இலங்கை A கிரிக்கெட் அணி மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் அணிகள் இடையிலான முதல் உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் இலங்கை A அணி வீரர்கள் சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.
>> விரைவில் நடைபெறவுள்ள மகளிர் IPL தொடர் ஏலம்
இலங்கை A கிரிக்கெட் அணி மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் அணிகள் இடையிலான நான்கு நாட்கள் கொண்ட உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நேற்று (31) காலி சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகியது.
நேற்று போட்டியின் முதல் நாள் ஆட்ட நிறைவில் இலங்கை A அணியின் மோசமான முதல் இன்னிங்ஸ் (136) துடுப்பாட்டத்தை அடுத்து தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடிய இங்கிலாந்து லயன்ஸ் 3 விக்கெட்டுக்களை இழந்து 249 ஓட்டங்கள் பெற்றிருந்தது. களத்தில் ஆட்டமிழக்காமல் இருந்த டொம் ஹெய்னஸ் 63 ஓட்டங்களையும், ஜோஸ் பொஹன்னன் 26 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.
இன்று போட்டியின் இரண்டாம் நாளில் இலங்கை A கிரிக்கெட் அணியினை விட 113 ஓட்டங்கள் முன்னிலை பெற்றவாறு முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை தொடர்ந்த இங்கிலாந்து லயன்ஸ் அணிக்காக டொம் ஹெய்னஸ் சதம் விளாசியதோடு, பின்வரிசையில் ஆடிய மெதிவ் பிஸ்சர் அரைச்சதம் பெற்றுக் கொடுத்தார்.
இந்த இரண்டு வீரர்களினதும் ஆட்டத்தோடு இங்கிலாந்து லயன்ஸ் அணி முதல் இன்னிங்ஸிற்காக 87.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 467 ஓட்டங்கள் எடுத்தது.
இங்கிலாந்து லயன்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் டொம் ஹெய்னஸ் ஒரு சிக்ஸர் 12 பெளண்டரிகள் அடங்கலாக 118 ஓட்டங்கள் எடுத்தார். மறுமுனையில் மெதிவ் பிஸ்சர் 46 பந்துகளில் 2 பெளண்டரிகள் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 53 ஓட்டங்கள் எடுத்தார்.
மறுமுனையில் இலங்கை A கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு சார்பில் அம்ஷி டி சில்வா மற்றும் லசித் எம்புல்தெனிய ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்தனர்.
இதனை அடுத்து 331 ஓட்டங்கள் பின்தங்கியவாறு இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை தொடர்ந்த இலங்கை A கிரிக்கெட் அணி இம்முறை சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதன்படி ஓசத பெர்னாண்டோ இலங்கை A அணிக்காக சதம் பெற்றுக் கொடுத்தார். அவருடன் நிஷான் மதுஷ்கவும் இணைந்து சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்த இலங்கை A அணி போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நிறைவில் தமது இரண்டாம் இன்னிங்ஸிற்காக ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து 228 ஓட்டங்களுடன் நல்ல நிலையில் காணப்படுகின்றது.
>> மகளிர் T20 உலகக் கிண்ண இலங்கை குழாம் அறிவிப்பு
களத்தில் ஆட்டமிழக்காது நிற்கும் நிஷான் மதுஷ்க ஆட்டமிழக்காமல் 91 ஓட்டங்களுடன் காணப்பட, லக்ஷித மானசிங்க 14 ஓட்டங்களுடன் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை சதம் விளாசிய ஓசத பெர்னாண்டோ 18 பெளண்டரிகள் 134 பந்துகளில் 114 ஓட்டங்கள் எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தற்போது இலங்கை A அணி இங்கிலாந்து லயன்ஸ் வீரர்களை விட 103 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றது.
ஸ்கோர் சுருக்கம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Nishan Madushka | lbw b Matt Fisher | 1 | 2 | 0 | 0 | 50.00 |
Oshada Fernando | c Jack Haynes b Liam Patterson-White | 21 | 39 | 3 | 0 | 53.85 |
Nuwanidu Fernando | st Jamie Smith b Liam Patterson-White | 17 | 27 | 3 | 0 | 62.96 |
Nipun Dhananjaya | c Haseeb Hameed b Sam Cook | 15 | 21 | 2 | 0 | 71.43 |
Sadeera Samarawickrama | c Liam Patterson-White b Matt Fisher | 43 | 61 | 7 | 0 | 70.49 |
Sahan Arachchige | c Jamie Smith b Tom Abell | 3 | 20 | 0 | 0 | 15.00 |
Dunith Wellalage | c Jamie Smith b Liam Patterson-White | 0 | 4 | 0 | 0 | 0.00 |
Lakshitha Manasinghe | c Jamie Smith b Liam Patterson-White | 26 | 27 | 5 | 0 | 96.30 |
Amshi De Silva | c Jamie Smith b Matt Fisher | 0 | 4 | 0 | 0 | 0.00 |
Lasith Embuldeniya | c Jamie Smith b Matt Fisher | 3 | 9 | 0 | 0 | 33.33 |
Milan Rathnayake | not out | 1 | 5 | 0 | 0 | 20.00 |
Extras | 6 (b 0 , lb 1 , nb 5, w 0, pen 0) |
Total | 136/10 (35.4 Overs, RR: 3.81) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Sam Cook | 7 | 2 | 17 | 1 | 2.43 | |
Matt Fisher | 9.4 | 1 | 34 | 5 | 3.62 | |
Liam Patterson-White | 13 | 1 | 51 | 3 | 3.92 | |
Tom Abell | 4 | 0 | 17 | 1 | 4.25 | |
Jack Carson | 2 | 0 | 16 | 0 | 8.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Alex Lees | b Lasith Embuldeniya | 56 | 69 | 7 | 1 | 81.16 |
Haseeb Hameed | c Sadeera Samarawickrama b Sahan Arachchige | 81 | 109 | 10 | 0 | 74.31 |
Tom Haines | c Lahiru Udara b Lakshitha Manasinghe | 118 | 138 | 12 | 1 | 85.51 |
Tom Abell | lbw b Lasith Embuldeniya | 7 | 7 | 0 | 1 | 100.00 |
Josh Bohannon | c Milan Rathnayake b Lasith Embuldeniya | 42 | 50 | 5 | 0 | 84.00 |
Jack Haynes | c Sadeera Samarawickrama b Amshi De Silva | 16 | 13 | 3 | 0 | 123.08 |
Jamie Smith | b Lakshitha Manasinghe | 22 | 23 | 3 | 0 | 95.65 |
Liam Patterson-White | c Dunith Wellalage b Amshi De Silva | 41 | 61 | 6 | 0 | 67.21 |
Matt Fisher | c Sadeera Samarawickrama b Milan Rathnayake | 53 | 46 | 2 | 2 | 115.22 |
Jack Carson | c Nishan Madushka b Amshi De Silva | 4 | 10 | 1 | 0 | 40.00 |
Sam Cook | not out | 2 | 6 | 0 | 0 | 33.33 |
Extras | 25 (b 7 , lb 12 , nb 5, w 1, pen 0) |
Total | 467/10 (87.5 Overs, RR: 5.32) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Milan Rathnayake | 16.5 | 1 | 81 | 1 | 4.91 | |
Amshi De Silva | 10 | 0 | 59 | 3 | 5.90 | |
Lasith Embuldeniya | 30 | 0 | 158 | 3 | 5.27 | |
Lakshitha Manasinghe | 17 | 1 | 85 | 2 | 5.00 | |
Sahan Arachchige | 9 | 1 | 44 | 1 | 4.89 | |
Dunith Wellalage | 5 | 0 | 21 | 0 | 4.20 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Nishan Madushka | c Matt Fisher b Jack Carson | 241 | 423 | 25 | 4 | 56.97 |
Oshada Fernando | c Alex Lees b Liam Patterson-White | 114 | 134 | 18 | 0 | 85.07 |
Lakshitha Manasinghe | c Sam Cook b Tom Abell | 73 | 107 | 11 | 2 | 68.22 |
Nuwanidu Fernando | b Jack Carson | 80 | 90 | 11 | 2 | 88.89 |
Nipun Dhananjaya | b Liam Patterson-White | 128 | 170 | 18 | 1 | 75.29 |
Sadeera Samarawickrama | lbw b Jack Carson | 1 | 2 | 0 | 0 | 50.00 |
Sahan Arachchige | c Tom Haines b Liam Patterson-White | 4 | 11 | 0 | 0 | 36.36 |
Dunith Wellalage | run out (Haseeb Hameed) | 0 | 2 | 0 | 0 | 0.00 |
Amshi De Silva | c & b Jack Carson | 0 | 5 | 0 | 0 | 0.00 |
Lasith Embuldeniya | not out | 0 | 4 | 0 | 0 | 0.00 |
Extras | 22 (b 11 , lb 6 , nb 5, w 0, pen 0) |
Total | 663/9 (157.1 Overs, RR: 4.22) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Sam Cook | 19 | 1 | 95 | 0 | 5.00 | |
Matt Fisher | 15 | 3 | 57 | 0 | 3.80 | |
Liam Patterson-White | 50 | 7 | 231 | 3 | 4.62 | |
Jack Carson | 44.1 | 6 | 173 | 4 | 3.92 | |
Tom Abell | 20 | 7 | 55 | 1 | 2.75 | |
Tom Haines | 9 | 0 | 35 | 0 | 3.89 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Alex Lees | c Sadeera Samarawickrama b Milan Rathnayake | 1 | 8 | 0 | 0 | 12.50 |
Haseeb Hameed | c & b Milan Rathnayake | 15 | 33 | 3 | 0 | 45.45 |
Tom Haines | c Nishan Madushka b Milan Rathnayake | 20 | 24 | 3 | 0 | 83.33 |
Tom Abell | c Sadeera Samarawickrama b Amshi De Silva | 11 | 21 | 1 | 0 | 52.38 |
Josh Bohannon | lbw b Lakshitha Manasinghe | 57 | 86 | 7 | 0 | 66.28 |
Jack Haynes | lbw b Lakshitha Manasinghe | 43 | 38 | 3 | 0 | 113.16 |
Jamie Smith | not out | 39 | 44 | 5 | 0 | 88.64 |
Liam Patterson-White | run out (Lakshitha Manasinghe) | 25 | 34 | 2 | 1 | 73.53 |
Matt Fisher | not out | 1 | 3 | 0 | 0 | 33.33 |
Extras | 9 (b 4 , lb 0 , nb 3, w 2, pen 0) |
Total | 221/7 (48 Overs, RR: 4.6) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Lasith Embuldeniya | 19 | 3 | 82 | 0 | 4.32 | |
Milan Rathnayake | 8 | 0 | 31 | 3 | 3.88 | |
Dunith Wellalage | 5 | 0 | 24 | 0 | 4.80 | |
Amshi De Silva | 5 | 1 | 25 | 1 | 5.00 | |
Lakshitha Manasinghe | 11 | 0 | 55 | 2 | 5.00 |
போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<