இலங்கை வரும் இங்கிலாந்து அணி வீரர்களுக்கு கொரோனா இல்லை

261
England Test team

இலங்கை அணியுடனான சுற்றுப்பயணத்தில் விளையாடவுள்ள இங்கிலாந்து டெஸ்ட் குழாமினருக்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் எவருக்கும் கொவிட் – 19 தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த வருடம் மார்ச் மாதம் இலங்கை வந்த இங்கிலாந்து அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருந்தது. ஆனால் கொவிட் – 19 வைரஸ் பரவல் காரணமாக கொழும்பில் நடைபெற்ற பயிற்சிப் போட்டியை பாதியில் நிறுத்திகொண்டு இங்கிலாந்து திரும்பினர்.

இதனையடுத்து, ஒத்திவைக்கப்பட்ட குறித்த தொடரை மீண்டும் நடத்த இங்கிலாந்து, இலங்கை கிரிக்கெட் சபைகள் முடிவு செய்தன

இதன்படி, .சி.சி இன் டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் கீழ் நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானாது காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் எதிர்வரும் ஜனவரி மாதம் 14ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

>> இலங்கை – இங்கிலாந்து டெஸ்ட் தொடர் திட்டமிட்டப்படி நடக்கும் – SLC

இந்த நிலையில், இலங்கை புறப்படுவதற்கு இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்கள் கடந்த 30ஆம் திகதி மேற்கொண்ட PCR பரிசோதனையில், எவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து இங்கிலாந்து அணியினர் திட்டமிட்டபடி இன்று இலங்கையை வந்தடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது

எனவே, இலங்கை வரும் இங்கிலாந்து அணி ஹம்பாந்தோட்டையில் 10 நாட்கள் உயிர் பாதுகாப்பு வளையத்திற்குள் பயிற்சி மேற்கொள்ள உள்ளனர். அதன்பின், போட்டி நடைபெறவுள்ள காலி மைதானத்தை வந்தடையவுள்ளனர்.

இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி, எதிர்வரும் 14ஆம் திகதி காலி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<