விளையாட்டுத்துறை அமைச்சும், விளையாட்டுத்துறை அபிவிருத்தித் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள 45ஆவது தேசிய விளையாட்டு விழாவின் ஓர் அங்கமான கடற்கரை கபடி போட்டிகளின் ஆண்கள் பிரிவில் சம்பயின் பட்டத்தை ஊவா மாகாணமும், பெண்கள் பிரிவில் கிழக்கு மாகாணமும் சம்பியன்களாகத் தெரிவாகின.
இலங்கை இளையோர் வலைப்பந்து அணிக்கு முதல் 2 போட்டிகளிலும் அபார வெற்றி
மெலனி விஜேசிங்கவின் அபார ஆட்டத்தினால் இலங்….
இதேநேரம், ஆண்கள் பிரிவில் கிழக்கு மாகாண அணி இரண்டாவது இடத்தைப் பெற்றுக் கொண்டமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
இவ்வருடத்துக்கான தேசிய விளையாட்டு விழாவின் கடற்கரை கபடி மற்றும் கடற்கரை கரப்பந்தாட்டப் போட்டிகள் கடந்த 28, 29 மற்றும் 30ஆம் திகதிகளில் நீர்கொழும்பு கடற்கரையில் நடைபெற்றன. இதில் இலங்கையின் ஒன்பது மாகாணங்களையும் சேர்ந்த கபடி மற்றும் கரப்பந்தாட்ட வீர, வீராங்கனைகள் பங்கேற்றிருந்தனர்.
இந்த நிலையில், கடந்த 30ஆம் திகதி நடைபெற்ற கடற்கரை கபடி இறுதிப் போட்டியில் கிழக்கு மாகாண அணியை 50-34 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்திய ஊவா மாகாண அணி தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாக சம்பியனாகத் தெரிவாகியது.
இதேநேரம், முதலாவது போட்டியில் வட மாகாண அணியை வீழ்த்திய சப்ரகமுவ மாகாண கபடி அணி, இம்முறை தேசிய விளையாட்டு விழா கபடியில் 3ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டது. அந்த அணி மேல் மாகாண அணியை 46-19 புள்ளிகள் கணக்கில் வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், கடந்த வருடத்தைப் போல இம்முறையும் பெண்களுக்கான கபடி இறுதிப் போட்டியில் வட மத்திய மாகாண அணியும், கிழக்கு மாகாண அணியும் போட்டியிட்டிருந்தன.
இராணுவத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஹைலென்டர்ஸ் கோல்ப் போட்டிகள்
இலங்கை இராணுவ கோல்ப் சங்கத்தினால் மூன்றா…
இதில் நடப்புச் சம்பியனான வட மத்திய மாகாண அணியை முழு ஆதிக்கத்தோடு எதிர்கொண்ட கிழக்கு மாகாண பெண்கள் கபடி அணி 39-38 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சம்பியனாகத் தெரிவாகியது.
இதேநேரம், 3ஆவது இடத்தை தீர்மானிக்கின்ற போட்டியில் தென் மாகாண அணியை 51-33 புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி மேல் மாகாண அணி அவ்விடத்தைத் தனதாக்கிக் கொண்டது.
இதுஇவ்வாறிருக்க, ஆண்கள் பிரிவில் சிறந்த கபடி வீரருக்கான விருதை ஊவா மாகாண அணியின் எஸ்.எம்.ஆர்.சி சமரகோன் பெற்றுக்கொள்ள, பெண்கள் பிரிவில் சிறந்த கபடி வீரருக்கான விருதை கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஜி. கஜேந்திரனி பெற்றுக் கொண்டார்.
இதேவேளை, 45ஆவது தேசிய விளையாட்டு விழாவின் மற்றுமொரு அங்கமாக நீர்கொழும்பு கடற்கரையில் நடைபெற்ற கரப்பந்தாட்டப் போட்டிகளின் ஆண்கள் பிரிவில் சம்பியன் பட்டத்தை வட மத்திய மாகாண அணியும், பெண்கள் பிரிவில் கிழக்கு மாகாணமும் பெற்றுக்கொண்டன.
வேறு
உள்ளூர், தேசிய மற்றும் சர்வதேச அளவில் இடம்பெறும் அனை….
மேலும் விளையாட்டு செய்திகளைப் படிக்க