 128 | 19 | 0 | 80.47 |
Kusal Perera | b Lungi Ngidi | 1 | 7 | 0 | 0 | 14.29 |
Lahiru Thirimanne | c Quinton de Kock b Lungi Ngidi | 31 | 57 | 7 | 0 | 54.39 |
Kusal Mendis | c Quinton de Kock b Lungi Ngidi | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Minod Bhanuka | c Keshav Maharaj b Anrich Nortje | 1 | 7 | 0 | 0 | 14.29 |
Niroshan Dickwella | c Temba Bavuma b Lungi Ngidi | 36 | 68 | 6 | 0 | 52.94 |
Dasun Shanaka | c Lutho Sipamla b Wiaan Mulder | 8 | 24 | 1 | 0 | 33.33 |
Wanindu Hasaranga | b Lutho Sipamla | 16 | 32 | 2 | 0 | 50.00 |
Dushmantha Chameera | c Quinton de Kock b Lutho Sipamla | 0 | 10 | 0 | 0 | 0.00 |
Vishwa Fernando | not out | 1 | 7 | 0 | 0 | 14.29 |
Asitha Fernando | b Lutho Sipamla | 0 | 2 | 0 | 0 | 0.00 |
Extras | 14 (b 9 , lb 2 , nb 2, w 1, pen 0) |
Total | 211/10 (56.5 Overs, RR: 3.71) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Lungi Ngidi | 15 | 5 | 44 | 4 | 2.93 | |
Anrich Nortje | 19 | 2 | 64 | 2 | 3.37 | |
Wiaan Mulder | 13 | 3 | 52 | 1 | 4.00 | |
Lutho Sipamla | 9.5 | 1 | 39 | 3 | 4.11 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Dean Elgar | not out | 31 | 27 | 5 | 0 | 114.81 |
Aiden Markram | not out | 36 | 53 | 4 | 0 | 67.92 |
Extras | 0 (b 0 , lb 0 , nb 0, w 0, pen 0) |
Total | 67/0 (13.2 Overs, RR: 5.03) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Vishwa Fernando | 4 | 0 | 23 | 0 | 5.75 | |
Asitha Fernando | 4 | 1 | 20 | 0 | 5.00 | |
Wanindu Hasaranga | 2.2 | 0 | 16 | 0 | 7.27 | |
Dasun Shanaka | 3 | 1 | 8 | 0 | 2.67 |
போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் நாளை தொடரும்.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<