டக்வொர்த் லீவிஸ் ஒரு குப்பை – ஸ்டீபன் ப்ளெமிங்

1059
Stephen Fleming

9வது ஐ.பி.எல். கிரிக்கட் போட்டித் தொடரின் கடந்த சனிக்கிழமை கொல்கத்தாவில் இடம்பெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி டக்வொர்த் லீவிஸ் முறையில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ரைஸிங் பூனே சுப்பர்ஜையன்ட்ஸ் அணியை வீழ்த்தியது.

முதலில் துடுப்பெடுத்தாடிய பூனே அணி 17.4 ஓவர்களில் 6 விக்கட்டுகள் இழப்புக்கு 103 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது மழையால் போட்டி பாதிக்கப்பட்டது. சுமார்மணி நேரமாக மழை பொழிந்தமையால் போட்டியில்டக்வொர்த் லீவிஸ்விதிமுறை கடைப்பிடிக்கப்பட்டது. இதன்படி 9 ஓவர்களில் 66 ஓட்டங்கள் வெற்றி இலக்காக கொல்கத்தா அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.  அத்தோடு பவர்பிளே 3 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

ஆனால் கொல்கத்தா அணியோ வெறுமனே 5 ஓவர்கள் முடிவில் 2 விக்கட் இழப்பிற்கு 66 ஓட்டங்களைப் பெற்று போட்டியை இலகுவாக வெற்றி ஈட்டியது.

வெற்றிக்குப் பிறகு கொல்கத்தா  நயிட் ரைடர்ஸ் அணியின் தலைவர் கவ்தம் கம்பீர் அளித்த பேட்டியில், இதுவரை எல்லாம் நன்றாக சென்று கொண்டிருக்கிறது. இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டி இருக்கிறது. எங்கள் அணியின் பந்து வீச்சு நன்றாக இருந்தது. பந்து வீச்சாளர்கள் மீது எனக்கு நல்ல நம்பிக்கை இருக்கிறது” என்று தெரிவித்தார்.

தோல்வி குறித்து ரைஸிங் பூனே சுப்பர்ஜையன்ட்ஸ் அணியின் தலைவர் மஹேந்திர சிங் டோனி கருத்து தெரிவிக்கையில், “135 முதல் 140 ரன்கள் எடுத்து இருந்தால் இந்த ஆடுகளத்தில் வெற்றிக்கு போதுமானதாக இருந்து இருக்கும். மத்திய தர வரிசை விக்கட்டுகள் வேகமாக வீழ்ந்ததால் பின்னால் வந்த துடுப்பாட்ட வீரர்களுக்கு நெருக்கடியாக அமைந்தது. டக்வொர்த் லீவிஸ் விதிப்படி எதிரணிக்கு அளிக்கப்பட்ட குறைவான ஓட்ட இலக்கை கட்டுப்படுத்துவது கடினமானதுஎன்று கூறினார்.

இந்தத் தோல்வியின் பின் தனது கருத்துகளை வெளியிட்ட பூனே அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் ப்ளெமிங்  மழையால் போட்டி பாதிக்கப்படும் போது நடைமுறைப்படுத்தும் டக்வொர்த் லீவிஸ் விதிமுறை ஒரு குப்பையாகும். குறைந்தபட்சம் 20 ஓவர் போட்டிக்காவது இந்த விதிமுறையில் மாற்றம் செய்ய வேண்டும். இந்த விதிமுறை 20 ஓவர் போட்டிக்காக உருவாக்கப்பட்டது கிடையாது” என்று கூறினார்.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்