சுற்றுலா இங்கிலாந்த லயன்ஸ் மற்றும் இலங்கை A கிரிக்கெட் அணிகள் இடையிலான இரண்டாவது உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட நிறைவில் இலங்கை A தரப்பு நிஷான் மதுஷ்க மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகியோரின் அரைச்சதங்களோடு பலம் பெற்றிருக்கின்றது.
>> முதல் இன்னிங்ஸில் பலம் பெற ஆரம்பித்துள்ள இங்கிலாந்து லயன்ஸ் அணி
காலி சர்வதேச மைதானத்தில் ஆரம்பித்த இந்த உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நேற்று (08) நிறைவுக்கு வரும் போது இலங்கை A அணியின் முதல் இன்னிங்ஸை (332) அடுத்து பதிலுக்கு தமது முதல் இன்னிங்ஸில் ஆடிய இங்கிலாந்து லயன்ஸ் அணி 234 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டது. களத்தில் ஆட்டமிழக்காது இருந்த அலெக்ஸ் லீஸ் 75 ஓட்டங்களுடனும், ஜேமி ஸ்மித் 85 ஓட்டங்களுடனும் காணப்பட்டிருந்தனர்.
பின்னர் இன்று போட்டியின் இரண்டாம் நாளில் இலங்கை A தரப்பினை விட 98 ஓட்டங்கள் பின்தங்கியவாறு தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை தொடர்ந்த இங்கிலாந்து லயன்ஸ் 76.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 405 ஓட்டங்கள் எடுத்தது.
இங்கிலாந்து லயன்ஸ் துடுப்பாட்டம் சார்பில் சதம் விளாசிய ஜேமி ஸ்மித் அதிரடியாக ஆடி 82 பந்துகளை எதிர் கொண்டு 8 சிக்ஸர்கள் 13 பெளண்டரிகள் அடங்கலாக 126 ஓட்டங்கள் எடுத்தார். இதேநேரம் 10 பெளண்டரிகள் அடங்கலாக 97 ஓட்டங்கள் எடுத்த அலெக்ஸ் லீஸ் சதத்தினை வெறும் 03 ஓட்டங்களால் தவறவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை A அணியின் பந்துவீச்சில் சாமிக்க கருணாரட்ன 4 விக்கெட்டுக்களைச் சாய்க்க, விஷ்வ பெர்னாண்டோ 3 விக்கெட்டுக்களை சுருட்டினார்.
பின்னர் 73 ஓட்டங்கள் பின்தங்கியவாறு இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த இலங்கை A அணி போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வரும் போது கமிந்து மெண்டிஸ், நிஷான் மதுஷ்க ஆகியோரின் அரைச்சத உதவிகளோடு 202 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து பலமான நிலையில் காணப்படுகின்றது.
>> இலங்கையின் இறுதி போட்டி வாய்பிற்கு ஆஸி. உதவும் – மஹேல
தற்போது இங்கிலாந்து லயன்ஸை விட 129 ஓட்டங்கள் முன்னிலை பெற்றிருக்கும் இலங்கை A அணியின் துடுப்பாட்டம் சார்பில் ஆட்டமிழக்காமல் நிற்கும் நிஷான் மதுஷ்க 84 ஓட்டங்கள் பெற்றதோடு, கமிந்து மெண்டிஸ் 76 பந்துகளில் 11 பெளண்டரிகள் உடன் 67 ஓட்டங்கள் எடுத்தார். இதேநேரம் லசித் குரூஸ்புள்ளேயும் 47 ஓட்டங்களுடன் இலங்கை A அணியின் துடுப்பாட்டத்திற்கு பங்களிப்புச் செய்தமை குறிப்பிடத்தக்கது.
மறுமுனையில் இங்கிலாந்து லயன்ஸ் அணி பந்துவீச்சில் ஜேக் கார்ஸன் இன்றைய நாளில் 2 விக்கெட்டுக்களைச் சாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
போட்டியின் சுருக்கம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Nishan Madushka | c Tom Abell b Josh Tongue | 22 | 42 | 4 | 0 | 52.38 |
Lasith Croospulle | c Matt Fisher b Josh Tongue | 128 | 130 | 16 | 3 | 98.46 |
Nuwanidu Fernando | lbw b Sam Cook | 22 | 73 | 3 | 0 | 30.14 |
Kamindu Mendis | c Josh Tongue b Matt Fisher | 6 | 12 | 0 | 0 | 50.00 |
Nipun Dhananjaya | c Tom Abell b Josh Tongue | 61 | 104 | 10 | 0 | 58.65 |
Lahiru Udara | c Josh Bohannon b Josh Tongue | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Chamika Karunarathne | c Alex Lees b Josh Tongue | 0 | 3 | 0 | 0 | 0.00 |
Lakshitha Manasinghe | c Liam Patterson-White b Matt Fisher | 43 | 87 | 2 | 1 | 49.43 |
Lasith Embuldeniya | c Jack Haynes b Jack Carson | 42 | 55 | 7 | 1 | 76.36 |
Vishwa Fernando | b Sam Cook | 0 | 8 | 0 | 0 | 0.00 |
Praveen Jayawickrama | not out | 1 | 14 | 0 | 0 | 7.14 |
Extras | 7 (b 4 , lb 3 , nb 0, w 0, pen 0) |
Total | 332/10 (88.1 Overs, RR: 3.77) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Sam Cook | 21 | 6 | 69 | 2 | 3.29 | |
Matt Fisher | 22 | 4 | 83 | 2 | 3.77 | |
Josh Tongue | 22 | 2 | 75 | 5 | 3.41 | |
Liam Patterson-White | 11 | 0 | 56 | 0 | 5.09 | |
Tom Abell | 2 | 0 | 11 | 0 | 5.50 | |
Jack Carson | 10.1 | 3 | 30 | 1 | 2.97 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Alex Lees | c Kamindu Mendis b Praveen Jayawickrama | 97 | 113 | 10 | 0 | 85.84 |
Haseeb Hameed | c Lahiru Udara b Chamika Karunarathne | 4 | 2 | 1 | 0 | 200.00 |
Tom Abell | c Nishan Madushka b Vishwa Fernando | 4 | 8 | 1 | 0 | 50.00 |
Josh Bohannon | c Nuwanidu Fernando b Vishwa Fernando | 54 | 62 | 9 | 0 | 87.10 |
Jamie Smith | c Nishan Madushka b Chamika Karunarathne | 126 | 82 | 13 | 8 | 153.66 |
Tom Haines | c Lahiru Udara b Chamika Karunarathne | 10 | 12 | 0 | 0 | 83.33 |
Liam Patterson-White | c Lasith Croospulle b Lasith Embuldeniya | 24 | 33 | 1 | 1 | 72.73 |
Matt Fisher | not out | 35 | 86 | 2 | 0 | 40.70 |
Jack Carson | b Vishwa Fernando | 6 | 50 | 1 | 0 | 12.00 |
Josh Tongue | c Lahiru Udara b Praveen Jayawickrama | 29 | 39 | 4 | 0 | 74.36 |
Sam Cook | c Kamindu Mendis b Chamika Karunarathne | 0 | 4 | 0 | 0 | 0.00 |
Extras | 16 (b 3 , lb 9 , nb 1, w 3, pen 0) |
Total | 405/10 (76.4 Overs, RR: 5.28) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Vishwa Fernando | 21 | 1 | 83 | 3 | 3.95 | |
Chamika Karunarathne | 13.4 | 2 | 84 | 4 | 6.27 | |
Lasith Embuldeniya | 20 | 3 | 113 | 1 | 5.65 | |
Lakshitha Manasinghe | 5 | 0 | 54 | 0 | 10.80 | |
Praveen Jayawickrama | 17 | 2 | 59 | 2 | 3.47 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Nishan Madushka | c Sam Cook b Josh Tongue | 100 | 125 | 16 | 1 | 80.00 |
Lasith Croospulle | c Liam Patterson-White b Jack Carson | 47 | 41 | 4 | 2 | 114.63 |
Nuwanidu Fernando | c Jack Carson b Matt Fisher | 1 | 15 | 0 | 0 | 6.67 |
Kamindu Mendis | c Nathan Gilchrist b Jack Carson | 67 | 76 | 11 | 0 | 88.16 |
Lasith Embuldeniya | c Jamie Smith b Sam Cook | 13 | 51 | 2 | 0 | 25.49 |
Nipun Dhananjaya | c Jamie Smith b Josh Tongue | 15 | 19 | 1 | 0 | 78.95 |
Lahiru Udara | c Josh Bohannon b Liam Patterson-White | 63 | 71 | 8 | 0 | 88.73 |
Chamika Karunarathne | b Josh Tongue | 0 | 6 | 0 | 0 | 0.00 |
Lakshitha Manasinghe | lbw b Jack Carson | 43 | 36 | 7 | 0 | 119.44 |
Vishwa Fernando | not out | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Praveen Jayawickrama | c Tom Haines b Jack Carson | 1 | 5 | 0 | 0 | 20.00 |
Extras | 6 (b 3 , lb 1 , nb 1, w 1, pen 0) |
Total | 356/10 (74.1 Overs, RR: 4.8) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Sam Cook | 11 | 1 | 38 | 1 | 3.45 | |
Matt Fisher | 12 | 1 | 58 | 1 | 4.83 | |
Liam Patterson-White | 12 | 1 | 72 | 1 | 6.00 | |
Josh Tongue | 15 | 2 | 77 | 3 | 5.13 | |
Jack Carson | 22.1 | 4 | 94 | 4 | 4.25 | |
Tom Abell | 2 | 0 | 13 | 0 | 6.50 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Alex Lees | b Praveen Jayawickrama | 9 | 8 | 0 | 1 | 112.50 |
Haseeb Hameed | c Kamindu Mendis b Lakshitha Manasinghe | 47 | 66 | 2 | 1 | 71.21 |
Tom Haines | c Nishan Madushka b Lakshitha Manasinghe | 10 | 21 | 0 | 0 | 47.62 |
Tom Abell | c Lasith Croospulle b Lakshitha Manasinghe | 20 | 38 | 0 | 0 | 52.63 |
Josh Bohannon | not out | 34 | 50 | 1 | 0 | 68.00 |
Jamie Smith | c b Lakshitha Manasinghe | 14 | 13 | 2 | 0 | 107.69 |
Liam Patterson-White | c b Lasith Embuldeniya | 3 | 3 | 0 | 0 | 100.00 |
Matt Fisher | lbw b Lakshitha Manasinghe | 22 | 19 | 0 | 1 | 115.79 |
Jack Carson | not out | 2 | 16 | 0 | 0 | 12.50 |
Extras | 12 (b 6 , lb 1 , nb 0, w 5, pen 0) |
Total | 173/7 (39 Overs, RR: 4.44) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Vishwa Fernando | 4 | 0 | 14 | 0 | 3.50 | |
Praveen Jayawickrama | 8 | 0 | 40 | 1 | 5.00 | |
Lakshitha Manasinghe | 16 | 1 | 61 | 5 | 3.81 | |
Lasith Embuldeniya | 11 | 0 | 51 | 1 | 4.64 |
போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் நாளை தொடரும்
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<