மஹேலவின் அணியில் விளையாடவுள்ள ஜொப்ரா ஆர்ச்சர்

145
©GETTY IMAGES

இங்கிலாந்து கிரிக்கெட் சபை (ECB) அடுத்த ஆண்டு நடாத்தவுள்ள அணிக்கு 100 பந்துகள் கொண்ட ”த ஹன்ரட்” கிரிக்கெட் தொடரில் பங்கெடுக்கும் கிரிக்கெட் அணிகளின் விபரம், அந்த அணிகளில் விளையாடவுள்ள இங்கிலாந்து நட்சத்திர வீரர்களின் விபரம் என்பன வெளியிடப்பட்டுள்ளது.  

“த ஹன்ரட்” கிரிக்கெட் வீரர்கள் ஏலத்தில் லசித் மாலிங்க

அடுத்த ஆண்டின் (2020) நடுப்பகுதியில் ……….

”த ஹன்ரட்” கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்தின் ஏழு உள்ளூர் பிராந்தியங்களை சேர்ந்த எட்டு அணிகள் பங்குபெறவிருப்பதோடு, எட்டு அணிகளில் இரண்டு இலண்டன் பிராந்தியத்தை சேர்ந்தவையாக இருக்கின்றன. 

இதில், லீட்ஸ் பிராந்தியத்தை சேர்ந்த நோதர்ன் சுபர்சார்ஜர்ஸ் அணிக்காக கிரிக்கெட் உலகக் கிண்ண நாயகன் பென் ஸ்டோக்ஸ் விளையாடவுள்ளதோடு, இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைவர் ஜோ ரூட் நோட்டிங்கம் பிராந்தியத்தை சேர்ந்த ட்ரென்ட் ரொக்கட்ஸ் அணிக்காக ஆடவுள்ளார். 

அதேநேரம், இளம் வேகப் பந்துவீச்சாளரான ஜொப்ரா ஆர்ச்சர், சௌத்தம்ப்டன் பிராந்தியத்தை சேர்ந்த சௌத்தெர்ன் பிரேவ் அணிக்காக ஆடவிருக்கின்றார். சௌத்தர்ன் பிரேவ் (ஆடவர்) அணியின் தலைமை பயிற்சியாளராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான மஹேல ஜயவர்தன செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

இதேவேளை, அனுபவம் கொண்ட சகலதுறை வீரர்களில் ஒருவரான மொயின் அலி, பர்மிங்கம் பிராந்தியத்தினை சேர்ந்த பர்மிங்கம் பீனிக்ஸ் அணிக்காக விளையாடவிருக்கின்றார். 

MCC இன் தலைவராக பொறுப்பேற்ற குமார் சங்கக்கார

கிரிக்கெட் விளையாட்டு இனம்கண்ட …….

இங்கிலாந்தின் ஒருநாள் அணித்தலைவரான இயன் மோர்கன் லண்டன் பிராந்தியத்தை சேர்ந்த அணிகளின் ஒன்றான லண்டன் ஸ்பிரிட்டுக்காக விளையாடவுள்ளதோடு, லண்டன் பிராந்தியத்தை சேர்ந்த மற்றைய அணிக்காக அதிரடி துடுப்பாட்டவீரர் ஜேசன் ரோய் ஆடவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

மன்செஸ்டர் பிராந்தியத்தை சேர்ந்த மன்செஸ்டர் ஒரிஜினல் அணிக்கு விளையாடும் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரராக மத்தியவரிசை அதிரடி துடுப்பாட்டவீரர் ஜோஸ் பட்லர் இருப்பதோடு, கார்டிப் பிராந்தியத்தை சேர்ந்த வேல்ஸ் பையர் அணியின் நட்சத்திர வீரராக ஜொன்னி பெயர்ஸ்டோவ் காணப்படுகின்றார். 

”த ஹன்ரட்” தொடரில் விளையாடவுள்ள ஏனைய வீரர்களை தெரிவு செய்வதற்கான வீரர்கள் ஏலம் இம்மாதம் 20ஆம் திகதி நடைபெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த வீரர்கள் ஏலத்தில் இலங்கை அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளரான லசித் மாலிங்க, மேற்கிந்திய தீவுகள் அணியின் கிறிஸ் கெயில், அவுஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் போன்றோர் பங்கெடுக்க விருப்பம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க <<