இலங்கை இங்கிலாந்து அணிகள் மோதிய 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர் நேற்று முடிவுக்கு வந்தது. இந்தத் தொடரை இங்கிலாந்து 2 -0 என்ற ரீதியில் வெற்றிகொண்டது.
இந்நிலையில் இலங்கை இங்கிலாந்து அணிகள் மோதும் 5 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடர் எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. அத்தோடு இவ்விரு அணிகளுக்கும் இடையில் ஒரு டி20 போட்டி ஜூலை மாதம் 5ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்தப் போட்டிகளில் விளையாடும் இங்கிலாந்து அணி விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
3ஆவது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவு
இந்த தொடரில் விளையாடும் இங்கிலாந்து அணியில் கவுண்டி அணியான சசெக்ஸ் அணியின் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் டைமல் மில்ஸ் மற்றும் மிட்ல்செக்ஸ் அணியின் துடுப்பாட்ட வீரர் டாவிட் மலன் ஆகியோருக்கு டி20 அணியில் இடம் வழங்கப்பட்டுள்ளது. டெஸ்ட் தொடரில் பிரகாசித்த ஜொனி பெயர்ஸ்டோவிற்கு ஒருநாள் மற்றும் டி20 அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதோடு டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாகப் பந்து வீசிய ஸ்டுவர்ட் ப்ரோடிற்கு அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இங்கிலாந்து ஒருநாள் குழாம்
இயோன் மோர்கன் (தலைவர்), மொயின் அலி, ஜொனி பேர்ஸ்டோவ், ஜோஸ் பட்லர், ஸ்டீவன் ஃபின், கிறிஸ் ஜோர்டான், அலெக்ஸ் ஹேல்ஸ், லியாம் பிளங்கெட், அடில் ரஷீத், ஜோ ரூட், ஜேசன் ரோய், ஜேம்ஸ் வின்சென்ட், டேவிட் வில்லி, கிறிஸ் வோக்ஸ்
இங்கிலாந்து டி குழாம்
இயோன் மோர்கன் (தலைவர்), ஜொனி பேர்ஸ்டோவ, சாம் பைலிங்ஸ், ஜோஸ் பட்லர், லியாம் டொவ்சன், கிறிஸ் ஜோர்டான், டாவிட் மலன், டைமல் மில்ஸ், லியாம் பிளங்கெட், அடில் ரஷீத், ஜேசன் ரோய், ஜேம்ஸ் வின்ஸ், டேவிட் வில்லி
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்