ஆசிய கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் ஓமானில் நடைபெற்று வரும் வளர்ந்துவரும் அணிகளுக்கு இடையிலான ஆசியக்கிண்ணத் தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்துள்ளது.
ஆப்கானிஸ்தான் வளர்ந்துவரும் அணிக்கு எதிராக நடைபெற்ற இந்தப் போட்டியில் இலங்கை அணி கடைசிவரை போராடியும் 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
>> மேற்கிந்திய தீவுகள் தொடருக்கான இலங்கை ஒருநாள் குழாம் அறிவிப்பு
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான ஷுபைட் அக்பர் மற்றும் சித்திக்குல்லாஹ் அதால் ஆகியோர் 142 ஓட்டங்களை பகிர்ந்தனர்.
ஷுபைட் அக்பர் 54 பந்துகளில் 57 ஓட்டங்களையும், சித்திக்குல்லாஹ் அதால் 83 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்த பின்னர், இலங்கை அணிக்காக துஷான் ஹேமந்த அற்புதமாக பந்துவீசினார். இவர் 4 ஓவர்களில் 23 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை சாய்த்தார்.
துஷான் ஹேமந்தவின் இந்த அற்புதமான பந்துவீச்சுக்கு மத்தியில் தடுமாறிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 166 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியின் முதல் விக்கெட் 8 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டது. எனினும் அணித்தலைவர் நுவனிது பெர்னாண்டோ வேகமாக ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க மறுமுனையில் சரியான பங்களிப்புகளை துடுப்பாட்ட வீரர்கள் பெற்றுக்கொடுக்கவில்லை.
வேகமாக துடுப்பெடுத்தாடிய நுவனிது பெர்னாண்டோ 32 பந்துகளுக்கு 51 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, மறுமுனையில் துடுப்பாட்ட வீரர்கள் தடுமாறினர். இறுதியாக அஹான் விக்ரமசிங்க 18 பந்துகளில் 31 ஓட்டங்களை பெற்று நம்பிக்கை கொடுத்த போதும், அவரின் ஆட்டமிழப்பின் பின்னர் இலங்கை அணி தேவையான ஓட்டங்களை பெறத்தவறியது.
>> அபுதாபி T10 லீக் தொடரில் மொத்தம் 21 இலங்கை வீரர்கள்
எனவே இலங்கை அணி 19.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 155 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன், 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. பந்துவீச்சில் பரீதுன் தவூட்ஷாய் 40 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இலங்கை வளர்ந்துவரும் அணி தங்களுடைய இரண்டாவது போட்டியில் ஹொங் கொங் அணியை நாளை ஞாயிற்றுக்கிழமை (20) எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Zubaid Akbari | run out (Sahan Arachchige) | 57 | 54 | 4 | 0 | 105.56 |
Sediqullah Atal | c Sahan Arachchige b Dushan Hemantha | 83 | 46 | 2 | 7 | 180.43 |
Darwish Rasooli | c Kamindu Mendis b Dushan Hemantha | 3 | 5 | 0 | 0 | 60.00 |
Karim Janat | st Lahiru Udara b Dushan Hemantha | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Sharafuddin Ashraf | st Lahiru Udara b Dushan Hemantha | 12 | 8 | 1 | 0 | 150.00 |
Shahidullah | c Pavan Rathnayake b Dushan Hemantha | 1 | 4 | 0 | 0 | 25.00 |
Mohammad Ishaq | not out | 1 | 1 | 0 | 0 | 100.00 |
Nangeyalia Kharote | c Pavan Rathnayake b Dushan Hemantha | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Extras | 9 (b 1 , lb 2 , nb 0, w 6, pen 0) |
Total | 166/7 (20 Overs, RR: 8.3) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Sahan Arachchige | 4 | 0 | 20 | 0 | 5.00 | |
Ramesh Mendis | 3 | 0 | 38 | 0 | 12.67 | |
Isitha Wijesundera | 2 | 0 | 21 | 0 | 10.50 | |
Nipun Dhananjaya | 3 | 0 | 29 | 0 | 9.67 | |
Eshan Malinga | 4 | 0 | 32 | 0 | 8.00 | |
Dushan Hemantha | 4 | 0 | 23 | 6 | 5.75 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Yashodha Lanka | c Mohammad Ishaq b Faridoon Dawoodzai | 15 | 12 | 2 | 0 | 125.00 |
Lahiru Udara | c Shahidullah b AM Ghazanfar | 6 | 8 | 1 | 0 | 75.00 |
Nuwanidu Fernando | run out (Darwish Rasooli) | 51 | 32 | 6 | 1 | 159.38 |
Pavan Rathnayake | c Nangeyalia Kharote b Sharafuddin Ashraf | 12 | 21 | 0 | 0 | 57.14 |
Sahan Arachchige | b AM Ghazanfar | 13 | 9 | 0 | 1 | 144.44 |
Ahan Wickramasinghe | c AM Ghazanfar b Bilal Sami | 31 | 18 | 3 | 0 | 172.22 |
Isitha Wijesundera | run out (Mohammad Ishaq ) | 5 | 6 | 1 | 0 | 83.33 |
Ramesh Mendis | c Qais Ahmed b Faridoon Dawoodzai | 2 | 3 | 0 | 0 | 66.67 |
Dushan Hemantha | lbw b Faridoon Dawoodzai | 6 | 2 | 0 | 1 | 300.00 |
Nipun Dhananjaya | b Bilal Sami | 6 | 5 | 0 | 1 | 120.00 |
Eshan Malinga | not out | 0 | 0 | 0 | 0 | 0.00 |
Extras | 8 (b 5 , lb 0 , nb 0, w 3, pen 0) |
Total | 155/10 (19.3 Overs, RR: 7.95) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Bilal Sami | 3.3 | 0 | 19 | 2 | 5.76 | |
AM Ghazanfar | 3 | 0 | 19 | 2 | 6.33 | |
Faridoon Dawoodzai | 4 | 0 | 40 | 3 | 10.00 | |
Nangeyalia Kharote | 2 | 0 | 24 | 0 | 12.00 | |
Sharafuddin Ashraf | 4 | 0 | 20 | 1 | 5.00 | |
Karim Janat | 3 | 0 | 28 | 0 | 9.33 |
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<