Home Tamil ஒருநாள் தொடரினை சமநிலைப்படுத்த இலங்கை A கிரிக்கெட் அணி

ஒருநாள் தொடரினை சமநிலைப்படுத்த இலங்கை A கிரிக்கெட் அணி

350

இலங்கை A மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் கிரிக்கெட் அணிகள் இடையில் நடைபெற்ற இரண்டாவது உத்தியோகபூர்வமற்ற ஒருநாள் போட்டியில் இலங்கை A அணி 86 ஓட்டங்களால் வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.

>> முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து லயன்ஸ் இலகு வெற்றி

மேலும் இந்த வெற்றியுடன் இலங்கை A கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட தொடரினையும் இன்னும் ஒரு போட்டி மீதமிருக்க 1-1 என சமநிலைப்படுத்தியிருக்கின்றது.

முன்னதாக கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் ஆரம்பித்த இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை A கிரிக்கெட் அணியின் தலைவர் சதீர சமரவிக்ரம முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தெரிவு செய்திருந்தார்.

அதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய  இலங்கை A கிரிக்கெட் அணி சிறந்த ஆரம்பத்தினைப் பெற்றதோடு லசித் குரூஸ்புள்ளே, நுவனிது பெர்னாண்டோ மற்றும் அஞ்செலோ மெதிவ்ஸ் ஆகியோரின் அரைச்சதங்களோடு 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 315 ஓட்டங்கள் எடுத்தது.

இலங்கை A அணியின் துடுப்பாட்டம் சார்பில் ஆரம்பவீரர்களில் ஒருவராக வந்த லசித் குரூஸ்புள்ளே 67 பந்துகளில் 13 பௌண்டரிகள் அடங்கலாக 73 ஓட்டங்கள் பெற்றார். இதேநேரம் நுவனிது பெர்னாண்டோ ஒரு சிக்ஸர் 5 பௌண்டரிகள் உடன் 57 ஓட்டங்கள் எடுக்க, அஞ்செலோ மெதிவ்ஸ் 4 பௌண்டரிகள் உடன் 50 ஓட்டங்கள் பெற்றார். இவர்களுடன்  இலங்கை A அணித்தலைவர் சதீர சமரவிக்ரமவும் 40 ஓட்டங்கள் எடுத்து தனது தரப்பிற்கு பலம் சேர்த்தார்.

மறுமுனையில் இங்கிலாந்து லயன்ஸ் பந்துவீச்சின் சார்பில் மேசோன் கிரேன் 3 விக்கெட்டுக்களையும், ஜகோப் பெத்தேல் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 316 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய இங்கிலாந்து லயன்ஸ் வீரர்கள் 39.1 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 229 ஓட்டங்களை மாத்திரமே எடுத்து போட்டியில் தோல்வியினைத் தழுவினர்.

>> தலையில் பந்து தாக்கியதால் வெளியேறிய டேவிட் வோர்னர்

இங்கிலாந்து லயன்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் டொம் ப்ரெஸ்ட் ஒரு சிக்ஸர் 6 பௌண்டரிகள் அடங்கலாக 68 பந்துகளில் 67 ஓட்டங்கள் எடுத்து தனது தரப்பில் வீரர் ஒருவர் பெற்ற கூடுதல் ஓட்டங்களைப் பதிவு செய்தார்.

இலங்கை A அணியின் பந்துவீச்சு சார்பில் சுழல்பந்துவீச்சாளரான துஷான்  ஹேமன்த 5 விக்கெட்டுக்களைச் சாய்க்க, துனித் வெல்லாலகே 2 விக்கெட்டுக்களை சுருட்டியிருந்தார்.

இனி இலங்கை A – இங்கிலாந்து லயன்ஸ் அணிகள் இடையிலான தொடரினை தீர்மானிக்கும் மூன்றாவதும் இறுதியுமான உத்தியோகபூர்வமற்ற ஒருநாள் போட்டி எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (21) நடைபெறுகின்றது.

ஸ்கோர் விபரம்

Result


Sri Lanka A Team
315/7 (50)

England Lions
229/10 (39.1)

Batsmen R B 4s 6s SR
Lasith Croospulle c Tom Prest b Mason Crane 73 67 12 0 108.96
Avishka Fernando lbw b Sam Cook 11 15 2 0 73.33
Nuwanidu Fernando lbw b Jacob Bethell 57 70 5 1 81.43
Angelo Mathews c Jacob Bethell b Mason Crane 50 53 4 0 94.34
Sadeera Samarawickrama c & b Jacob Bethell 40 42 2 0 95.24
Sahan Arachchige c Matt Fisher b Mason Crane 9 9 1 0 100.00
Suminda Lakshan run out () 35 27 2 1 129.63
Dunith Wellalage not out 15 17 0 0 88.24


Extras 25 (b 0 , lb 9 , nb 0, w 16, pen 0)
Total 315/7 (50 Overs, RR: 6.3)
Bowling O M R W Econ
Sam Cook 9 1 51 1 5.67
Matt Fisher 5 0 36 0 7.20
Brydon Carse 6 0 50 0 8.33
Tom Hartley 10 0 59 0 5.90
Mason Crane 10 0 55 3 5.50
Jacob Bethell 10 0 55 2 5.50


Batsmen R B 4s 6s SR
Jack Haynes st Sadeera Samarawickrama b Suminda Lakshan 36 43 5 0 83.72
Jacob Bethell lbw b Dunith Wellalage 19 18 2 1 105.56
Tom Prest b Dushan Hemantha 67 68 6 1 98.53
James Rew lbw b Dunith Wellalage 42 46 4 0 91.30
Jordan Cox c Dunith Wellalage b Dushan Hemantha 0 2 0 0 0.00
Matt Critchley st Sadeera Samarawickrama b Dushan Hemantha 4 7 0 0 57.14
Brydon Carse c Sadeera Samarawickrama b Sahan Arachchige 17 17 0 1 100.00
Tom Hartley c Dushan Hemantha b Pramod Madushan 23 21 2 0 109.52
Matt Fisher c & b Dushan Hemantha 8 8 0 1 100.00
Mason Crane c Sadeera Samarawickrama b Dushan Hemantha 3 5 0 0 60.00
Sam Cook not out 2 2 0 0 100.00


Extras 8 (b 0 , lb 2 , nb 2, w 4, pen 0)
Total 229/10 (39.1 Overs, RR: 5.85)
Bowling O M R W Econ
Pramod Madushan 4 0 21 1 5.25
Kavishka Anjula 4 0 18 0 4.50
Dunith Wellalage 10 0 61 2 6.10
Suminda Lakshan 7 0 45 1 6.43
Sahan Arachchige 6 0 39 1 6.50
Dushan Hemantha 8.1 0 43 5 5.31



>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<