சுற்றுலா இங்கிலாந்து லயன்ஸ் மற்றும் இலங்கை A கிரிக்கெட் அணிகள் இடையிலான முதல் உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநிறைவில் இங்கிலாந்து லயன்ஸ் ஹஸீப் ஹமிட், டொம் ஹெய்னஸ் மற்றும் அலெக் லீஸ் ஆகியோரது அரைச்சதங்களுடன் வலுப் பெற்றிருக்கின்றது.
பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து விலகும் சந்திக்க ஹதுருசிங்க
இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து லயன்ஸ் அணி தமது சுற்றுப் பயணத்தில் முதற்கட்டமாக இரண்டு போட்டிகள் கொண்ட உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடரில் ஆடுகின்றது.
அதன்படி இந்த உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று (31) காலி சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகியது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை A அணியின் தலைவர் நிபுன் தனன்ஞய முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தமக்காகப் பெற்றார்.
இதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை A அணி தொடர்ச்சியான தடுமாற்றத்தை காட்டி விக்கெட்டுக்களைப் பறிகொடுத்தது. அணிக்கு ஆரம்ப வீரர்களாக வந்தவர்களில் நிஷான் மதுஷ்க ஒரு ஓட்டத்துடன் வெளியேற, ஏனைய ஆரம்பவீரரான ஓசத பெர்னாண்டோ 26 ஓட்டங்களை எடுத்திருந்தார்.
இதேநேரம் அணியின் முன்வரிசை வீரர்களில் நுவனிது பெர்னாண்டோ 17 ஓட்டங்களையும், அணித்தலைவர் நிபுன் தனன்ஞய 15 ஓட்டங்களையும் பெற்றனர்.
இவர்களின் பின்னர் மத்திய வரிசையில் சதீர சமரவிக்ரம தவிர ஏனைய அனைவரும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்த இலங்கை A அணி 35.4 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 136 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தது.
இலங்கை A அணியின் துடுப்பாட்டம் சார்பில் அதிகபட்சமாக சதீர சமரவிக்ரம 60 பந்துகளில் 7 பெளண்டரிகள் அடங்கலாக 43 ஓட்டங்களை எடுத்தார்.
இங்கிலாந்து லயன்ஸ் பந்துவீச்சில் மெதிவ் பிஸ்சர் 5 விக்கெட்டுக்களைச் சாய்க்க, லியாம் பட்டர்சென் 3 விக்கெட்டுக்களைச் சுருட்டினார்.
இதன் பின்னர் தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடிய இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு அதன் தலைவரான ஹஸீப் ஹமிட் மற்றும் ஏனைய ஆரம்பவீரரான அலெக்ஸ் லீஸ் ஆகியோர் அரைச்சதங்களை விளாசி சிறந்த ஆரம்பத்தை வழங்கினர்.
இதில் அணியின் முதல் விக்கெட்டாக மாறிய அலெக்ஸ் லீஸ் ஒரு சிக்ஸர் 9 பெளண்டரிகள் அடங்கலாக 56 ஓட்டங்கள் எடுக்க, இங்கிலாந்து லயன்ஸ் அணித்தலைவர் ஹஸீப் ஹமிட் 9 பெளண்டரிகள் உடன் 81 ஓட்டங்கள் பெற்றார்.
இவர்களை தொடர்ந்து களம் வந்த டொம் ஹெய்னஸ் உம் அரைச்சதம் கடக்க இங்கிலாந்து லயன்ஸ் போட்டியின் முதல்நாள் நிறைவில் 48 ஓவர்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து 249 ஓட்டங்களுடன் காணப்படுகின்றது.
தற்போது இலங்கையை விட 113 ஓட்டங்களால் முன்னிலை பெற்று களத்தில் ஆட்டமிழக்காது நிற்கும் டொம் ஹெய்னஸ் 63 ஓட்டங்களுடனும், ஜோஸ் பொஹன்னன் 26 ஓட்டங்களுடனும் காணப்படுகின்றனர்.
இலங்கை A கிரிக்கெட் அணி பந்துவீச்சு சார்பில் லசித் எம்புல்தெனிய 2 விக்கெட்டுக்களைச் சுருட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
போட்டியின் சுருக்கம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Nishan Madushka | lbw b Matt Fisher | 1 | 2 | 0 | 0 | 50.00 |
Oshada Fernando | c Jack Haynes b Liam Patterson-White | 21 | 39 | 3 | 0 | 53.85 |
Nuwanidu Fernando | st Jamie Smith b Liam Patterson-White | 17 | 27 | 3 | 0 | 62.96 |
Nipun Dhananjaya | c Haseeb Hameed b Sam Cook | 15 | 21 | 2 | 0 | 71.43 |
Sadeera Samarawickrama | c Liam Patterson-White b Matt Fisher | 43 | 61 | 7 | 0 | 70.49 |
Sahan Arachchige | c Jamie Smith b Tom Abell | 3 | 20 | 0 | 0 | 15.00 |
Dunith Wellalage | c Jamie Smith b Liam Patterson-White | 0 | 4 | 0 | 0 | 0.00 |
Lakshitha Manasinghe | c Jamie Smith b Liam Patterson-White | 26 | 27 | 5 | 0 | 96.30 |
Amshi De Silva | c Jamie Smith b Matt Fisher | 0 | 4 | 0 | 0 | 0.00 |
Lasith Embuldeniya | c Jamie Smith b Matt Fisher | 3 | 9 | 0 | 0 | 33.33 |
Milan Rathnayake | not out | 1 | 5 | 0 | 0 | 20.00 |
Extras | 6 (b 0 , lb 1 , nb 5, w 0, pen 0) |
Total | 136/10 (35.4 Overs, RR: 3.81) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Sam Cook | 7 | 2 | 17 | 1 | 2.43 | |
Matt Fisher | 9.4 | 1 | 34 | 5 | 3.62 | |
Liam Patterson-White | 13 | 1 | 51 | 3 | 3.92 | |
Tom Abell | 4 | 0 | 17 | 1 | 4.25 | |
Jack Carson | 2 | 0 | 16 | 0 | 8.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Alex Lees | b Lasith Embuldeniya | 56 | 69 | 7 | 1 | 81.16 |
Haseeb Hameed | c Sadeera Samarawickrama b Sahan Arachchige | 81 | 109 | 10 | 0 | 74.31 |
Tom Haines | c Lahiru Udara b Lakshitha Manasinghe | 118 | 138 | 12 | 1 | 85.51 |
Tom Abell | lbw b Lasith Embuldeniya | 7 | 7 | 0 | 1 | 100.00 |
Josh Bohannon | c Milan Rathnayake b Lasith Embuldeniya | 42 | 50 | 5 | 0 | 84.00 |
Jack Haynes | c Sadeera Samarawickrama b Amshi De Silva | 16 | 13 | 3 | 0 | 123.08 |
Jamie Smith | b Lakshitha Manasinghe | 22 | 23 | 3 | 0 | 95.65 |
Liam Patterson-White | c Dunith Wellalage b Amshi De Silva | 41 | 61 | 6 | 0 | 67.21 |
Matt Fisher | c Sadeera Samarawickrama b Milan Rathnayake | 53 | 46 | 2 | 2 | 115.22 |
Jack Carson | c Nishan Madushka b Amshi De Silva | 4 | 10 | 1 | 0 | 40.00 |
Sam Cook | not out | 2 | 6 | 0 | 0 | 33.33 |
Extras | 25 (b 7 , lb 12 , nb 5, w 1, pen 0) |
Total | 467/10 (87.5 Overs, RR: 5.32) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Milan Rathnayake | 16.5 | 1 | 81 | 1 | 4.91 | |
Amshi De Silva | 10 | 0 | 59 | 3 | 5.90 | |
Lasith Embuldeniya | 30 | 0 | 158 | 3 | 5.27 | |
Lakshitha Manasinghe | 17 | 1 | 85 | 2 | 5.00 | |
Sahan Arachchige | 9 | 1 | 44 | 1 | 4.89 | |
Dunith Wellalage | 5 | 0 | 21 | 0 | 4.20 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Nishan Madushka | c Matt Fisher b Jack Carson | 241 | 423 | 25 | 4 | 56.97 |
Oshada Fernando | c Alex Lees b Liam Patterson-White | 114 | 134 | 18 | 0 | 85.07 |
Lakshitha Manasinghe | c Sam Cook b Tom Abell | 73 | 107 | 11 | 2 | 68.22 |
Nuwanidu Fernando | b Jack Carson | 80 | 90 | 11 | 2 | 88.89 |
Nipun Dhananjaya | b Liam Patterson-White | 128 | 170 | 18 | 1 | 75.29 |
Sadeera Samarawickrama | lbw b Jack Carson | 1 | 2 | 0 | 0 | 50.00 |
Sahan Arachchige | c Tom Haines b Liam Patterson-White | 4 | 11 | 0 | 0 | 36.36 |
Dunith Wellalage | run out (Haseeb Hameed) | 0 | 2 | 0 | 0 | 0.00 |
Amshi De Silva | c & b Jack Carson | 0 | 5 | 0 | 0 | 0.00 |
Lasith Embuldeniya | not out | 0 | 4 | 0 | 0 | 0.00 |
Extras | 22 (b 11 , lb 6 , nb 5, w 0, pen 0) |
Total | 663/9 (157.1 Overs, RR: 4.22) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Sam Cook | 19 | 1 | 95 | 0 | 5.00 | |
Matt Fisher | 15 | 3 | 57 | 0 | 3.80 | |
Liam Patterson-White | 50 | 7 | 231 | 3 | 4.62 | |
Jack Carson | 44.1 | 6 | 173 | 4 | 3.92 | |
Tom Abell | 20 | 7 | 55 | 1 | 2.75 | |
Tom Haines | 9 | 0 | 35 | 0 | 3.89 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Alex Lees | c Sadeera Samarawickrama b Milan Rathnayake | 1 | 8 | 0 | 0 | 12.50 |
Haseeb Hameed | c & b Milan Rathnayake | 15 | 33 | 3 | 0 | 45.45 |
Tom Haines | c Nishan Madushka b Milan Rathnayake | 20 | 24 | 3 | 0 | 83.33 |
Tom Abell | c Sadeera Samarawickrama b Amshi De Silva | 11 | 21 | 1 | 0 | 52.38 |
Josh Bohannon | lbw b Lakshitha Manasinghe | 57 | 86 | 7 | 0 | 66.28 |
Jack Haynes | lbw b Lakshitha Manasinghe | 43 | 38 | 3 | 0 | 113.16 |
Jamie Smith | not out | 39 | 44 | 5 | 0 | 88.64 |
Liam Patterson-White | run out (Lakshitha Manasinghe) | 25 | 34 | 2 | 1 | 73.53 |
Matt Fisher | not out | 1 | 3 | 0 | 0 | 33.33 |
Extras | 9 (b 4 , lb 0 , nb 3, w 2, pen 0) |
Total | 221/7 (48 Overs, RR: 4.6) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Lasith Embuldeniya | 19 | 3 | 82 | 0 | 4.32 | |
Milan Rathnayake | 8 | 0 | 31 | 3 | 3.88 | |
Dunith Wellalage | 5 | 0 | 24 | 0 | 4.80 | |
Amshi De Silva | 5 | 1 | 25 | 1 | 5.00 | |
Lakshitha Manasinghe | 11 | 0 | 55 | 2 | 5.00 |
போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<