சுற்றுலா இங்கிலாந்து லயன்ஸ் மற்றும் இலங்கை A கிரிக்கெட் அணிகள் இடையே நடைபெற்று வரும் முதாலாவது உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட நிறைவில், இலங்கை A தரப்பானது நிஷான் மதுஷ்கவின் அபார இரட்டைச் சதத்தோடு வலுப் பெற்றிருக்கின்றது.
இரண்டாம் இன்னிங்ஸில் திறமையான துடுப்பாட்டத்துடன் இலங்கை A அணி
காலி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வரும் நான்கு நாட்கள் கொண்ட இந்த உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நேற்று (01) நிறைவுக்கு வரும் போது இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பாடி வந்த இலங்கை A கிரிக்கெட் அணி 228 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை இழந்து காணப்பட்டிருந்தது. களத்தில் ஆட்டமிழக்காமல் இருந்த நிஷான் மதுஷ்க 91 ஓட்டங்களுடனும், லக்ஷித மனாசிங்க 14 ஓட்டங்களுடனும் காணப்பட்டிருந்தனர்.
இன்று இங்கிலாந்து லயன்ஸை விட 103 ஓட்டங்கள் பின்தங்கியவாறு இரண்டாவது இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை தொடர்ந்த இலங்கை A கிரிக்கெட் அணிக்கு போட்டி தொடங்கி சிறிது நேரத்திலேயே நிஷான் மதுஷ்க சதம் விளாசி வலுச் சேர்த்தார். மறுமுனையில் லக்ஷித மனாசிங்கவும் அரைச்சதம் விளாச இங்கிலாந்து லயன்ஸை விட பின்தங்கியிருந்த ஓட்டங்களை இலங்கை A அணி கடந்தது.
தொடர்ந்து இலங்கை A அணியின் இரண்டாவது விக்கெட்டாக ஆட்டமிழந்த லக்ஷித மனாசிங்க 11 பௌண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 73 ஓட்டங்கள் எடுத்தார்.
இதன் பின்னர் களத்தில் இருந்த நிஷான் மதுஷ்கவுடன் புதிய வீரராக களம் வந்த நுவனிது பெர்னாண்டோவும் பெறுமதியான அரைச்சதம் ஒன்றினைப் பதிவு செய்தார். தொடர்ந்து இலங்கை A அணியின் மூன்றாவது விக்கெட்டாக நுவனிந்து பெர்னாண்டோவின் இன்னிங்ஸ் நிறைவுக்கு வந்தது. நுவனிது பெர்னாண்டோ 90 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 11 பௌண்டரிகள் உடன் 80 ஓட்டங்கள் எடுத்தார்.
மகளிர் கிரிக்கெட் அபிவிருத்திக்காக சுசந்திகா ஜயசிங்க நியமனம்
நுவனிது பெர்னாண்டோவின் பின்னர் அணித்தலைவர் நிபுன் தனன்ஞய களமிறங்கியதோடு அவரும் அரைச்சதம் பூர்த்தி செய்தார். மறுமுனையில் ஆட்டமிழக்காது களத்தில் இருந்த நிஷான் மதுஷ்க இரட்டைச் சதம் விளாசினார்.
நிஷான் மதுஷ்கவின் இரட்டைச் சதம் மற்றும் நிப்புன் தனன்ஞயவின் பெறுமதிமிக்க அரைச்சதம் ஆகியவற்றின் உதவியோடு இலங்கை A கிரிக்கெட் அணி போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநிறைவில் தமது இரண்டாம் இன்னிங்ஸிற்காக 580 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து வலுவான நிலையில் உள்ளது.
அதேநேரம் மூன்றாம் நாள் நிறைவில் இங்கிலாந்து லயன்ஸை விட 249 ஓட்டங்கள் முன்னிலை பெற்றிருக்கும் இலங்கை A அணிக்காக களத்தில் ஆட்டமிழக்காது நிற்கும் நிஷான் மதுஷ்க 207 ஓட்டங்களுடனும், நிப்புன் தனன்ஞய 89 ஓட்டங்களுடனும் காணப்படுகின்றனர்.
இங்கிலாந்து லயன்ஸ் அணியின் பந்துவீச்சுத் தரப்பிற்கு போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தில் இரண்டு விக்கெட்டுக்களை மாத்திரம் சாய்க்க முடிந்ததோடு, வீழ்த்தப்பட்ட விக்கெட்டுக்களை டொம் எபெல் மற்றும் ஜேக் கார்ஸன் ஆகியோர் தம்மிடையே பகிர்ந்தனர்.
ஸ்கோர் விபரம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Nishan Madushka | lbw b Matt Fisher | 1 | 2 | 0 | 0 | 50.00 |
Oshada Fernando | c Jack Haynes b Liam Patterson-White | 21 | 39 | 3 | 0 | 53.85 |
Nuwanidu Fernando | st Jamie Smith b Liam Patterson-White | 17 | 27 | 3 | 0 | 62.96 |
Nipun Dhananjaya | c Haseeb Hameed b Sam Cook | 15 | 21 | 2 | 0 | 71.43 |
Sadeera Samarawickrama | c Liam Patterson-White b Matt Fisher | 43 | 61 | 7 | 0 | 70.49 |
Sahan Arachchige | c Jamie Smith b Tom Abell | 3 | 20 | 0 | 0 | 15.00 |
Dunith Wellalage | c Jamie Smith b Liam Patterson-White | 0 | 4 | 0 | 0 | 0.00 |
Lakshitha Manasinghe | c Jamie Smith b Liam Patterson-White | 26 | 27 | 5 | 0 | 96.30 |
Amshi De Silva | c Jamie Smith b Matt Fisher | 0 | 4 | 0 | 0 | 0.00 |
Lasith Embuldeniya | c Jamie Smith b Matt Fisher | 3 | 9 | 0 | 0 | 33.33 |
Milan Rathnayake | not out | 1 | 5 | 0 | 0 | 20.00 |
Extras | 6 (b 0 , lb 1 , nb 5, w 0, pen 0) |
Total | 136/10 (35.4 Overs, RR: 3.81) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Sam Cook | 7 | 2 | 17 | 1 | 2.43 | |
Matt Fisher | 9.4 | 1 | 34 | 5 | 3.62 | |
Liam Patterson-White | 13 | 1 | 51 | 3 | 3.92 | |
Tom Abell | 4 | 0 | 17 | 1 | 4.25 | |
Jack Carson | 2 | 0 | 16 | 0 | 8.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Alex Lees | b Lasith Embuldeniya | 56 | 69 | 7 | 1 | 81.16 |
Haseeb Hameed | c Sadeera Samarawickrama b Sahan Arachchige | 81 | 109 | 10 | 0 | 74.31 |
Tom Haines | c Lahiru Udara b Lakshitha Manasinghe | 118 | 138 | 12 | 1 | 85.51 |
Tom Abell | lbw b Lasith Embuldeniya | 7 | 7 | 0 | 1 | 100.00 |
Josh Bohannon | c Milan Rathnayake b Lasith Embuldeniya | 42 | 50 | 5 | 0 | 84.00 |
Jack Haynes | c Sadeera Samarawickrama b Amshi De Silva | 16 | 13 | 3 | 0 | 123.08 |
Jamie Smith | b Lakshitha Manasinghe | 22 | 23 | 3 | 0 | 95.65 |
Liam Patterson-White | c Dunith Wellalage b Amshi De Silva | 41 | 61 | 6 | 0 | 67.21 |
Matt Fisher | c Sadeera Samarawickrama b Milan Rathnayake | 53 | 46 | 2 | 2 | 115.22 |
Jack Carson | c Nishan Madushka b Amshi De Silva | 4 | 10 | 1 | 0 | 40.00 |
Sam Cook | not out | 2 | 6 | 0 | 0 | 33.33 |
Extras | 25 (b 7 , lb 12 , nb 5, w 1, pen 0) |
Total | 467/10 (87.5 Overs, RR: 5.32) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Milan Rathnayake | 16.5 | 1 | 81 | 1 | 4.91 | |
Amshi De Silva | 10 | 0 | 59 | 3 | 5.90 | |
Lasith Embuldeniya | 30 | 0 | 158 | 3 | 5.27 | |
Lakshitha Manasinghe | 17 | 1 | 85 | 2 | 5.00 | |
Sahan Arachchige | 9 | 1 | 44 | 1 | 4.89 | |
Dunith Wellalage | 5 | 0 | 21 | 0 | 4.20 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Nishan Madushka | c Matt Fisher b Jack Carson | 241 | 423 | 25 | 4 | 56.97 |
Oshada Fernando | c Alex Lees b Liam Patterson-White | 114 | 134 | 18 | 0 | 85.07 |
Lakshitha Manasinghe | c Sam Cook b Tom Abell | 73 | 107 | 11 | 2 | 68.22 |
Nuwanidu Fernando | b Jack Carson | 80 | 90 | 11 | 2 | 88.89 |
Nipun Dhananjaya | b Liam Patterson-White | 128 | 170 | 18 | 1 | 75.29 |
Sadeera Samarawickrama | lbw b Jack Carson | 1 | 2 | 0 | 0 | 50.00 |
Sahan Arachchige | c Tom Haines b Liam Patterson-White | 4 | 11 | 0 | 0 | 36.36 |
Dunith Wellalage | run out (Haseeb Hameed) | 0 | 2 | 0 | 0 | 0.00 |
Amshi De Silva | c & b Jack Carson | 0 | 5 | 0 | 0 | 0.00 |
Lasith Embuldeniya | not out | 0 | 4 | 0 | 0 | 0.00 |
Extras | 22 (b 11 , lb 6 , nb 5, w 0, pen 0) |
Total | 663/9 (157.1 Overs, RR: 4.22) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Sam Cook | 19 | 1 | 95 | 0 | 5.00 | |
Matt Fisher | 15 | 3 | 57 | 0 | 3.80 | |
Liam Patterson-White | 50 | 7 | 231 | 3 | 4.62 | |
Jack Carson | 44.1 | 6 | 173 | 4 | 3.92 | |
Tom Abell | 20 | 7 | 55 | 1 | 2.75 | |
Tom Haines | 9 | 0 | 35 | 0 | 3.89 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Alex Lees | c Sadeera Samarawickrama b Milan Rathnayake | 1 | 8 | 0 | 0 | 12.50 |
Haseeb Hameed | c & b Milan Rathnayake | 15 | 33 | 3 | 0 | 45.45 |
Tom Haines | c Nishan Madushka b Milan Rathnayake | 20 | 24 | 3 | 0 | 83.33 |
Tom Abell | c Sadeera Samarawickrama b Amshi De Silva | 11 | 21 | 1 | 0 | 52.38 |
Josh Bohannon | lbw b Lakshitha Manasinghe | 57 | 86 | 7 | 0 | 66.28 |
Jack Haynes | lbw b Lakshitha Manasinghe | 43 | 38 | 3 | 0 | 113.16 |
Jamie Smith | not out | 39 | 44 | 5 | 0 | 88.64 |
Liam Patterson-White | run out (Lakshitha Manasinghe) | 25 | 34 | 2 | 1 | 73.53 |
Matt Fisher | not out | 1 | 3 | 0 | 0 | 33.33 |
Extras | 9 (b 4 , lb 0 , nb 3, w 2, pen 0) |
Total | 221/7 (48 Overs, RR: 4.6) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Lasith Embuldeniya | 19 | 3 | 82 | 0 | 4.32 | |
Milan Rathnayake | 8 | 0 | 31 | 3 | 3.88 | |
Dunith Wellalage | 5 | 0 | 24 | 0 | 4.80 | |
Amshi De Silva | 5 | 1 | 25 | 1 | 5.00 | |
Lakshitha Manasinghe | 11 | 0 | 55 | 2 | 5.00 |
போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் நாளை தொடரும்
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<