ஆஷஸ் டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டியில் விளையாடும் 14 பேர் அடங்கிய இங்கிலாந்து குழாம் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் மூன்று போட்டிகளும் நிறைவடைந்து தொடர் 2-1 என அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி முன்னிலை பெற்றுள்ள நிலையில் தொடரின் நான்காவது போட்டியானது எதிர்வரும் 19ஆம் திகதி மன்செஸ்டர் நகரில் ஆரம்பமாகின்றது.
>>பயிற்சியாளரின் பதவிக் காலத்தினை நீடிக்கும் நியூசிலாந்து கிரிக்கெட்
இந்த டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டியில் ஆடும் இங்கிலாந்து வீரர் குழாமே தற்போது அறிவிக்கப்பட்டிருக்கின்றது. அதன்படி இந்த குழாத்தில் உபாதைச் சிக்கல்கள் காரணமாக ஓய்வு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த வேகப்பந்துவீச்சாளர் ஒல்லி ரொபின்சன் உள்ளடக்கப்பட்டிருக்கின்றார்.
இதேநேரம் ஆஷஸ் தொடரின் நான்காவது போட்டி இங்கிலாந்தின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் அன்டர்சனின் இறுதி டெஸ்ட் போட்டியாக இருக்கும் என நம்பப்படுவதோடு, அவர் அப்போட்டியினை அடுத்து டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெறலாம் குறிப்பிடப்படுகின்றது. எனினும் இது தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவிப்புக்கள் எதுவும் இன்னும் வெளியிடப்படவில்லை.
இங்கிலாந்து அணிக்காக இதுவரை 181 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள 40 வயது நிரம்பிய ஜேம்ஸ் அன்டர்சன் இதுவரை 688 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருக்கின்றார். அன்டர்சன் எனினும் இங்கிலாந்து – அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியில் ஆடியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து குழாம்
பென் ஸ்டோக்ஸ் (தலைவர்), மொயின் அலி, ஜேம்ஸ் அன்டர்சன், ஜொன்னி பெயர்ஸ்டோவ், ஸ்டுவார்ட் புரோட், ஹர்ரி புரூக், ஜேக் கிராவ்லி, பென் டக்கட், டான் லோரன்ஸ், ஒல்லி ரொபின்சன், ஜோ ரூட், ஜோஸ் டன்க், கிறிஸ் வோக்ஸ், மார்க் வூட்
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<