இலங்கையின் இயற்கை அழகை இரசிக்கும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி

2630

ஒரு நாள் போட்டிகள், டெஸ்ட் போட்டிகள் மற்றும் T20 போட்டி ஆகியவை கொண்ட தொடர்களில் விளையாடுவதற்காக இங்கிலாந்து கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது.  

இந்த சுற்றுப் பயணத்தின் முதற்கட்டமாக இலங்கை – இங்கிலாந்து அணிகள் இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரும் தற்போது தம்புள்ளையில்  இடம்பெற்று வருகின்றது. ஆனால், இங்கே நாம் இந்த இருதரப்பு தொடர் பற்றிய எந்த செய்திகளையும் பார்க்கப் போவதில்லை.

மைதான ஈரத்தன்மை காரணமாக கைவிடப்பட்ட முதல் ஒருநாள் போட்டி

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் …

இந்து சமுத்திரத்தின் முத்து என அழைக்கப்படும் இலங்கைத் தீவானது சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் ஆசியாவின் மிக முக்கிய கேந்திர நிலையமாகும்.  

பல்வேறு வகையான கடற்கரைகள், வனப் பிரதேசங்கள், மலைக் குன்றுகள் என்பவற்றினால் அலங்கரிக்கப்பட்டு சுவனபுரி போன்று காணப்படும் இந்த அழகிய தீவினை விருந்தாளிகளாக வந்திருக்கும் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வீரர்களும் தரிசித்து வருகின்றனர்.

இலங்கையின் மத்திய மாகாணத்தில் அமைந்திருக்கும் தம்புள்ளையில், கடந்த புதன்கிழமை (10) இலங்கை – இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கிடையே நடைபெற்ற ஒரு நாள் போட்டி மழையினால் கைவிடப்பட்டிருந்தது. இதற்கு அடுத்த நாளில், இங்கிலாந்து வீரர்களின் ஒரு குழு தம்புள்ளையின் வனப் பிரதேசங்களுக்கு சவாரி (Safari) செய்திருந்ததுடன், ரம்மியமான பல காட்சிகளையும் கண்டுகளித்திருந்தனர்.

அவ்வாறு அணியி வீரர்கள் வனப் பகுதிக்கு சவாரி செய்யும்பொழுது பிடித்த புகைப்படங்களும் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகின்றன.

Driver’s had a stinker! Need a hand, lads? ?

14.8k Likes, 44 Comments – We Are England Cricket …

இங்கிலாந்து அணியினர் வீரர்கள் குழுவாக சென்று இலங்கையின் அழகை ஆராதனை செய்த இதே தருணத்தில் அவ்வணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான ஜோனி பெயர்ஸ்டோவ்  சீகிரிய குன்றுக்கு சென்று அங்கே 1,202 படிகள் ஏறியுள்ளார். சீகிரிய குன்றில் ஏறியதனை தனது இன்ஸ்டாக்ரம் கணக்கில் பதிவு செய்திருந்த பெயர்ஸ்டோவ், அது அவரது சிறந்த அனுபவங்களில் ஒன்று எனக் குறிப்பிட்டிருந்தார்.

Lovely morning walking up the historical Pidurangala Rock, Sigiriya, 1202 steps but what amazing history and some stunning views. #sigiriyarock #history #palace #walk #tourist #tourism #srilanka #travel #morning #job #dayoffvibes

6,616 Likes, 56 Comments – Jonny Bairstow (@jbairstow21) on…

இப்படியாக, கிரிக்கெட் விளையாட வந்திருக்கும் இங்கிலாந்து அணியினர் இலங்கையின் தரிசிப்பதன் மூலம் அழகிய நினைவுகளை உருவாக்கி கொள்கின்றனர்.

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க