தற்போது நடபெற்றுவரும் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் விளையாடிய இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய இரு அணிகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
கவுன்டி கிரிக்கெட்டில் களமிறங்கும் அஜிங்கியா ரஹானே
ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி செவ்வாய்க்கிழமை (20) இங்கிலாந்தின் பர்மிங்கம் நகரில் நிறைவுக்கு வந்தது. இந்தப் போட்டியில் 2 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது. இவ்வாறான நிலையில், அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு அணிகளும் மந்த கதியில் ஓவர்களை வீசியதற்காக அபராதம் விதிக்கப்பட்டிருக்கின்றது.
இங்கிலாந்து – அவுஸ்திரேலிய டெஸ்ட் போட்டியின் மத்தியஸ்தராக இருந்த என்டி பைக்ரோப்ட் அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரண்டு அணிகளும் வழங்கப்பட்ட நேரத்திற்குள் 02 ஓவர்கள் குறைவாக வீசியிருந்தன என குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்திருந்ததோடு, இந்த குற்றச்சாட்டை இரு அணிகளது தலைவர்களும் எந்தவித மறுப்புக்களும் இன்றி ஒப்புக் கொண்டிருந்தனர்.
இந்த குற்றச்சாட்டினை ஒப்புக் கொண்டதுக்கு அமைய இரண்டு அணிகளது வீரர்களுக்கும் அவர்களது போட்டிக் கட்டணத்தில் 40% அபராதமாக விதிக்கப்பட்டிருக்கின்றது. அத்துடன் ஆஷஸ் தொடர் புதிய பருவத்திற்கான ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரிலும் அடங்குவதன் காரணமாக இரு அணிகளுக்கும் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்காக வழங்கப்படும் புள்ளிகளிலும் இரண்டு புள்ளிகள் குறைக்கப்பட்டிருக்கின்றது.
LPL 2023 தொடரில் களமிறங்கும் தமிழ் பேசும் வீரர்கள்
இதேவேளை, இந்தப் போட்டியில் ஐந்து நாட்களும் துடுப்பாடியிருந்த அவுஸ்திரேலிய அணியின் ஆரம்பவீரரான உஸ்மான் கவாஜா டெஸ்ட் போட்டிகளில் 5 நாட்களும் துடுப்பாடிய இரண்டாவது அவுஸ்திரேலிய அணி வீரராக சாதனை படைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<