இந்தியா – பாகிஸ்தான் டெஸ்ட் போட்டிகளை நடாத்த இங்கிலாந்து விருப்பம்

239

இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான டெஸ்ட் போட்டிகளை தமது நாட்டில் நடாத்த விருப்பம் கொண்டுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் சபை (ECB) குறிப்பிட்டிருக்கின்றது.

ஐ.சி.சி. இன் தொடர்களில் ஆடுகின்ற போதிலும் அரசியல் குளறுபடிகள் காரணமாக கடந்த 2013ஆம் ஆண்டிலிருந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் இதுவரை தம்மிடையே இருதரப்பு தொடர்கள் எதிலும் விளையாடவில்லை. இதேநேரம் இரு அணிகளும் கடைசியாக 2007ஆம் ஆண்டிலேயே டெஸ்ட் போட்டி ஒன்றிலும் விளையாடியிருந்தன.

தோல்வியுறாத அணியாக இலங்கை லெஜன்ட்ஸ்

எனவே நீண்ட காலமாக இரு அணிகளுக்கும் இடையில் நிலவி வரும் இடைவெளியினை இல்லாமல் செய்யும் நோக்குடன் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இடையில் டெஸ்ட் போட்டிகளை நடாத்துவதற்கு விருப்பம் கொண்டுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் சபை தெரிவித்திருக்கின்றது.

அதன்படி இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் பிரதி தலைவராக இருக்கும் மார்டின் டார்லோவ் பாகிஸ்தானுக்கான தனது சுற்றுப்பயணத்தின் போது இரு அணிகளுக்கும் இடையில் டெஸ்ட் போட்டிகளை நடாத்துவது தொடர்பிலான இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் விருப்பத்தினை பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவர் ரமீஸ் ராஜாவிடம் உறுதிப்படுத்தியிருக்கின்றார்.

எனினும் தமது நாட்டில் மீண்டும் தொடர்ச்சியாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடாத்த எதிர்பார்க்கும் பாகிஸ்தான், இங்கிலாந்து கிரிக்கெட் சபை வழங்கிய இந்த சலுகையினை ஏற்றுக்கொள்ளாது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கடந்த 2010ஆம் ஆண்டில் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஒன்றினையும், T20I தொடர் ஒன்றினையும் இங்கிலாந்து மண்ணில் வைத்து விளையாடியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் இங்கிலாந்து T20I அணியின் தற்காலிக தலைவரான மொயின் அலியும் இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரினை பார்வையிட ஆவலுடன் இருப்பதாக கூறியிருக்கின்றார்.

தென்னாபிரிக்க தொடரிலிருந்து வெளியேறும் இந்திய வீரர்!

”உலகக் கிண்ணமோ அல்லது ஐ.சி.சி. இன் தொடரோ தவிர்த்து அவர்கள் (இந்தியாவும், பாகிஸ்தானும்) வெளிப்படையாக வேறு தொடர்களில் ஆடாமல் இருப்பது வெட்கிட்க வேண்டிய விடயமாகும். அவை இரண்டும் சிறந்த அணிகளாக இருப்பதோடு, (கிரிக்கெட்) விளையாட்டிலும் பாரிய இரு நாடுகளாக இருக்கின்றன.”

எனவே இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் கோரிக்கையினை ஏற்று இரு நாடுகளும் கிரிக்கெட் போட்டிகளில் மீண்டும் விளையாடுமா என்பதனை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

இதேவேளை ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் எஞ்சிய போட்டிகளில் இரு அணிகளும் வெற்றி பெறும் எனில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இடையிலான ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் நடைபெறுவதற்கான சாத்தியப்பாடுகள் காணப்படுகின்றது.

>>  மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<