மே.தீவுகளுக்கு எதிரான இங்கிலாந்து டெஸ்ட், ஒரு நாள் குழாம் அறிவிப்பு

310
Image - NDTV sports, Twitter

மேற்கிந்திய தீவுகளுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்து அந்நாட்டு அணியுடன் மோதவுள்ள டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளுக்கான இங்கிலாந்து குழாத்தினை இங்கிலாந்து கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.

இங்கிலாந்து அணி மேற்கிந்திய தீவுகளுக்கு நீண்ட நாள் சுற்றுப்பயணம் ஒன்றினை மேற்கொண்டு அங்கு மேற்கிந்திய தீவுகள் அணியுடன் 3 டெஸ்ட், 5 ஒரு நாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர்களில் ஆடவுள்ளது.

இங்கிலாந்துடன் மோதும் மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் குழாம் அறிவிப்பு

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள …

கடந்த இறுதி சுற்றுப்பயணத்தின் போது இலங்கை அணியை இலங்கை மண்ணிலேயே வைத்து வெள்ளையடிப்பு செய்த இங்கிலாந்து அணி இரண்டு மாற்றங்களுடன் மாத்திரம் மேற்கிந்திய தீவுகள் அணியை டெஸ்ட் போட்டிகளில் எதிர்த்தாடவுள்ளது. அந்த இரண்டு மாற்றங்களுக்கும் இரண்டு புதுமுக வீரர்கள் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இலங்கையுடனான ஒரு நாள் தொடரின் போது சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் பெற்ற ஒல்லி ஸ்டோன் மற்றும் 2009ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் அறிமுகம் பெற்ற ஜோ டென்லி ஆகியோர் கன்னி டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கான சந்தர்ப்பத்தை பெற்றுள்ளனர்.

இலங்கை அணியுடனான போட்டியின் போது உபாதைக்குள்ளாகிய விக்கெட் காப்பாளர் ஜொனி பெயர்ஸ்டோ 3 டெஸ்ட் போட்டிகளுக்குமான 16 பேர் கொண்ட குழாமில் இடம்பெற்றுள்ளார்.

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பிட்கொயின் விளம்பரம்

கிரிக்கெட் விளையாட்டில் விளையாடுகின்ற ஒவ்வொரு அணிகள் …

ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து டெஸ்ட் குழாம்

மொயின் அலி, ஜேம்ஸ் அண்டர்சன், ஸ்டுவர் பிரோட், ரொரி ப்ரூன்ஸ், ஜோஸ் பட்லர், சாம் கரன், ஜோ டென்லி, பென் போக்ஸ், கியடொன் ஜீனிங்ஸ், ஜெக் லீச், ஆதில் ரஷீட், பென் ஸ்டெக்ஸ், ஒல்லி ஸ்டோன், கிரிஸ் வோக்ஸ், ஜொனி பெயர்ஸ்டோ

இங்கிலாந்து – மேற்.தீவுகள் இடையிலான டெஸ்ட் தொடர் அட்டவணை

  • ஜனவரி 23 – முதலாவது டெஸ்ட் போட்டி (பார்படோஸ்)
  • ஜனவரி 31 – இரண்டாவது டெஸ்ட் போட்டி (அண்டியுகா)
  • பெப்ரவரி 09 – மூன்றாவது டெஸ்ட் போட்டி (சென் லூசியா)

அத்துடன் இங்கிலாந்து அணி, சுற்றுப்பயணத்தின் அடுத்த தொடரான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடருக்கான 15 பேர் கொண்ட குழாத்தினை முற்கூட்டியே வெளியிட்டுள்ளது.

கடந்த சுற்றுப் பயணத்தில் இலங்கை அணியுடனான தொடரை 3-1 எனுமடிப்படையில் கைப்பற்றிய இங்கிலாந்து அணியில் தற்போது 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

சகலதுறை வீரர்களான சாம் கரன், லியம் டௌசன் மற்றும் வேகப்பந்து வீச்சாளரான ஒல்லி ஸ்டோன் ஆகியோர் மேற்கிந்திய தீவுகள் அணியுடனான ஒரு நாள் தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ள அதேவேளை, கரன் சகோதரர்களில் ஒருவரான டொம் கரன் மற்றும் டேவிட் வில்லி ஆகியோர் ஒரு நாள் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் டெஸ்ட் போட்டிக்கான குழாத்திலிருந்து விலக்கப்பட்ட ஜேசன் ரோய் ஒரு நாள் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் சென்று விளையாடவுள்ள ஏபி.டி.வில்லியர்ஸ்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் பாகிஸ்தானில்….

இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து ஒரு நாள் குழாம்

மொயின் அலி, ஜொனி பெயர்ஸ்டோ, ஜோஸ் பட்லர், டொம் கரன், ஜோ டென்லி, அலெக்ஸ் ஹெய்ல்ஸ், லியம் பிளன்கட், ஆதில் ரஷீட், ஜோ ரூட், ஜெசன் ரோய், பென் போக்ஸ், டேவிட் வில்லி, கிறிஸ் வோர்க்ஸ், மார்க் வூட்

இங்கிலாந்து – மே. தீவுகள் இடையிலான ஒரு நாள் தொடர் அட்டவணை

  • பெப்ரவரி 20 – முதலாவது ஒரு நாள் சர்வதேச போட்டி (பார்படோஸ்)
  • பெப்ரவரி 22 – இரண்டாது ஒரு நாள் சர்வதேச போட்டி (பார்படோஸ்)
  • பெப்ரவரி 25 – மூன்றாவது ஒரு நாள் சர்வதேச போட்டி (கிறேனடா)
  • பெப்ரவரி 27 – நான்காவது ஒரு நாள் சர்வதேச போட்டி (கிறேனடா)
  • மார்ச் 02 – ஐந்தாவது ஒரு நாள் சர்வதேச போட்டி (சென் லூசியா)

இங்கிலாந்து – மே. தீவுகள் இடையிலான டி20 தொடரின் அட்டவணை

  • மார்ச் 05 – முதலாவது டி20 சர்வதேச போட்டி (சென் லூசியா)
  • மார்ச் 09 – இரண்டாவது டி20 சர்வதேச போட்டி (சென் கைட்ஸ்)
  • மார்ச் 11  – மூன்றாவது டி20 சர்வதேச போட்டி (சென் கைட்ஸ்)

இங்கிலாந்து அணிக்கும் மேற்கிந்திய தீவுகள் தலைவர் பதினொருவர் அணிக்குமிடையிலான இரண்டு நாட்கள் கொண்ட பயிற்சிப்போட்டி நேற்று (15) ஆரம்பமாகி தற்சமயம் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 >>காணொளிகளைப் பார்வையிட <<