நியூஸிலாந்து அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் சுப்பர் ஓவரில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 5 போட்டிகளைக் கொண்ட டி20 தொடரை 3க்கு 2 என கைப்பற்றியது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி, ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்காக நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதற்கு முன்னோடியாக இங்கிலாந்து கிரிக்கெட் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது.
முதலாவது மற்றும் 4ஆவது டி20 போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதுடன், 2ஆவது மற்றும் 3ஆவது போட்டிகளில் நியூஸிலாந்து அணி வெற்றியீட்டியது.
இந்த நிலையில், ஆக்லாந்தில் இன்று (10) நடைபெற்ற, தொடர் வெற்றியை தீர்மானிக்கின்ற ஐந்தாவது டி20 போட்டி மழை காரணமாக தாமதமாக ஆரம்பிக்கப்பட்டது. இதையடுத்து, நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.
எனினும், போட்டி ஆரம்பமாவதற்கு முன் மீண்டும் மழை குறுக்கிட்டதால் போட்டியை 11 ஓவர்களாக மட்டுப்பத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஏற்கனவே நடைபெற்ற நான்கு டி20 ஆட்டங்களிலும்எ நியூஸிலாந்து அணியில் எதிர்பர்ர்த்தளவு பிரகாசிக்காத மார்டின் கப்டில் இந்த ஆட்டத்தில் வெளுத்து வாங்கினார். அதிரடியாக ஆடிய கப்டில் 19 பந்துகளில் 50 ஓட்டங்களை (5 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள்) எடுத்து ஆட்டமிழந்தார்.
மாலனின் அதிரடி சததத்தால் நியூஸிலாந்தை பந்தாடியது இங்கிலாந்து
நியூஸிலாந்து அணிக்கெதிரான நான்காவது டி20 போட்டியில் டேவிட் மாலனின் அதிரடி சதம்..
இம்முறை உலகக் கிண்ணத்தில் சோபிக்கத் தவறிய கப்டில், சர்வதேசப் போட்டியொன்றில் பெற்றுக்கொண்ட முதலாவது அரைச் சதமாக இது பதிவாகியது.
அடுத்து வந்த கிராண்ட்ஹோம் 6 ஓட்டங்களுடன் ஏமாற்றம் கொடுத்தாலும், அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை திக்குமுக்காடச் செய்த கொலின் முன்ரோ 21 பந்துகளில் 46 ஓட்டங்களைக் (4 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள்) குவித்து ஆட்டமிழந்தார்.
இதன்போது நியூஸிலாந்து அணி 120 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து வலுவான நிலையை அடைந்தது. எனினும், கொலின் முன்ரோயுவுடன் இணைந்து அபாரமாக விளையாடிய டிம் சீபெர்ட் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்தார்.
எதிரணியின் பந்துகளை சிக்ஸருக்கும், பவுண்டரிக்கும் பறக்கவிட்ட அவர் நியூசிலாந்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை வேகமாக உயர்த்தினார்.
16 பந்துகளில் 5 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் 39 ஓட்டங்களை எடுத்த டிம் சீபெர்ட், டொம் கரனின் பந்தில் போல்ட் ஆகி வெளியேறினார்.
இறுதியில், 11 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு நியூஸிலாந்து அணி 146 ஓட்டங்களைக் குவித்தது. இங்கிலாந்து தரப்பில் டொம் கரன், சேம் கரன், ஆடில் ரஷித் மற்றும் சகீப் மஹ்மூத் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் வீழ்த்தினர்.
பின்னர், 147 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி தொடக்கத்தில் இருந்தே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து வந்தது.
ட்ரென்ட் போல்ட் வீசிய முதல் ஓவரிலேயே டொம் பென்டன் 7 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த ஜேம்ஸ் வின்ஸ் ஒரு ஓட்டத்துடன் டிம் சவுத்தியின் பந்தில் குக்கெலிஜின்னிடம் பிடிகொடுத்து வெளியேறினார். இதனால் 9 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து அணி தடுமாறியது.
அடுத்து வந்த அதிரடி ஆட்டக்காரரும், அணித் தலைவருமான ஒயின் மோர்கன் 17 ஓட்டங்களை மாத்திரம் எடுத்த நிலையில் வெளியேறியது மிகப்பெரிய இழப்பாக இங்கிலாந்துக்கு அமைந்தது.
எனினும், 4ஆவது விக்கெட்டுக்கு பேயர்ஸ்டோ, சேம் கரன் இருவரும் அதிரடியில் இறங்கி ஓட்டங்களைக் குவித்தனர். 5 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் உட்பட 47 ஓட்டங்களை எடுத்த பேயர்;ஸ்டோ, ஜிம்மி நீஷமின் பந்துவீச்சில் டிம் சீபெர்ட்டிடம் பிடிnகொடுத்து வெளியேறிய, 11 பந்துகளில் 24 ஓட்டங்களைக் குவித்த சேம் கரன் சான்;ட்னரின் பந்துவீச்சில் ஆட்மிழந்தார்.
மிட்செல் சான்;ட்னர் வீசிய அதே ஓவரில் அடுத்துவந்த லிவிஸ் கிரிகெரி 6 ஓட்டங்களை எடுத்து ஏமாற்றம் கொடுத்தார்.
அடுத்து சேம் பில்லிங்ஸடன் டொம் கரன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நியூசிலாந்தின் பந்துவீச்சை நிதானமாக எதிர்கொண்டு ஓட்டங்களைக் குவிக்க அந்த அணி வெற்றியிலக்கை நெருங்கியது.
போட்டியின் இறுதி ஓவரின் 3ஆவது பந்தில் இ;ங்கிலாந்து அணியின் ஓட்ட எண்ணிக்கை 134 ஓட்டங்களாக இருந்தபோது டொம் கரன் 12 ஓட்டங்களை எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
எனினும், அடுத்து வந்த கிறிஸ் ஜோர்டன் இறுதி ஓவரின் 4ஆவது பந்தை சிக்ஸருக்கு விரட்டி, 5ஆவது பந்தில் 2 ஓட்டங்களை எடுத்தார். இறுதிப் பந்தில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 5 ஓட்டங்கள் தேவைப்பட்டது. அந்தப் பந்தில் கிறிஸ் ஜோர்டன் பவுண்டரி அடிக்க இங்கிலாந்து அணி 146 ஓட்டங்களை எடுத்து நியூஸிலாந்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை சமன் செய்தது.
நியூஸிலாந்து அணியின் பந்துவீச்சில் மிட்செல் சான்ட்னர், ஜிம்மி நீஷம் மற்றும் ட்ரென்ட் போல்ட் ஆகியோர் தலா 2 விக்கெட் வீதம் கைப்பற்றியிருந்தனர்.
இதன்படி, ஓட்ட எண்ணிக்கை சமநிலையில் முடிந்ததால் எந்த அணி வெற்றி பெறும் என்பதை தீர்மானிக்கும் சுப்பர் ஓவர் வழங்கப்பட்டது.
சுப்பர் ஓவரில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி ஆட்டமிழப்பின்றி 17 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
சகலதுறையிலும் பிரகாசித்த மேற்கிந்திய தீவுகள் அணிக்கு ஒருநாள் தொடர் வெற்றி
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக லக்னோவில் நடைபெற்ற இரண்டாவது ..
18 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி ஒரு விக்கெட்டினை இழந்து 8 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. இதனால் 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இ;ங்கிலாந்து அணி வெற்றிபெற்றது.
முன்னதாக கடந்த ஜுலை மாதம் நடைபெற்ற 50 ஓவர்கள் உலகக் கிண்ணத்தின் இறுதிப் போட்டியில் இவ்விரு அணிகளும் மோதியிருந்ததுடன், போட்டியானது சமநிலையில் முடிய சுப்பர் ஓவருக்கு சென்றது.
ஆனாலும், சுப்பர் ஓவரும் சமநிலையில் முடிந்ததால், சுப்பர் ஓவருக்கான விதிமுறைகளின்படி இங்கிலாந்து அணி சம்பியனாகத் தெரிவாகியது.
அதேபோல, உலகக் கிண்ணப் போட்டிகளுக்குப் பிறகு முதல்முறையாக நியூஸிலாந்து வந்த இங்கிலாந்து அணி, அவ்வணியுடன் இன்று நடைபெற்ற தீர்மானமிக்க இறுதி டி20 போட்டியை இறுதிப் பந்தில் சமநிலை செய்தது.
எனினும், அதன்பிறகு நடைபெற்ற சுப்பர் ஓவரில் துடுப்பாட்டத்தில் அபாரமாக விளையாடி, பந்துவீச்சில் அசத்திய இங்கிலாந்து அணி, மீண்டும் நியூஸிலாந்து அணியை வெற்றி கொண்டு சம்பியனாகத் தெரிவாகியது.
இதன்மூலம் இம்முறை உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் அடைந்த தோல்விக்கு சொந்த மண்ணில் வைத்து பாடம் புகட்டத் தவறிய நியூஸிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3க்கு 1 என பறிகொடுத்தது.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக இங்கிலாந்து அணியின் ஜோனி பேயர்ஸ்டோவும், தொடரின் ஆட்டநாயகனாக நியூஸிலாந்து அணியின் மிட்செல் சான்ட்னரும் தெரிவுசெய்யப்பட்டனர்.
இந்த நிலையில், ஐ.சி.சியின் டெஸ்ட் சம்பியன்ஷpப்பின் கீழ் இவ்விரு அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ள 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி தவுரங்காவில் நடைபெறவுள்ளது.
போட்டியின் சுருக்கம்
நியூஸிலாந்து அணி – 146/5 (11) மார்டின் கப்டில் 50, கொலின் முன்ரோ 46, டிம் சீபெர்ட் 39, சகீப் மஹ்மூத் 1/20, டொம் கரன் 1/30
இங்கிலாந்து அணி – 146/7 (11) ஜோனி பேயர்ஸ்டோ 47, டொம் கரன் 24, மிட்செல் சான்ட்னர் 2/20, ஜம்மி நீஷம் 2/25, ட்ரென்ட் போல்ட் 2/35
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<