சுற்றுலா இங்கிலாந்து லயன்ஸ் மற்றும் இலங்கை A கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது உத்தியோகபூர்வமற்ற ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து லயன்ஸ் 4 விக்கெட்டுக்களால் இலகு வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.
ஐசிசி தரவரிசையில் முன்னேறிய இலங்கை வீராங்கனைகள்
மூன்று போட்டிகள் கொண்ட உத்தியோகபூர்வமற்ற ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று (15) கொழும்பு ஆர் பிரேமதாச சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகியது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை A அணியின் தலைவர் சதீர சமரவிக்ரம முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தெரிவு செய்திருந்தார்.
அதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை A அணி தடுமாற்றமான ஆரம்பத்தை பெற்றது. அணியின் நம்பிக்கைகுரிய வீரர்களாக காணப்பட்ட நுவனிது பெர்னாண்டோ, லசித் குரூஸ்புள்ளே ஆகியோர் ஒற்றை இலக்க ஓட்டங்களுடன் வெளியேற அவிஷ்க பெர்னாண்டோ ஓட்டமேதுமின்றி நடந்தார். அதேநேரம் அனுபவமிக்க அஞ்செலோ மெதிவ்ஸ் உம் 13 ஓட்டங்கள் பெற்ற நிலையில் ஆட்டமிழக்க இலங்கை A அணி ஒரு கட்டத்தில் 25 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.
இந்த சந்தர்ப்பத்தில் அணியின் ஐந்தாம் விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த அணித்தலைவர் சதீர சமரவிக்ரம – சஹான் ஆராச்சி ஆகிய இருவரும் இணைப்பாட்டமாக 121 ஓட்டங்களை பகிர்ந்து அணியினை சரிவில் இருந்து மீட்டனர். தொடர்ந்து இந்த இணைப்பாட்டத்தின் நிறைவாக ஆட்டமிழந்த சஹான் ஆராச்சிகே அரைச்சதம் பூர்த்தி செய்து 4 பௌண்டரிகள் உடன் 57 ஓட்டங்கள் பெற்றார்.
சஹான் ஆராச்சிகேவின் விக்கெட்டின் பின்னர் சதீர சமரவிக்ரமவும் தனது விக்கெட்டினைப் பறிகொடுத்தார். பொறுப்புடன் ஆடிய சதீர சமரவிக்ரம 72 ஓட்டங்களை எடுத்திருந்தார்.
தென்னாபிரிக்க டெஸ்ட் தொடருக்கான மே.தீவுகள் குழாம் அறிவிப்பு
சதீர சமரவிக்ரமவின் பின்னர் சாமிக்க கருணாரட்ன தவிர ஏனைய வீரர்கள் துடுப்பாட்டத்தில் சொதப்ப இலங்கை A அணி 45.1 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 230 ஓட்டங்கள் எடுத்தது.
இலங்கை A அணியின் துடுப்பாட்டம் சார்பில் சாமிக்க கருணாரட்ன அரைச்சதம் விளாசி 2 சிக்ஸர்கள் மற்றும் 5 பௌண்டரிகள் அடங்கலாக 48 பந்துகளில் 52 ஓட்டங்கள் எடுக்க, இங்கிலாந்து லயன்ஸ் பந்துவீச்சில் சகீப் மஹ்மூட் 3 விக்கெட்டுக்களையும், ஜெகோப் பெதேல் மற்றும் சேம் குக் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதமும் சாய்த்தனர்.
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 231 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய இங்கிலாந்து லயன்ஸ் அணி போட்டியின் வெற்றி இலக்கை 40.2 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து அடைந்தது.
இங்கிலாந்து லயன்ஸ் அணிக்காக போட்டியின் வெற்றி இலக்கை உறுதி செய்த அதன் வீரர்களில் சேம் ஹெய்ன் 51 பந்துகளில் 5 பௌண்டரிகள் அடங்கலாக 52 ஓட்டங்கள் எடுக்க, ஜக்கோப் பெதேல் 50 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.
இலங்கை வீராங்கனைக்கு அபராதம் விதித்த ஐசிசி
இலங்கை A அணியின் பந்துவீச்சில் துஷான் ஹேமன்த 3 விக்கெட்டுக்களையும், பிரவீன் ஜயவிக்ரம 2 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தனர். எனினும் இருவரினதும் பந்துவீச்சு வீணாகியது.
இப்போட்டியின் வெற்றியோடு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இங்கிலாந்து லயன்ஸ் 1-0 என முன்னிலை அடைந்திருக்கின்றது.
ஸ்கோர் விபரம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Lasith Croospulle | lbw b Sam Cook | 4 | 4 | 1 | 0 | 100.00 |
Avishka Fernando | c Jordan Cox b Saqib Mahmood | 0 | 7 | 0 | 0 | 0.00 |
Nuwanidu Fernando | c Jack Haynes b Saqib Mahmood | 2 | 11 | 0 | 0 | 18.18 |
Angelo Mathews | c James Rew b Sam Cook | 13 | 17 | 2 | 0 | 76.47 |
Sadeera Samarawickrama | c Jordan Cox b Jacob Bethell | 74 | 86 | 4 | 0 | 86.05 |
Sahan Arachchige | c Jack Haynes b Tom Prest | 57 | 80 | 4 | 0 | 71.25 |
Chamika Karunarathne | c Tom Haines b Saqib Mahmood | 52 | 48 | 5 | 2 | 108.33 |
Dushan Hemantha | b Jacob Bethell | 9 | 9 | 0 | 1 | 100.00 |
Pramod Madushan | run out () | 4 | 5 | 0 | 0 | 80.00 |
Milan Rathnayake | run out (Jordan Cox) | 0 | 0 | 0 | 0 | 0.00 |
Praveen Jayawickrama | not out | 0 | 4 | 0 | 0 | 0.00 |
Extras | 15 (b 0 , lb 2 , nb 0, w 13, pen 0) |
Total | 230/10 (45.1 Overs, RR: 5.09) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Sam Cook | 9 | 2 | 35 | 2 | 3.89 | |
Saqib Mahmood | 7.1 | 0 | 27 | 3 | 3.80 | |
Tom Abell | 2.1 | 1 | 2 | 0 | 0.95 | |
Matt Critchley | 5 | 0 | 39 | 0 | 7.80 | |
Tom Prest | 2.5 | 0 | 13 | 1 | 5.20 | |
Tom Hartley | 10 | 0 | 62 | 0 | 6.20 | |
Jacob Bethell | 9 | 0 | 50 | 2 | 5.56 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Jacob Bethell | c Nuwanidu Fernando b Sahan Arachchige | 50 | 58 | 7 | 0 | 86.21 |
Jack Haynes | b Praveen Jayawickrama | 25 | 28 | 4 | 0 | 89.29 |
Sam Hain | c Sahan Arachchige b Dushan Hemantha | 52 | 51 | 4 | 0 | 101.96 |
Jordan Cox | c Nuwanidu Fernando b Praveen Jayawickrama | 46 | 48 | 3 | 1 | 95.83 |
James Rew | c Milan Rathnayake b Dushan Hemantha | 13 | 22 | 0 | 0 | 59.09 |
Tom Prest | c Lasith Croospulle b Dushan Hemantha | 27 | 31 | 2 | 1 | 87.10 |
Matt Critchley | not out | 5 | 3 | 1 | 0 | 166.67 |
Tom Hartley | not out | 3 | 4 | 0 | 0 | 75.00 |
Extras | 10 (b 0 , lb 2 , nb 3, w 5, pen 0) |
Total | 231/6 (40.2 Overs, RR: 5.73) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Pramod Madushan | 4 | 0 | 20 | 0 | 5.00 | |
Milan Rathnayake | 5.2 | 0 | 42 | 0 | 8.08 | |
Chamika Karunaratne | 3 | 0 | 20 | 0 | 6.67 | |
Praveen Jayawickrama | 10 | 0 | 52 | 2 | 5.20 | |
Sahan Arachchige | 7 | 0 | 31 | 1 | 4.43 | |
Dushan Hemantha | 10 | 0 | 56 | 3 | 5.60 | |
Nuwanidu Fernando | 1 | 0 | 8 | 0 | 8.00 |
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<