சர்வதேச கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள புதிய ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் இங்கிலாந்து அணி இரண்டாவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் முடிவடைந்த நிலையில், புதிய தரவரிசையை ஐசிசி வெளியிட்டுள்ளது.
நியூசிலாந்து கிரிக்கெட் ஒப்பந்தத்திலிருந்து விலகிய மார்டின் கப்டில்
புதிய தரவரிசையின் படி அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக 3-0 என ஒருநாள் தொடரை இழந்த இங்கிலாந்து அணி முதல் இடத்திலிருந்து இரண்டாவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக T20 உலகக்கிண்ண சம்பியன்களான இங்கிலாந்து அணி கிண்ணம் வென்று 10 நாட்களுக்குள் வைட்வொஷ் தோல்வியுடன், ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தையும் இழந்துள்ளது.
அவுஸ்திரேலியா தொடர் ஆரம்பிக்கும் போது 119 புள்ளிகளுடன் முதலிடத்திலிருந்த இங்கிலாந்து அணி, மோசமான தோல்விகள் காரணமாக 113 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளதுடன், நியூசிலாந்து அணி 114 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துக்கொண்டது.
அதேநேரம் தொடரை வெற்றிக்கொண்ட அவுஸ்திரேலிய அணி 112 புள்ளிகளுடன் ஒரு இடம் முன்னேறி நான்காவது இடத்தை பிடித்துள்ளதுடன், பாகிஸ்தான் அணி 107 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளது.
ஐசிசி ஒருநாள் தரவரிசையின் 3வது இடத்தை இந்திய அணி தக்கவைத்துள்ளதுடன், இலங்கை அணி 8வது இடத்தை பிடித்திருக்கிறமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<