கரேத் பேல் கடைசி நேரத்தில் போட்ட அபார கோல் மூலம் லா லிகா சம்பியன் பார்சிலோனா அணியுடனான எல் கிளாசிக்கோ போட்டியை ரியெல் மெட்ரிட் அணி 2-2 என்று கோல் கணக்கில் சமநிலையில் முடித்துக் கொண்டது.
ஸ்பெயினின் கடும் போட்டி கொண்ட இரு அணிகளுக்கு இடையில் நடைபெற்ற விறுவறுப்பான இந்த போட்டியில் எட்டு மஞ்சள் அட்டைகள் மற்றும் ஒரு சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டது. செர்கி ரொபார்டோ சிவப்பு அட்டை பெற்று வெளியேறியதால் பார்சிலோனா 10 வீரர்களுடனேயே இரண்டாவது பாதி ஆட்டத்தில் ஆடியது.
தோல்வியுறாத அணியாக லா லிகா பட்டத்தை வென்றது பார்சிலோனா
லியோனல் மெஸ்ஸியின் ஹட்ரிக் கோல் மூலம் டிபோர்டிவோ லா கோருனா அணிக்கு எதிராக 4-2 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி………
இந்த போட்டியை சமன் செய்ததன் மூலம் பார்சிலோனா அணி இந்த பருவத்தின் லா லிகா தொடரில் தோல்வியுறாத அணி என்ற சாதனையை தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டது.
ஏற்கனவே லா லிகா புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை உறுதி செய்து சம்பியனான பார்சிலோனா, தனது சொந்த மைதானமான கேம்ப் நவ்வில் ரியெல் மெட்ரிட்டை நெருக்கடி இன்றியே எதிர்கொண்டது. இதன்மூலம் கடந்த ஒரு தசாப்தத்தில் எல் கிளசிக்கோ என்று அழைக்கப்படும் பார்சிலோனா மற்றும் ரியெல் மெட்ரிட் அணிகளுக்கு இடையிலான போட்டி ஒன்று கிண்ணத்தை வெல்வதற்கான ஆட்டமாக இருக்காதது இதுவே முதல் முறையாகும்.
எனினும், பொதுவாக இரு அணிகளுக்கும் இடையிலான போட்டியின் போதும் இருக்கும் பரபரப்பு இந்த ஆட்டத்தில் கொஞ்சமும் குறைந்திருக்கவில்லை. போட்டி ஆரம்பிக்கும் முன்னர் சம்பிரதாயமாக சம்பியன் அணிக்கு எதிரணி வரிசையாக நின்று வழங்கும் கௌரவத்தை ரியெல் மெட்ரிட் இந்த ஆட்டத்தில் வழங்கவில்லை.
‘அவர்கள் எமக்கு அந்த கௌரவத்தை வழங்காததால் நாம் அவர்களுக்கு அதனை செய்யப்போவதில்லை‘ என்று ரியெல் மெட்ரிட் முகாமையாளர் சினேடின் சிடேன் குறிப்பிட்டார்.
கடந்த டிசம்பரில் கழக உலகக் கிண்ணத்தை வென்ற ரியெல் மெட்ரிட் அணிக்கு அதற்கு பின்னர் நடந்த எல் கிளாசிக்கு போட்டியில் பார்சிலோனா அணி கௌரவம் அளிக்காததற்கு பதில் நடவடிக்கையாகவே ரியெல் மெட்ரிட் இவ்வாறு செய்தது.
ரியெல் மெட்ரிட்டுடனான இறுதிப் போட்டிக்கு லிவர்பூல் தகுதி
இத்தாலியின் ரோமா கழகத்திடம் இரண்டாம் கட்ட அரைறுதியில் 4-2 என்ற கோல் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்த லிவர்பூல் அணி, முதல்……
இந்நிலையில் பரபரப்புடன் ஆரம்பித்த போட்டியின் 10ஆவது நிமித்தில் வைத்து பார்சிலோனா வீரர்கள் அழகாக கடத்தி வந்த பந்தை செர்கி ரொபார்டோவின் உதவியுடன் லுவிஸ் சுவரஸ் கோலாக மாற்றினார். இதன்மூலம் பார்சிலோ அணியால் 1-0 என முன்னிலை பெற முடிந்தபோதும் 5 நிமிடங்களுக்குள்ளேயே கிறிஸ்டியானோ ரொனால்டோ பதில் கோல் புகுத்தினார்.
எதிரணியின் பெனால்டி எல்லைக்குள் பந்தை வேகமாக கடத்தி வந்து கரிம் பென்சமாவிடம் பரிமாற்றியபோது அவர் பந்தை தலையால் முட்ட கோல் கம்பத்தின் மிக அருகில் வைத்து ரொனால்டோ அதனை கோலாக மாற்றினார்.
எனினும் இந்த கோல் அடித்தபோது போர்த்துக்கல்லின் ரொனால்டோவுக்கு கணுக்கால் பகுதியில் சிரமம் ஏற்பட்டதால் அவர் முதல் பாதி முடிவுடன் அரங்கு திரும்பியதோடு மேலதிக வீரராக மார்கோ அசென்சியோ களத்தினுள் வந்தார்.
ரியெல் மெட்ரிட் சம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியை எதிர்நோக்கி இருக்கும் இந்த நேரத்தில் ரொனால்டோவின் காயம் அந்த அணிக்கு கவலை அளிப்பதாக உள்ளது. எனினும் அவருக்கு சிறு காயம் ஒன்றே ஏற்பட்டிருப்பதாகவும் அவர் சம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டிக்கு உடற்தகுதி பெற்றுவிடுவார் என்றும் சிடென் குறிப்பிட்டார்.
முதல் பாதிய ஆட்டம் விறுவிறுப்பாக நடந்துகொண்டிருக்கும்போது பார்சிலோனா வீரர் செர்கியோ ரொபார்டோ, ரியெல் மெட்ரிட்டின் பின்கள வீரர் மார்சலோவின் கன்னத்தில் அறைந்து அவரை கீழே வீழ்த்த, நடுவர் நேரடியாக சிவப்பு அட்டை காண்பித்து ரொபார்டோவை மைதானத்தில் இருந்து வெளியேற்றினார்.
முதல் பாதி: பார்சிலோனா 1 – 1 ரியெல் மெட்ரிட்
இந்நிலையில் இரண்டாவது பாதி ஆட்டத்தில் 10 வீரர்களுடன் ஆடிய பார்சிலோனா அணிக்கு அதன் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி கைகொடுத்தார். 52 ஆவது நிமித்தில் வைத்து மெஸ்ஸி, ரியெல் மெட்ரிட் பெனால்டி எல்லைக்குள் அந்த அணியின் பின்கள வீரர்களை முறியடித்து அபார கோல் ஒன்றை புகுத்தினார். எல் கிளாசிக்கோ போட்டியில் மெஸ்ஸி பெறும் 26ஆவது கோலாக இது இருந்தது.
இந்த கோல் மூலம் பார்சிலோனா முன்னிலை பெற்றபோதும் அந்த அணிக்கு 10 வீரர்களுடன் தனது முன்னிலையை தற்காத்துக் கொள்ள வேண்டி ஏற்பட்டது. இதனை சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முயன்ற ரியெல் மெட்ரிட்டுக்கு கடைசி நேரத்தில் அது கைகூடியது.
72 ஆவது நிமிடத்தில் மார்கோ அசன்சியோ பரிமாற்றிய பந்தை பெனால்டி எல்லைக்கு வெளியில் இருந்து கரேத் பேல் தனது இடது காலால் வேகமாக உதைக்க அது வலைக்குள் பறந்து சென்றது. இதன்மூலம் போட்டியை ரியெல் மெட்ரிட் அணியால் சமநிலையில் முடிக்க முடிந்தது.
எனினும் கடந்த நான்கு போட்டிகளிலும் ரியெல் மெட்ரிட்டால் பார்சிலோனாவை வீழ்த்த முடியாமல் போயுள்ளது. லா லிகா தொடரில் பார்சிலோனா தற்போது ரியெல் மெட்ரிட்டை விடவும் 15 மேலதிக புள்ளிகளோடு முதலிடத்தை உறுதி செய்திருக்கும் நிலையில், ரியெல் மெட்ரிட் அட்லெடிகோ மெட்ரிட்டுக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் காணப்படுகிறது.
எனது தந்தையின் கனவு நனவாகியிருக்கின்றது – மொஹமட் முஸ்தாக்
ஒரு விளையாட்டில் வீரர் ஒருவர் தனது தாய்நாட்டு அணியில் பிரதிநிதித்துவம் செய்வது அவ்வளவு சாதாரண விடயம் அல்ல. அதற்கு அவர்……
லா லிகா வரலாற்றில் எந்த ஒரு அணியும் முழு பருவத்திலும் தோல்வியுறாத அணியாக இருந்ததில்லை என்றபோதும் பார்சிலோன அணி அந்த சாதனையை படைக்க இன்னும் 270 நிமிடங்கள் மாத்திரம் வீழ்த்தப்படாமல் இருந்தால் போதுமானதாகும்.
பார்சிலோனா 13 மாதங்களில் தனது 42 போட்டிகளையும் பூர்த்தி செய்ய இன்னும் வில்லரியல், சொசிடாட் மற்றும் லெவான்டே அணிகளுடனான போட்டிகள் எஞ்சியுள்ளன.
முழு நேரம்: பார்சிலோனா 1 – 1 ரியெல் மெட்ரிட்
கோல் பெற்றவர்கள்
பார்சிலோனா – லுவிஸ் சுவாரஸ் 10′, லியோனல் மெஸ்ஸி 52′
ரியெல் மெட்ரிட் – கிறிஸ்டியானோ ரொனால்டோ 14′, கரேத் பேல் 72′
சிவப்பு அட்டை
பார்சிலோனா – செர்கி ரொபார்டோ 45+3’
>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<