வோர்னரை அநாகரிகமாக கிண்டல் செய்த இங்கிலாந்து ரசிகர்கள்

1105
Getty

ஆஷஸ் கிரிக்கெட் தொடரின் முதல் நாளான நேற்று அவுஸ்திரேலிய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் டேவிட் வோர்னரை, இங்கிலாந்து ரசிகர்கள் கிண்டலடித்த விதம் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகின்றது. 

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் முதல் மோதலாக ஆஷஸ் தொடர் ஆரம்பம்

கிரிக்கெட் உலகில் சிறப்பு வாய்ந்த ஆஷஸ் எனப்படும் இங்கிலாந்து…

இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நேற்று (01) பேர்மிங்ஹமில் ஆரம்பமாகியது. புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஐ.சி.சி டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் முதல் போட்டியாகவும் இது அமைகின்றது.  

இதன் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. இதில் போட்டித் தடை முடிந்து மீண்டும் அணிக்கு திரும்பிய டேவிட் வோர்னர் மற்றும் கெமரூன் பென்கிராப்ட் ஆகிய இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய வோர்னர் மற்றும் பென்கிராப்ட் ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர். இங்கிலாந்து பந்துவீச்சாளர் ஸ்டுவர்ட் ப்ரோட் முதல் இன்னிங்ஸின் நான்காவது ஓவரில் வோர்னரை வெறும் 2 ஓட்டங்களுடனும், 8ஆவது ஓவரில் பென்கிராப்ட்டையும் வீழ்த்தினார். இதனால், அவுஸ்திரேலிய அணி 17 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது

இந்தப் போட்டியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டேவிட் வோர்னர் வெறும் 2 ஓட்டங்களுடன் விக்கெட்டை இழந்து வெளியேறிய போது, வோர்னர் பந்தை சேதப்படுத்திய நிகழ்வை நினைவுபடுத்தி அவரை கிண்டலடிக்கும் விதமாக இங்கிலாந்து ரசிகர்கள் தங்கள் கைகளில் உப்புக் காகிதங்களைக் தூக்கி காட்டி அவரை வழியனுப்பி வைத்தனர்

அத்துடன், அதே வோர்னர், எப்போதும் ஏமாற்றுக்காரர் என சொல்லி  (Same Old Warner, always cheating) அனைவரும் பாடல் ஒன்றையும் மைதானத்தில் பாடியிருந்தனர்.

இங்கிலாந்து ரசிகர்களின் இந்த செயலுக்கு சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் வலுத்து வருவதுடன், கிரிக்கெட் விமர்சகர்களும் தமது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்

அண்மையில் நிறைவுக்கு வந்த உலகக் கிண்ணப் போட்டியின் போது இங்கிலாந்து ரசிகர்கள் ஸ்மித் மற்றும் வோர்னரை மைதானத்தில் வைத்து கேலி செய்திருந்தமை தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இலங்கை – நியூசிலாந்து போட்டி அட்டவணையில் மாற்றம்

நியூசிலாந்து அணியின் இலங்கைக்கான சுற்றுப்பயணத்தின் போட்டி அட்டவணையில்…

எனினும், அந்தத் தொடரில் துடுப்பாட்டத்தில் பிரகாசித்த வோர்னர் 647 ஓட்டங்களையும், ஸ்மித் 379 ஓட்டங்களையும் குவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

முன்னதாக, 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் உப்புக் காகிதங்களைக் கொண்டு பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவரான ஸடீவ் ஸ்மித், டேவிட் வோர்னர் ஆகியோருக்கு ஒரு வருட போட்டித் தடையையும் கெமரூன் பென்கிராப்டுக்கு 9 மாத போட்டித் தடையையும் விதிக்க அந்நாட்டு கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்திருந்தது.

இதன்படி, குறித்த மூன்று வீரர்களும் போட்டித் தடைக்குப் பின்னர் மீண்டும் உள்ளூர் போட்டிகளில் விளையாடி வந்ததுடன், ஸ்மித் மற்றும் வோர்னர் .பி.எல் போட்டித் தொடரிலும் பென்கிராப்ட் கவுண்டி போட்டியிலும் விளையாடி தமது மீள்வருகையை உறுதிப்படுத்திக் கொண்டதால் அவுஸ்திரேலிய டெஸ்ட் அணியில் மீண்டும் இடம்பிடித்தனர்.  

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<