யூனிஸ் இரட்டை சதம், இங்கிலாந்து அணி தடுமாற்றத்தில்

257
Eng vs Pak Day 3

இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கட் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாட்டம் செய்த இங்கிலாந்து அணி மொயீன் கான் சதத்தால் முதல் இனிங்ஸில் 328 ஓட்டங்கள் குவித்தது.

பின்னர் பாகிஸ்தான் அணி முதல் இனிங்ஸைத் தொடங்கியது. அந்த அணியின் ஆசாத் ஷபிக், யூனிஸ்கான் ஆகியோர் அபாரமாக விளையாடி சதம் அடித்தனர். இருவரின் சதத்தால் பாகிஸ்தான் அணி 2-வது நாள் ஆட்ட முடிவில் 6 விக்கட்டுகள் இழப்பிற்கு 340 ஓட்டங்கள் சேர்த்திருந்தது.

யூனிஸ்கான் 101 ஓட்டங்களுடனும், சர்பிராஷ் கான் 17 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர். இன்று 3ஆவது நாள் ஆட்டம் தொடங்கியது. சர்பிராஷ் கான் 44 ஓட்டங்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். யூனிஸ்கான் திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

மற்ற வீரர்கள் ஆட்டமிழந்தாலும் யூனிஸ்கான் மனம் தளறாமல் விளையாடினார். இதனால் தனது இரட்டை சதத்தைப் பூர்த்தி செய்தார். இது அவரது 6ஆவது இரட்டை இரட்டை சதம் ஆகும். இவரது இரட்டை  சதத்தால் பாகிஸ்தான் முதல் இனிங்ஸில் 542 ஓட்டங்கள் குவித்து சகல விக்கட்டுகளையும்இ ழந்ததுயூனிஸ்கான் 218 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்இங்கிலாந்து அணி தரப்பில் பின், வோக்ஸ் தலா 3 விக்கட்டுகளை வீழ்த்தினார்கள்.

பின்னர் 214 ஓட்டங்கள் பின்னிலையில் இங்கிலாந்து அணி தமது 2ஆவது இனிங்ஸைத் தொடர்ந்தது. அந்த அணி 3ஆவது நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கட்டுகளை இழந்து 88 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் தடுமாறி வருகிறது. இங்கிலாந்து அணியின் 2ஆவது இனிங்ஸில் ஜோ ரூட் 39 ஓட்டங்களைப் பெற்றார். ஆடுகளத்தில் ஜொனி பெயர்ஸ்டோ 17 ஓட்டங்களோடும் கெரி பெலன்ஸ் 4 ஓட்டங்களோடும்  ஆட்டம் இழக்காமல் இருந்தனர். பாகிஸ்தான் அணியின் யசீர் ஷா 3 விக்கட்டுகளை வீழ்த்தி இருந்தார். இங்கிலாந்து அணி 6 விக்கட்டுகள் கையிருப்பில் இருக்க 126 ஓட்டங்கள் பாகிஸ்தானை விடப் பின்னிலையில் உள்ளது.

போட்டியின் சுருக்கம்

இங்கிலாந்து – 328

மொயீன் அலி 108, அலஸ்டயர் குக் 35, ஜோ ரூட் 26, பேர்ஸ்டோ 55, கிறிஸ் வோக்ஸ் 45, சுஹைல் கான் 68/5, வஹாப் ரியாஸ் 93/3, முஹமத் அமீர் 80/2

பாகிஸ்தான் – 542/10

யூனுஸ் கான் 218, அசாத் ஷபீக் 109, அசார் அலி 49, சர்ப்பராஸ் அஹமத் 44, முஹமத் அமீர் 39*, ஸ்டிவன் பின் 71/2, க்றிஸ் வோக்ஸ் 52/2

இங்கிலாந்து 88/4

ஜோ ரூட் 39, ஜொனி பெயர்ஸ்டோ 17 , யசீர் ஷா 15/3

இங்கிலாந்து அணி பாகிஸ்தானை விட 126 ஓட்டங்கள் பின்னிலையில்