வெறும் 58 ஓட்டங்களுக்கு சுருண்ட இங்கிலாந்து

413
England all out for 58
@AFP

நியூஸிலாந்துக்கு எதிராக இன்று (22) ஆரம்பமான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெறுமனே 58 ஓட்டங்களுக்கு சுருண்டது. இது அந்த அணி டெஸ்ட் வரலாற்றில் பெறும் 6ஆவது மிகக் குறைந்த ஓட்டங்களாகப் பதிவாகியுள்ளது.  

அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆஷஸ் தொடரில் 4-0 என தோல்வி அடைந்த பின்னர் ஆடும் முதல் போட்டியான இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணி போட்டி ஆரம்பித்து ஒரு மணி மற்றும் 35 நிமிடத்திற்குள் 20.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இங்கிலாந்து அணி

இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது இந்த ஆண்டு…

ஒக்லாந்து, ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியின் ஒரு சந்தர்ப்பத்தில் இங்கிலாந்து அணி 27 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுகளை பறிகொடுத்து 130 ஆண்டுகளின் பின் தனது மிகக் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்கும் நெருக்கடியை சந்தித்தது.

எனினும் கிரேக் எவர்டன் 33 ஓட்டங்களை பெற இங்கிலாந்து அணி டெஸ்ட் வரலாற்றில் பெற்ற தனது மிகக் குறைந்த ஓட்டங்களான 45 ஓட்டங்களை கடந்தது. அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 1887ஆம் ஆண்டு சிட்னி நகரில் இங்கிலாந்து இந்த குறைந்த ஓட்டங்களை பெற்றது.

இன்றைய ஆட்டத்தின்போது, நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான டிரென்ட் போல்ட் மற்றும் டிம் சௌதி ஆகியோர் அதிகம் ‘சுவிங்’ ஆகும் ஆடுகளத்தை பயன்படுத்தி முறையே 6 மற்றும் 4 விக்கெட்டுகளை விழ்த்தினர்.

இதில் இங்கிலாந்து அணி எவரும் எதிர்பார்க்காத வகையில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்திருந்தது. இதன்போது இங்கிலாந்து அணியின் ஐந்து வீரர்கள் பூஜ்யத்திற்கே வெளியேறினர். அதாவது இன்னிங்ஸ் ஒன்றில் அதிக விரர்கள் டக் அவுட் ஆன சாதனையை இங்கிலாந்து சமன் செய்தது. இதற்கு முன்னர் மூன்று சந்தர்ப்பங்களில் மாத்திரமே ஐந்து வீரர்கள் ஓட்டமின்றி ஆட்டமிழந்திருப்பதோடு, இவ்வாறான நிகழ்வு இதற்கு முன்னர் கடைசியாக மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 1976ஆம் ஆண்டே நடந்தது.

அதேபோன்று இங்கிலாந்து அணி 20.4 ஓவர்களுக்கே முகம் கொடுத்தது. எனவே, அந்த அணி 1900ஆம் ஆண்டு தொடக்கம் டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றில் ஆடிய மூன்றாவது மிகக் குறைந்த ஓவர்களாகவும் இது இருந்தது. அதேபோன்று 1950ஆம் ஆண்டு தொடக்கம் அணி ஒன்று மிகக் குறைவான ஓவர்களுக்கு முகம்கொடுத்த 8ஆவது சந்தர்ப்பமாகவும் இது பதிவாகியுள்ளது.

மழையின் உதவியோடு மேற்கிந்திய தீவுகள் உலகக் கிண்ணத்திற்கு தகுதி

ஸ்கொட்லாந்துக்கு எதிரான போட்டியில் மழை…

குறிப்பாக இந்த போட்டியில் கிரேக் எவர்டன் மற்றும் ஜேம்ஸ் அன்டர்சன் ஜோடி 10ஆவது விக்கெட்டுக்கு பெற்ற 31 ஓட்ட இணைப்பாட்டம் மூலமே இங்கிலாந்து அணியால் தனது கௌரவத்தை சற்றேனும் காத்துக் கொள்ள முடிந்தது.

அதாவது இங்கிலாந்து அணியின் எஞ்சிய 9 விக்கெட்டுகளும் சேர்ந்து 27 ஓட்டங்களை பெற்ற நிலையில், கடைசி விக்கெட்டுக்கு அதனை விட கூடிய ஓட்ட இணைப்பாட்டம் பெறப்பட்டது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இவ்வாறு நிகழ்வது இது பத்தாவது தடவையாகும்.

இங்கிலாந்தின் மிகக் குறைந்த டெஸ்ட் ஓட்டங்கள்

45 எதிர் அவுஸ்திரேலியா, சிட்னி – 1887
46 எதிர் மேற்கிந்திய தீவுகள், போர்ட் ஸ்பெயின் – 1994
51 எதிர் மேற்கிந்திய தீவுகள், கிங்ஸ்டன் – 2009
52 எதிர் அவுஸ்திரேலியா, ஓவல் – 1948
53 எதிர் அவுஸ்திரேலியா, லோட்ஸ் – 1888
58 எதிர் நியூசிலாந்து, ஒக்லாந்து, 2018

>> மேலும் பல சுவையான கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<