இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது இந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் முதலாம் வாரம் இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்வதன் மூலம் ஐந்து ஒரு நாள் போட்டிகள், மூன்று டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஒரு T-20 போட்டி கொண்ட தொடர்களில் (இலங்கை அணியுடன்) விளையாடவுள்ளது.
[rev_slider LOLC]
சுதந்திரக் கிண்ணத்திற்கான பங்களாதேஷ் அணியில் இணையும் சகீப்
பங்களாதேஷ் டெஸ்ட் மற்றும் T20…
இங்கிலாந்து அணி தமது சுற்றுப் பயணத்தில் முதற்கட்டமாக இலங்கையுடன் ஐந்து ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகின்றது. இத்தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் தம்புள்ளையில் இடம்பெற ஏற்பாடாகியிருப்பதோடு அடுத்த இரண்டு போட்டிகளும் கண்டியில் நடைபெறவுள்ளன. இதனைத் தொடர்ந்து ஒரு நாள் தொடரின் இறுதிப் போட்டியிலும் ஒரேயொரு T-20 போட்டியிலும் விளையாட இரண்டு அணிகளும் கொழும்புக்கு பயணமாகின்றன.
பின்னர், மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் காலி, கண்டி மற்றும் கொழும்பு ஆகிய நகரங்களில் நடைபெறவிருக்கின்றன. இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் மாதம் 6 ஆம் திகதியும், இரண்டாவது போட்டி நவம்பர் 14 ஆம் திகதியும், மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி நவம்பர் மாதம் 23 ஆம் திகதியும் இடம்பெறும்.
கடந்த காலங்களில் இலங்கை அணிக்கெதிராக அவ்வளவு சிறப்பான பதிவுகளை கொண்டிருக்காத இங்கிலாந்து அணியினர் அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலும் இப்போது சிறப்பாக விளையாடிவருவதன் காரணமாக, நடைபெறப்போகும் தொடர்களில் இலங்கை அணிக்கு மிகவும் சவாலாக காணப்படுவர் என நம்பப்படுகிறது.
இதுவரை இலங்கையில் 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கும் இங்கிலாந்து அணியினர் ஐந்து போட்டிகளில் தோல்வியினை சந்தித்திருப்பதோடு, நான்கு போட்டிகளில் மாத்திரமே வெற்றியினைச் சுவைத்திருக்கின்றனர். ஏனைய நான்கு போட்டிகள் சமநிலை அடைந்திருக்கின்றன.
ஐ.சி.சியின் விதிமுறைகளை தொடர்ச்சியாக மீறிவரும் இலங்கை அணி
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC)…
இறுதியாக 2012 ஆம் இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த இங்கிலாந்து அணியினர் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியிருந்தனர். இத்தொடரின் இரண்டு போட்டிகளும் சமநிலையில் நிறைவுற்றிருந்தன.
டெஸ்ட் போட்டிகள் தவிர இங்கிலாந்து அணி ஒரு நாள் போட்டிகளிலும் இலங்கையில் நல்ல பதிவுகளை வைத்திருக்கவில்லை. இலங்கையில் 21 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியிருக்கும் அவர்கள் அதில் 15 தோல்விகளை சந்தித்திருக்கின்றனர்.
இறுதியாக 2014 ஆம் ஆண்டு, 7 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாட இலங்கை வந்திருந்த இங்கிலாந்து அணி குறித்த தொடரினை 5-2 என மைதான சொந்தக்காரர்களிடம் பறிகொடுத்திருந்தனர்.
இங்கிலாந்தின் இலங்கை சுற்றுத் தொடருக்கான அட்டவணை
திகதி | போட்டி | இடம் |
ஒக்டோபர் 10 | முதலாவது ஒரு நாள் போட்டி | ரங்கிரி தம்புள்ளை மைதானம், தம்புள்ளை |
ஒக்டோபர் 13 | இரண்டாவது ஒரு நாள் போட்டி (பகல் ஆட்டம்) | ரங்கிரி தம்புள்ளை மைதானம், தம்புள்ளை |
ஒக்டோபர் 17 | மூன்றாவது ஒரு நாள் போட்டி (பகலிரவு ஆட்டம்) | பல்லேகல மைதானம், கண்டி |
ஒக்டோபர் 20 | நான்காவது ஒரு நாள் போட்டி (பகல் ஆட்டம்) | பல்லேகல மைதானம், கண்டி |
ஒக்டோபர் 23 | ஐந்தாவது ஒரு நாள் போட்டி (பகலிரவு ஆட்டம்) | ஆர். பிரேமதாச மைதானம், கொழும்பு |
ஒக்டோபர் 27 | ஒரேயொரு T-20 போட்டி (பகலிரவு ஆட்டம்) | ஆர். பிரேமதாச மைதானம், கொழும்பு |
நவம்பர் 6 தொடக்கம் 10 வரை | முதலாவது டெஸ்ட் போட்டி | காலி சர்வதேச மைதானம் |
நவம்பர் 14 தொடக்கம் 18 வரை | இரண்டாவது டெஸ்ட் போட்டி | பல்லேகல மைதானம், கண்டி |
நவம்பர் 23 தொடக்கம் 27 வரை | மூன்றாவது டெஸ்ட் போட்டி | SSC மைதானம், கொழும்பு |