இலங்கை அணியின் சகலதுறை வீரர் சாமிக்க கருணாரத்ன இண்டர்நெசனல் லீக் T20 தொடரில் (ILT20) டுபாய் கெபிட்டல்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் இம்மாதம் முதன்முறையாக இண்டர்நெசனல் லீக் T20 தொடர் ஆரம்பமாகவுள்ளது.
இறுதிவரை போராடிய இலங்கை கிரிக்கெட் அணி
இந்த தொடருக்கான டுபாய் கெபிட்டல்ஸ் அணிக்குழாத்தில் சாமிக்க கருணாரத்ன ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில் இலங்கை அணியின் வேகப் பந்துவீச்சாளர் துஷ்மந்த சமீர அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
துஷ்மந்த சமீர ஏற்கனவே அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தபோதும், உபாதை காரணமாக அவரால் தொடரில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அவருக்கு பதிலாகவே சாமிக்க கருணாரத்ன அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.
ILT20 தொடரில் தற்போது சாமிக்க கருணாரத்ன இணைக்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே பங்களாதேஷில் நடைபெறவுள்ள BPL தொடரில் டாக்கா டொமினேட்டர்ஸ் அணியிலும் இவர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.
குறித்த இந்த இரண்டு தொடர்களும் இம்மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில், இவர் எந்த தொடரில் விளையாடுவார் என்ற தகவல் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
ILT20 தொடர் இம்மாதம் 13ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், இம்மாதம் 6ஆம் திகதி BPL தொடர் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ILT20 தொடரில் விளையாடவுள்ள இலங்கை வீரர்கள்!
- அபுதாபி நைட் ரைடர்ஸ் – லஹிரு குமார, சரித் அசலங்க, சீகுகே பிரசன்ன
- டெஸர்ட் வைப்பர்ஸ் – வனிந்து ஹஸரங்க, மதீஷ பதிரண
- டுபாய் கெப்பிட்டல்ஸ் – தசுன் ஷானக, பானுக ராஜபக்ஷ, சாமிக்க கருணாரத்ன, இசுரு உதான, நிரோஷன் டிக்வெல்ல
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<