இலங்கை இராணுவத்தின் 23ஆவது படைப்பிரிவு கிழக்கு மாகாண கால்பந்து லீக்குகள் இடையே ஒழுங்கு செய்த ”கட்டளைத்தளபதி கால்பந்து சம்பியன்ஷிப்” தொடரின் இறுதிப் போட்டியில் மட்டக்களப்பு கால்பந்து லீக் அணி, அம்பாறை கால்பந்து லீக் அணியினை 6-0 என்கிற கோல்கள் கணக்கில் தோற்கடித்து சம்பியன் பட்டம் வென்றிருக்கின்றது.
கட்டளைத்தளபதி கால்பந்து தொடர் இறுதி மோதலில் அம்பாறை, மட்டக்களப்பு லீக் அணிகள்
இலங்கை இராணுவத்தின் 23ஆவது படைப்பிரிவு…..
கிழக்கு மாகாணத்தினை பிரதிநிதித்துவம் செய்யும் 9 கால்பந்து லீக்குகள் பங்கெடுத்திருந்த இந்த கால்பந்து தொடரின் அரையிறுதிப் போட்டிகள் இரண்டும் கடந்த வாரம் ஏறாவூர் அஹமட் பரீட் மைதானத்தில் நடைபெற்றிருந்தன.
தொடரின் அரையிறுதிப் போட்டிகளில் அம்பாறை கால்பந்து லீக் அணி, கல்குடா கால்பந்து லீக் அணியினை 11-0 என்கிற கோல்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தும், மட்டக்களப்பு கால்பந்து லீக் அணி, கிண்ணியா கால்பந்து லீக் அணியினை 3-1 என்கிற கோல்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தும் தொடரின் இறுதிப் போட்டிக்கு தெரிவாகின.
இதனை அடுத்து நேற்று (31) மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் கட்டளைத்தளபதி கால்பந்து சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி இடம்பெற்றது.
இறுதிப் போட்டி ஆரம்பமான நிமிடத்தில் இருந்தே, மட்டக்களப்பு கால்பந்து லீக் அணியினர் போட்டியின் ஆதிக்கத்தை தம்வசம் எடுத்திருந்தனர். தொடர்ந்து மட்டக்களப்பு கால்பந்து லீக் அணி வீரர் VTM. அனஸ் முதல் கோலினைப் பெற்று, போட்டியின் கோல்கள் நுழைவாயிலினை திறந்து வைத்தார்.
Photo Album : Eastern Commander Football Champions Trophy – 2019
இதன் பின்னர் அம்பாறை கால்பந்து லீக் அணி கோல் பெறுவதற்கான சில முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் குறித்த முயற்சிகளினால் கோல்கள் எதுவும் பெறப்பட்டிருக்கவில்லை.
போட்டியின் முதல் பாதி நிறைவடைய சில வினாடிகளின் முன்னர் மட்டக்களப்பு கால்பந்து லீக் அணிக்காக மற்றுமொரு கோலினை டரோலிஸ் பார்த்தேலோட் பெற்றுக் கொடுத்தார்.
இதனால், போட்டியின் முதற் பாதியினை மட்டக்களப்பு கால்பந்து லீக் அணி 2-0 என்கிற கோல்கள் முன்னிலையுடன் நிறைவு செய்து கொண்டது.
முதல் பாதி – மட்டக்களப்பு கால்பந்து லீக் 2 – 0 அம்பாறை கால்பந்து லீக்
போட்டியின் இரண்டாம் பாதியினை இரு அணிகளும் விறுவிறுப்பாக ஆரம்பித்த போதிலும் இப்பாதியிலும் மட்டக்களப்பு கால்பந்து லீக் அணியின் ஆதிக்கமே காணப்பட்டது.
எனது தந்தையின் கனவு நனவாகியிருக்கின்றது – மொஹமட் முஸ்தாக்
ஒரு விளையாட்டில் வீரர் ஒருவர் தனது………
இரண்டாம் பாதியில் மட்டக்களப்பு கால்பந்து லீக் அணிக்காக முதல் கோல், இலங்கை தேசிய கால்பந்து அணி வீரரான மொஹமட் முஸ்தாக்கினால் பெறப்பட்டது.
தொடர்ந்து முஸ்தாக் இன்னுமொரு கோலினையும் பெற்று மட்டக்களப்பு கால்பந்து லீக் அணியினை பலப்படுத்தினார். இதனால், மட்டக்களப்பு கால்பந்து லீக் அணி 4-0 என முன்னிலை பெற்றுக் கொண்டது.
இதனை அடுத்து, முதற் பாதியில் மட்டக்களப்பு கால்பந்து லீக் அணிக்காக கோல் ஒன்றினைப் பெற்ற டரோலிஸ் பார்தேலோட் இரண்டாம் பாதியில் அடுத்தடுத்த கோல்களை பெற்று, ஹட்ரிக் கோலைப் பதிவு செய்தார்.
டரோலிஸ் பார்தேலோட்டின் ஹட்ரிக் கோளோடு மட்டக்களப்பு கால்பந்து லீக் அணி, அம்பாறை கால்பந்து லீக் அணியினை 6-0 என தோற்கடித்தது.
இதேநேரம், அம்பாறை கால்பந்து லீக் அணியினர் போட்டியின் இரண்டாம் பாதியிலும் கோல்கள் எதனையும் பெற முடியாமல் இறுதிப் போட்டியினை ஏமாற்றம் ஒன்றுடன் நிறைவு செய்து கொண்டனர்.
முழு நேரம்: மட்டக்களப்பு கால்பந்து லீக் 6 – 0 அம்பாறை கால்பந்து லீக்
கோல் பெற்றவர்கள்
மட்டக்களப்பு கால்பந்து லீக் – VTM. அனஸ் – 1, MMM. முஸ்தாக் – 2, டர்லோஸ் பார்தலோட் – 3
>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<