ஓமானில் நடைபெற்றுவரும் வளர்ந்துவரும் அணிகளுக்கு இடையிலான ஆசியக்கிண்ணத் தொடரில் தங்களுடைய இரண்டாவது போட்டியில் இலங்கை வளர்ந்துவரும் அணி 42 ஓட்டங்களால் இலகு வெற்றியை பெற்றது.
ஹொங் கொங் அணிக்கு எதிரான இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி யசோத லங்காவின் அரைச்சதம், ரமேஷ் மெண்டிஸ் மற்றும் சஹான் ஆராச்சிகே ஆகியோரின் வேகமான ஓட்டக்குவிப்புடன் 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 178 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
>>இலங்கை அணிக்காக ஒருநாள் அறிமுகம் பெறும் நிஷான் மதுஷ்க<<
யசோத லங்கா 44 பந்துகளில் 56 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன், ரமேஷ் மெண்டிஸ் 12 பந்துகளில் 24 ஓட்டங்களையும், சஹான் ஆராச்சிகே 15 பந்துகளுக்கு 23 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்டனர். இவர்களுடன் நுவனிது பெர்னாண்டோ 25 ஓட்டங்கள் மற்றும் பவன் ரத்நாயக்க 23 ஓட்டங்கள் என பெற்றுக்கொண்டனர். பந்தவீச்சில் அடீக் இக்பால் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஹொங் கொங் அணியின் துடுப்பாட்ட வீரர்கள் ஓட்டங்களை பெற முயற்சித்த போதும், அணிக்கு தேவையான வேகத்தில் ஓட்டங்களை பெறமுடியவில்லை. 59 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய ஹொங் கொங் அணிக்காக யசீம் மொர்டஷா வேகமாக ஓட்டங்களை பெற்றார்.
மொர்டஷா 31 பந்துகளில் 44 ஓட்டங்களை பெற்று இன்னிங்ஸின் இறுதியில் ஆட்டமிழக்க, இவரையடுத்து பாபர் அயாட் மாத்திரம் 38 ஓட்டங்களை பெற்றார். இவர்களை தவிர்த்து ஏனைய வீரர்கள் பங்களிப்பை வழங்கத்தவற ஹொங் கொங் அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 136 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
இலங்கை அணியின் பந்துவீச்சில் நிபுன் ரன்சிக 3 விக்கெட்டுகளையும், எசான் மாலிங்க 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இலங்கை அணியின் பந்துவீச்சில் பிரகாசித்திருந்தனர்.
முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக தோல்வியடைந்த இலங்கை அணி இரண்டாவது போட்டியில் 42 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவுசெய்துள்ளது. தங்களுடைய மூன்றாவது போட்டியில் பங்களாதேஷ் A அணியை எதிர்வரும் 22ம் திகதி இலங்கை அணி எதிர்கொள்ளவுள்ளது.
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Yashodha Lanka | c Anshuman Rat b Aizaz Khan | 56 | 44 | 3 | 2 | 127.27 |
Lahiru Udara | b Ateeq Iqbal | 14 | 9 | 1 | 1 | 155.56 |
Nuwanidu Fernando | c Babar Hayat b Ateeq Iqbal | 25 | 18 | 2 | 1 | 138.89 |
Pavan Rathnayake | st Zeeshan Ali b Yasim Murtaza | 23 | 21 | 1 | 1 | 109.52 |
Sahan Arachchige | not out | 23 | 15 | 0 | 1 | 153.33 |
Ahan Wickramasinghe | lbw b Ehsan Khan | 1 | 2 | 0 | 0 | 50.00 |
Ramesh Mendis | not out | 24 | 12 | 0 | 2 | 200.00 |
Extras | 12 (b 0 , lb 5 , nb 1, w 6, pen 0) |
Total | 178/5 (20 Overs, RR: 8.9) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Ayush Shukla | 2 | 0 | 20 | 0 | 10.00 | |
Ateeq Iqbal | 4 | 0 | 26 | 2 | 6.50 | |
Ehsan Khan | 4 | 0 | 34 | 1 | 8.50 | |
Yasim Murtaza | 4 | 0 | 31 | 1 | 7.75 | |
Nasrulla Rana | 4 | 0 | 45 | 0 | 11.25 | |
Aizaz Khan | 2 | 0 | 17 | 1 | 8.50 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Zeeshan Ali | b Eshan Malinga | 18 | 14 | 1 | 1 | 128.57 |
Anshy Rath | b Sahan Arachchige | 6 | 10 | 0 | 0 | 60.00 |
Nizakat Khan | c Ramesh Mendis b Nipun Ransika | 11 | 7 | 2 | 0 | 157.14 |
Babar Hayat | b Nipun Ransika | 38 | 41 | 1 | 1 | 92.68 |
Aizaz Khan | lbw b Eshan Malinga | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Martin Coetzee | st Lahiru Udara b Dushan Hemantha | 15 | 12 | 1 | 1 | 125.00 |
Yasim Murtaza | c Lahiru Udara b Nipun Ransika | 44 | 31 | 0 | 4 | 141.94 |
Nasrulla Rana | not out | 1 | 3 | 0 | 0 | 33.33 |
Ehsan Khan | not out | 1 | 1 | 0 | 0 | 100.00 |
Extras | 2 (b 0 , lb 1 , nb 0, w 1, pen 0) |
Total | 136/7 (20 Overs, RR: 6.8) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Nimesh Vimukthi | 4 | 0 | 33 | 0 | 8.25 | |
Sahan Arachchige | 2 | 0 | 9 | 1 | 4.50 | |
Nipun Dhananjaya | 3 | 0 | 17 | 3 | 5.67 | |
Eshan Malinga | 4 | 0 | 20 | 2 | 5.00 | |
Dushan Malinga | 4 | 0 | 37 | 1 | 9.25 | |
Ramesh Mendis | 3 | 0 | 19 | 0 | 6.33 |
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<