இந்திய அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடருக்கான இலங்கை குழாத்திலிருந்து துஷ்மந்த சமீர நீக்கப்பட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்திருந்த T20I குழாத்தில் துஷ்மந்த சமீர இணைக்கப்பட்டிருந்த போதும், அவருக்கு ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக சமீர இந்திய தொடர் முழுவதும் விளையாட மாட்டார் என இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
இலங்கை – இந்திய தொடருக்கான டிக்கெட் விலைகள் அறிவிப்பு
துஷ்மந்த சமீர நடைபெற்றுமுடிந்த LPL தொடரின் போது உபாதைக்கு முகங்கொடுத்திருந்ததாகவும், குறித்த உபாதையின் வைத்தியர் அறிக்கை நேற்று (23) கிடைத்திருந்ததாகவும் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார்.
அதன்படி துஷ்மந்த சமீரவால் இந்திய அணிக்கு எதிரான தொடர் முழுவதும் விளையாட முடியாது என உபுல் தரங்க மேலும் சுட்டிக்காட்டினார். இதேவேளை துஷ்மந்த சமீரவுக்கான மாற்றுவீரரை இதுவரை தெரிவுசெய்யவில்லை எனவும் இவர் குறிப்பிட்டார்.
சுற்றுலா இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான T20I தொடர் எதிர்வரும் 27ம் திகதி பல்லேகலையில் ஆரம்பமாகவுள்ளதுடன், ஒருநாள் தொடர் கொழும்பில் எதிர்வரும் 02ம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<