நெதர்லாந்து கிரிக்கெட் அணியின் தென்னாபிரிக்க வம்சாவளி வீரர் ஓய்வு

153

நெதர்லாந்து கிரிக்கெட் அணிக்காக ஆடி வந்த தென்னாபிரிக்க வம்சாவளி வீரரான 35 வயது நிரம்பிய சைபான்ட் எங்கிள்பிராச்ட் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடை பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ஆறுதல் வெற்றியுடன் T20 உலகக் கிண்ணத்தினை நிறைவு செய்த இலங்கை

ஜோஹன்னஸ்பேர்க்கினை பிறப்பிடமாகக் கொண்ட சைபான்ட் எங்கிள்பிராச்ட் தென்னாபிரிக்க 19 வயதின் கீழ் அணியின் முன்னாள் வீரராவர். 2016ஆம் ஆண்டு தொழில்முறை கிரிக்கெட்டுக்கு பிரியாவிடை கொடுத்த அவர் அதன் பின்னர் நெதர்லாந்துக்கு குடிபெயர்ந்து அங்கே வியாபார முகாமைத்துவ செயற்திட்டம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார் 

கிரிக்கெட்டில் இருந்த ஆர்வம் காரணமாக சைபான்ட் நெதர்லாந்தில் மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் ஆடத் தொடங்கியதோடு, அது இறுதியில் 2023ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் நெதர்லாந்து அணியினை பிரநிதித்துவம் செய்யும் வாய்ப்பினை அவருக்கு ஏற்படுத்திக் கொடுத்தது 

ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் 300 ஓட்டங்களை குவித்திருந்த சைபான்ட் எங்கிள் பிராச்ட் நெதர்லாந்து அணிக்காக நெதர்லாந்து கிரிக்கெட் அணிக்கு கிடைத்த பெறுமதிமிக்க வீரர்களில் ஒருவராக காணப்பட்டிருந்தார் 

அதனையடுத்து இந்த ஆண்டே T20I போட்டிகளில் அறிமுகம் பெற்ற இவர் தற்போது நெதர்லாந்து அணி விளையாடிய  T20 உலகக் கிண்ணத் தொடரின் பின்னர் ஓய்வு அறிவிப்பினை வெளியிட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது 

தனது குறுகிய சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் சைபான்ட் எங்கிள்பிராச்ட் நெதர்லாந்து அணிக்காக 12 ஒருநாள் மற்றும் T20 போட்டிகளில் ஆடியிருக்கின்றமை குறிப்பிடத்தக்க வியமாகும். அத்துடன் இவர் T20 உலகக் கிண்ணத் தொடரில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் தனது களத்தடுப்பிற்காக அனைவர் மூலமும் பாராட்டப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது. 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<