சுற்றுலா இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையில் நடைபெறவுள்ள ஒருநாள் தொடரில் விளையாடும் 16 பேர் அடங்கிய இங்கிலாந்து அணியின் ஒருநாள் குழாம் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
குசல் பெரேரா – தனுஷ்க குணத்திலக்கவின் அபாரத்தோடு நிறைவுற்ற பயிற்சிT20 போட்டி
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி அங்கே மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரினை நிறைவு செய்த பின் ஐ.சி.சி. இன் ஒருநாள் சுபர் லீக்கிற்காக, மீண்டும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணியுடன் விளையாடுகின்றது.
இந்த ஒருநாள் தொடர் எதிர்வரும் 29ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையிலையே இங்கிலாந்தின் ஒருநாள் அணி அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
அதன்படி அறிவிக்கப்பட்டிருக்கும் இங்கிலாந்தின் ஒருநாள் அணியில் இடதுகை வேகப்பந்துவீச்சாளரான ஜோர்ஜ் கார்டனுக்கு முதல்முறையாக வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது. இங்கிலாந்தின் சசெக்ஸ் (Sussex) பிராந்தியத்தைச் சேர்ந்த 24 வயது நிரம்பிய ஜோர்ஜ் கார்டன் மொத்தமாக 24 List-A போட்டிகளில் 29 விக்கெட்டுக்களை கைப்பற்றியவாறு ஒருநாள் போட்டிகளில் முதல்முறையாக விளையாடும் வாய்ப்பினை பெறவிருக்கின்றார்.
இலங்கைக்கு எதிரான இங்கிலாந்து T20 குழாம் அறிவிப்பு
இதேநேரம் இலங்கையுடனான T20 போட்டிகளில் உபாதை காரணமாக வாய்ப்பினை இழந்த வேகப்பந்துவீச்சாளர் ஜொப்ரா ஆர்ச்சர் மற்றும் சகலதுறைவீரர் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணியிலும் இணைக்கப்படவில்லை.
இவர்களோடு உபாதைக்கு உள்ளான ஏனைய துடுப்பாட்டவீரர்களான ஒல்லி ஸ்டோன் மற்றும் சக்கீப் மஹ்மூட் போன்ற வேகப்பந்துவீச்சாளர்களும் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளின் போதான வீரர் தெரிவுக்கு இங்கிலாந்து அணியினால் கருத்திற்கொள்ளப்படவில்லை.
உபாதைக்கு உள்ளான வீரர்கள் தவிர வழமை போன்று இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டத்துறையினை அதன் தலைவர் இயன் மோர்கன், ஜொன்னி பெயர்ஸ்டோவ் மற்றும் ஜேசன் ரோய் ஆகியோர் வலிமைப்படுத்த ஜோஸ் பட்லர், சேம் பில்லிங்ஸ் ஆகியோர் மேலதிக பலம் தருகின்றனர்.
அதேநேரம் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சுத்துறைக்கு சகலதுறைவீரரான மொயின் அலி சுழல்வீரராக பலம் சேர்க்க, ஆதில் ரஷீட்டும் தனது மணிக்கட்டு சுழல் மூலம் இலங்கை அணிக்கு நெருக்கடி உருவாக்க காத்திருக்கின்றார்.
முதல் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் மகுடம் யாருக்கு?
இவர்கள் தவிர இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சுத்துறைக்கு சேம் கர்ரன், டொம் கர்ரன் ஆகிய சகோதர ஜோடியுடன் இணைந்து கிறிஸ் வோக்ஸ் மற்றும் மார்க் வூட் போன்ற வீரர்கள் இன்னும் பெறுமதி சேர்க்கின்றனர்.
இங்கிலாந்து ஒருநாள் அணி – இயன் மோர்கன் (தலைவர்), மொயின் அலி, ஜொன்னி பெயர்ஸ்டோவ், சேம் பில்லிங்ஸ், ஜோஸ் பட்லர், சேம் கர்ரன், டொம் கர்ரன், லியாம் லிவிங்ஸ்டொன், ஆதீல் ரஷீட், ஜோ ரூட், ஜேசன் ரோய், டேவிட் வில்லி, கிறிஸ் வோக்ஸ், மார்க் வூட், ஜோர்ஜ் கார்டன், லியாம் லிவிங்ஸ்டன்
மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…