கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான 10வது விளையாட்டு விழாவின் மெய்வல்லுனர் போட்டிகள் மட்டக்களப்பு வெபர் விளையாட்டரங்கில் கடந்த 15ம் திகதி ஆரம்பமாகி தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. போட்டிகள் அனைத்தும் 19ம் திகதி புதன் கிழமை நிறைவுபெறவுள்ளன.
கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிஸாம் தலைமையில் ஆரம்பமான இவ்விளையாட்டுப் போட்டியில் கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுனர் றோகித்த போகல்லாகம, கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட், கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் தண்டாயுதபாணி உட்பட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
உலக பரா மெய்வல்லுனர் போட்டிகளில் இலங்கைக்கு வெள்ளிப் பதக்கம்
லண்டனில் நடைபெற்றுவரும் 8ஆவது உலக பரா மெய்வல்லுனர் போட்டித்…
கிழக்கு மாகாணத்தின் 17 கல்வி வலயங்களையும் சேர்ந்த சுமார் 3000 வீர,வீராங்கனைகள் இப்போட்டிகளில் பங்கு கொண்டுள்ளனர்.
இதன் முதல் இரண்டு நாட்களில் இடம்பெற்ற போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற வீரா்களின் விபரம் வருமாறு,
14 வயதின் கீழ் பிரிவு பெண்கள் – குண்டு போடுதல்
1.என்.உதயவானி – பட்டித்திடல் மகா வித்தியாலயம்
2.கிருசாணி – களுதாவளை மகா வித்தியாலயம்
3.ஆர்.டிலக்சினி சம்மாந்துறை வாணி வித்தியாலயம்
18 வயதின் கீழ் பிரிவு ஆண்கள் – நீளம் பாய்தல்
1.எம்.ஐ.எம்.அஸ்லம் – கிண்ணியா அலிகார் மகா வித்தியாலயம்
2.பி.லோகிசன் – குருக்கல்மடம் k மகா வித்தியாலயம்
3.ஏ.அஜீம் – முள்ளிப்பொத்தானை மத்திய கல்லூரி
12 வயதின் கீழ் பிரிவு பெண்கள் – உயரம் பாய்தல்
1.ஏ.அக்ஸயா – வின்சன்ட் பெண்கள் உயர் பாடசாலை
2. லெயக்கரிஸ்கா – களுதாவலை மகா வித்தியாலயம்
3.ஆர்.பி.டபிள்யு.சந்தீபனா – விநாயகபுரம் மகா வித்தியாலயம்
18 வயதின் கீழ் பிரிவு பெண்கள் – உயரம் பாய்தல்
1.எம்.டி.பெர்னாண்டோ – அம்பாரை டி.எஸ்.சேனனாயக்க மத்திய மகா வித்தியாலயம்
2.எல்.தர்சிக்கா – மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர் பாடசாலை
3.ஆர்.டி.சி.எல்.ராஜபக்ஷ – அம்பாரை டி.எஸ்.சேனனாயக்க மத்திய மகா வித்தியாலயம்
20 வயதின் கீழ் பிரிவு ஆண்கள் – நிளம் பாய்தல்
1.ஏ.ஆபீத் – முள்ளிப்பொத்தானை மத்திய கல்லூரி
2.ஜே.எம்.குனநித்தி -டி.எஸ்.சேனனாயக்க மத்திய மகா வித்தியாலயம்
3.ஏ.பீ.எம்.நஹ்தீர் – அட்டாளைச்சேனை மத்திய மகா வித்தியாலயம்
16 வயதின் கீழ் பிரிவு ஆண்கள் – குண்டு போடுதல்
1.ஆர்.ரிசானன் – களுதாவலை மகா வித்தியாலயம்
2.எம்.என்.எம்.நப்லி – கிண்ணியா மத்திய கல்லூரி
3.டி.ஜீ.எசங்க மதுரங்க – அம்பாரை டி.எஸ்.சேனனாயக்க மத்திய மகா வித்தியாலயம்
16 வயதின் கீழ் பிரிவு பெண்கள் – பரிது வட்டம் எறிதல்
1.எஸ்.கிரித்திக்கா -விவகானந்தா வித்தியாலயம்
2.ஆர்.பி.நித்மி சன்சலா – மகாஓயா கோலிக் வித்தியாலயம்
3.டபிள்யு.எம்.எச்.அனுராத -அம்பாரை டி.எஸ்.சேனனாயக்க மத்திய மகா வித்தியாலயம்
16 வயதின் கீழ் பிரிவு பெண்கள் – நீளம் பாய்தல்
1.ஜீ.ஜீ.எம்.எச்.நிர்மாலி – அம்பாரை டி.எஸ். டி.எஸ்.சேனனாயக்க மத்திய மகா வித்தியாலயம்
2.என்.டி.எம். மதுபாசினி -கந்தளாய் அக்ரபோதி தேசிய பாடசாலை
3.பீ.கிசோமிக்கா – மட்டக்களப்பு விவேகானந்த GM வித்தியாலயம்
சர்வதேச வெற்றிகளை தந்தைக்கு சமர்ப்பணம் செய்யும் சாதனை நாயகன் கணேசராஜா சினோதரன்
தமிழர்கள் மூலம் உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட விளையாட்டுக்களில் ஒன்றாக…
12 வயதின் கீழ் பிரிவு ஆண்கள் – நீளம் பாய்தல்
1.ஏ.சி.அப்துல்லா – பொத்துவில் அல்-கலாம் மகா வித்தியாலயம்
2.டி.ஜி.கே.எஸ்.அபேரத்ன – அம்பாரை திமட்டமல்பிலாசா வித்தியாலயம்
3.ஏ.சி.எம்.பவாஸ் – பாலமுனை அல்-ஹிக்மா வித்தியாலயம்
20 வயதின் கீழ் பிரிவு பெண்கள் – 5000 மீற்றர் ஓட்டம்
1.ஆர்.பி.மதுவந்தி – பதியத்தலாவ தேசிய பாடசாலை
2.ஜீ.வீ.ஜீ ஹன்சனி புத்திக்க – அம்பாரை சந்துன்புர மகா வித்தியாலயம்
3.டபிள்யு.ஏ.பி.மதுப்சிங்கசாலிய – உகன மகா வித்தியாலயம்
20 வயதின் கீழ் பிரிவு ஆண்கள் – 5000 மீற்றர் ஓட்டம்
1.எஸ்.சாருஜன் – மட்டக்களப்பு இந்துக் கல்லூரி
2.அஹமட் அஹ்லம் – ஏறாவுர் மாக்கான் மாக்கார் மகா வித்தியாலயம்
3.எம்.கே.ஜீ.எம்.தனஞ்சய – தெஹியத்தக்கண்டிய மெதகம வித்தியாலயம்
20 வயதின் கீழ் பிரிவு பெண்கள் – நீளம் பாய்தல்
1.என்.ஜீ.எம்.டி.சுபாசினி – கந்தளாய் வானல மகா வித்தியாலயம்
2.டி.குணலட்சுமி – அம்பிலாந்துறை கலைமகள் வித்தியாலயம்
3.ஏ.எச்.டி. அனுரங்கி டி.சில்வா – அம்பாரை டி.எஸ்.சேனனாயக்க மத்திய மகா வித்தியாலயம்
20 வயதின் கீழ் பிரிவு ஆண்கள் – கோலுன்றிப் பாய்தல்
1.நுசாந்தன் – களுதாவளை மகா வித்தியாலயம்
2.வீ.தமிழ்மாறன் – திருகோணமலை சென்.ஜோசப் கல்லூரி
3.கே.ரெஜீவன் – செட்டிப்பாளயம் மகா வித்தியாலயம்
18 வயதின் கீழ் பிரிவு பெண்கள் – குண்டு போடுதல்
1.கே.ஏ.இபுனி உபேக்சா ரணசிங்க – கந்தளாய் அக்ரபோதி தேசிய பாடசாலை
2.என்.நாகமிது நாவற்காடு நாமகல் வித்தியாலயம்
3.எஸ்.செரின் கேதசன் – சென்.சிசிலியா பெண்கள் கல்லூரி
16 வயதின் கீழ் பிரிவு பெண்கள் – ஈட்டி எறிதல்
1.ஆ.எம்.ஆர்.ஜீ.டி. அமந்திக்கா – அம்பாரை செல்பிட்டிக்கல மகா வித்தியாலயம்
2.ஏ.ரிபிக்கல் – கல்முனை ரணமடு எச்.எம்.வித்தியாலயம்
3.டி.ஜனுசலா – கல்முனை ஸ்ரீ முருகன் வித்தியாலயம்
14 வயதின் கீழ் பிரிவு ஆண்கள் – உயரம் பாய்தல்
லோசன் – களுதாவலை மகா வித்தியாலயம்
2.எல்.ஹரீஸ்னா – செங்கலடி மகா வித்தியாலயம்
3.எம்.ஹதுஸ்கர் – களுதாவலை மகா வித்தியாலயம்
18 வயதின் கீழ் பிரிவு ஆண்கள் – உயரம் பாய்தல்
1.அஞ்சல இமன்த அபேவிக்ரம -அம்பாரை டி.எஸ்.சேனனாயக்க மத்திய மகா வித்தியாலயம்
2 .ஏ.டிலக்சன் – பட்டிருப்பு தேசிய பாடசாலை
3.இசுறு பிரபாத் – கந்தளாய் மத்திய கல்லூரி
12 வயதின் கீழ் பிரிவு ஆண்கள் 100 மீற்றர் ஓட்டம்
1.பி.கிதுர்ஜன் – கிரான் மகா வித்தியாலயம்
2.வை.டிலக்சன் – கல்முனை வெஸ்லி உயர்தர பாடசாலை
3.ஏ.சி.அப்துல்லா – பொத்துவில் அல்-கலாம் மகா வித்தியாலயம்
20 வயதின் கீழ் பிரிவு ஆண்கள் – 200 மீற்றர் ஓட்டம்
1.பி.தனராஜ் – களுதாவளை மகா வித்தியாலயம்
2.எச்.எம்.டி.சுலக்சன – டி.எஸ்.சேனனாயக்க மத்திய மகா வித்தியாலயம்
3.ஏ.ஆர்.இஹ்சான் அஹமட் – நிந்தவுர் அல்-அஸ்றக் தேசிய பாடசாலை
18 வயதின் கீழ் பிரிவு ஆண்கள் – 200 மீற்றர் ஓட்டம்
1.எம்.ஐ.எம்.அஸ்லம் – கிண்ணியா அலிகார் மகா வித்தியாலயம்
2.பி.கே.எச்.பியுமந்த – அம்பாரை சத்தாதிஸ்ஸ மகா வித்தியாலயம்
3.ஏ.கே.ஹாதீக் – அட்டாளைச்சேனை மத்திய மகா வித்தியாலயம்
16 வயதின் கீழ் பரிவு ஆண்கள் – பரிதி வட்டம் எறிதல்
1.டபிள்யு.எம்.ஏ.எல்.சோமரத்ன – பதியத்தலாவ தேசிய பாடசாலை
2.ஆர்.ரிசானன் – களுதாவலை மகா வித்தியாலயம்
3.எம்.எம்.முபீஸ் – புல்மோட்டை மத்திய கல்லூரி
16 வயதின் கீழ் பிரிவு பெண்கள் நீளம் பாய்தல்
1.ஆர்.ஹஜந்தி – மட்டக்களப்பு பன்சேனை பாரி வித்தியாலயம்
2.பி.விதுஜா – வந்தாறுமுலை மத்திய மகா வித்தியாலயம்
3.ஆர்.எல்சி டெனில்லா – மட்டக்களப்பு சென்.சிசிலியா பெண்கள் கல்லூரி
16 வயதின் கீழ் பெண்கள் – குண்டு போடுதல்
1.ஆர்.வீ.என்.எஸ்.பண்டார -மகாஓய கோலிக்கி வித்தியாலயம்
2.எம்.என்.முனீரா – கந்தளாய் பேராத்துவெளி மகா வித்தியாலயம்
3எஸ்.கோசாலி – பேராறு பரமேஸ்வரா மகா வித்தியாலயம்
16 வயதின் கீழ் பிரிவு ஆண்கள் – 100 மீற்றர் ஓட்டம்
1.என்.ரிதன் -ஆலங்கேணி வினாயகர் மகா வித்தியாலயம்
2.பி.சுலக்ஸன் – மண்டுர் வித்தியாலயம்
3.டி கிருசோத் – திருகோணமலை விவேகானந்த கல்லூரி
20 வயதின் கீழ் பிரிவு ஆண்கள் – 800 மீற்றர் ஓட்டம்
1. டி.எம்.பி.சதுருவன் – தெஹியத்தக்கண்டிய மெதகம வித்தியாலயம்
2.என்.நபீஸ் -மூதூர் மத்திய கல்லூரி
3.ஏ.அஸ்மீர் -முள்ளிப்பொத்தானை மத்திய கல்லுரி
20 வயதின் கீழ் பிரிவு பெண்கள் – 200 மீற்றர் ஓட்டம்
1.ஏ.எச்.டி.அயுரங்கி – அம்பாரை டி.எஸ்.சேனனாயக்க மத்திய மகா வித்தியாலயம்
2.ஆர்.றுஜி – களுதாவலை மகா வித்தியாலயம்
3.எம்.ஜீ.எம்.டி.சுபாசினி – கந்தளாய் வானல மகா வித்தியாலயம்
18 வயதின் கீழ் பிரிவு ஆண்கள் – 800 மீற்றர் ஓட்டம்
1.எம்.பிரிந்தவன் – மட்டக்களப்பு சென்.மிக்கேல் கல்லூரி
2.கே.ஜீ.யு.எச்.வீரசிங்க – கந்தளாய் மத்திய கல்லூரி
3.பி.சுகிர்தன் – ரணமடு இந்து மகா வித்தியாலயம்
18 வயதின் கீழ் பிரிவு பெண்கள் – 800 மீற்றர் ஓட்டம்
1.பி.வசந்தினி – பன்சேனை பரி வித்தியாலயம்
2.டி.எம்.மதுமாலி – திருகோணமலை பதவி ஜெயத்தி மகா வித்தியாலயம்
3.எம்.கே.ஏ.சந்தரேக்கா – டி.எஸ்.சேனனாயக்க மத்திய மகா வித்தியாலயம்
18 வயதின் கீழ் பிரிவு ஆண்கள் – ஈட்டி எறிதல்
1.எச்.எம்.றிகாஸ் – முள்ளிப்பொத்தானை மத்திய கல்லூரி
2.பி.விஜயராசா – களுதாவளை மகா வித்தியாலயம்
3.ஜீ.எச்.ஜே.சந்திரா – டி.எஸ்.சேனனாயக்க மத்திய மகா வித்தியாலயம்.
16 வயதின் கீழ் பிரிவு பெண்கள் – 800 மீற்றர் ஓட்டம்
1.டபிள்யு.எம்.சாமலி – திருகோணமலை பதவிபுர வித்தியாலயம்
2.டி.ஏ.எம்.டி.செனவிரத்ன – தெஹியத்தக்கண்டிய தேசிய பாடசாலை
3.எம்.வை.டி.கே.கவித்யா – பதியத்தலாவ தேசிய பாடசாலை
18 வயதின் கீழ் பிரிவு பெண்கள் – 200 மீற்றர் ஓட்டம்
1.ஆர்.எல்சி டெனில்லா – சென்.சிசிலியா பெண்கள் கல்லூரி
2.எஸ்.தினூஜா – விவேகானந்த பெண்கள் மகா வித்தியாலயம்
3.கே.ரூபிக்கா – மண்டுர் மகா வித்தியாலயம்