இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள 2 நான்கு நாட்கள் கொண்ட போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளுக்கான இலங்கை A குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
நான்கு நாட்கள் கொண்ட தொடருக்கான அணித்தலைவராக நிபுன் தனன்ஜய பெயரிடப்பட்டுள்ளதுடன், ஒருநாள் தொடருக்கான தலைவராக கமிந்து மெண்டிஸ் பெயரிடப்பட்டுள்ளார்.
>> பயிற்சிப்போட்டிக்கான SLC பதினொருவர் குழாம் அறிவிப்பு
இலங்கை கிரிக்கெட் சபை இந்த தொடருக்காக அறிவித்துள்ள முதல் 22 பேர்கொண்ட குழாத்தில் நுவனிந்து பெர்னாண்டோ, சஹான் ஆராச்சிகே, தனுக தாபரே, ஷெவோன் டேனியல், ஓசத பெர்னாண்டோ, தனன்ஜய லக்ஷான், பிரவீன் ஜயவிக்ரம, லசித் எம்புல்தெனிய போன்ற முன்னணி வீரர்களை இணைத்துள்ளது.
இலங்கை A குழாம்
லசித் குரூஸ்புள்ளே, நிஷான் மதுஷ்க, லஹிரு உதார, நிபுன் தனன்ஜய (நான்கு நாள் போட்டிக்கான அணித் தலைவர்), கமிந்து மெண்டிஸ் (ஒருநாள் அணித் தலைவர்), சஹான் ஆராச்சிகே, தனுக தாபரே, ஷெவோன் டேனியல், ஓசத பெர்னாண்டோ, நுவனிந்து பெர்னாண்டோ, ஜனித் லியனகே, அம்ஷி டி சில்வா, மிலான் ரத்நாயக்க, ஷிரான் பெர்னாண்டோ, இசித விஜேசுந்தர, சமிந்து விஜேசிங்க, தனன்ஜய லக்ஷான், சுமிந்த லக்ஷான், பிரவீன் ஜயவிக்ரம, லக்சித மானசிங்க, லசித் எம்புல்தெனிய, துஷான் ஹேமந்த
மேற்குறித்த வீரர்களை இலங்கை கிரிக்கெட் சபை முதன்மை குழாமாக அறிவித்துள்ள போதும், தேசிய அணியில் விளையாடக்கூடிய சில வீரர்களும் இந்த தொடருக்காக இணைக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக நியூசிலாந்து தொடருக்கான ஆயத்தங்களை மேற்கொள்வதற்காக தேசிய அணியின் வீரர்கள் இந்த தொடரில் விளையாட முடியும் என இலங்கை கிரிக்கெட் சபை அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி உபாதைக்கு முகங்கொடுத்திருந்த குசல் ஜனித் பெரேரா மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோர் அணியில் பெயரிடப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் ஒருநாள் போட்டிகளில் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதேநேரம் அஞ்செலோ மெதிவ்ஸ், பெதும் நிஸ்ஸங்க, சரித் அசலங்க, சாமிக்க கருணாரத்ன, துனித் வெல்லாலகே, சதீர சமரவிக்ரம, லக்ஷான் சந்தகன், விஷ்வ பெர்னாண்டோ, பிரமோத் மதுசான், நுவான் துஷார, கவிஷ்க அஞ்சுல மற்றும் அவிஷ்க பெர்னாண்டோ ஆகிய வீரர்கள் இணைக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பிட்ட இந்த வீரர்கள் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான தொடரின் ஓரிரு போட்டிகளில் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஒட்டுமொத்தமாக இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான தொடருக்கு 36 வீரர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்து லயன்ஸ் மற்றும் இலங்கை A அணிகளுக்கு இடையிலான போட்டித்தொடர் எதிர்வரும் 31ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<