ஜனவரியில் ஆரம்பமாகவுள்ள ILT20 தொடர்!

International League T20 2023

560

ஐக்கிய அரபு இராச்சியத்தில் முதன்முறையாக நடைபெறவுள்ள இண்டர்நெசனல் லீக் (ILT20) தொடர் ஜனவரி மாதம் 13ம் திகதி ஆரம்பமாகும் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

போட்டித்தொடரின் முதல் போட்டியில் அபு தாபி நைட் ரைடர்ஷ் மற்றும் டுபாய் கெப்பிட்டல் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இரண்டாவது போட்டி 14ம் திகதி நடைபெறவுள்ளதுடன், குறித்தப் போட்டியில் MI எமிரேட்ஸ் மற்றும் சார்ஜா வொரியர்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன.

“நவீட் நவாஸிடமிருந்து கற்றுக்கொண்டேன்” – பெதும் நிஸ்ஸங்க!

ஜனவரி 13ம் திகதி ஆரம்பமாகும் இந்த தொடர் பெப்ரவரி 12ம் திகதி நிறைவடையவுள்ளதுடன், இறுதிப்போட்டி டுபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.

மொத்தமாக 34 போட்டிகள் நடைபெறவுள்ளதுடன், 30 லீக் போட்டிகள் மற்றும் இறுதிப்போட்டியுடன் எலிமினேட்டர் மற்றும் குவாலிபையர் போட்டிகள் நடைபெறவுள்ளன.

ஆறு அணிகள் மோதும் இந்தப் போட்டித்தொடரில் ஒவ்வொரு அணிகளும் எதிரணியுடன் தலா 2 தடவைகள் மோதவுள்ளன. இதில் முதலிரண்டு இடங்களை பிடிக்கும்  அணிகள் குவாலிபையர் போட்டியில் மோதவுள்ளதுடன், அடுத்த இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் எலிமினேட்டர் போட்டியில் மோதும்.

டுபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் 16 போட்டிகள் நடைபெறவுள்ளதுடன், 10 போட்டிகள் அபு தாபியிலும், 8 போட்டிகள் ஷார்ஜாவிலும் நடைபெறவுள்ளன.

ILT20 தொடர் ஜனவரி தொடக்கம் பெப்ரவரி மாதங்களில் நடைபெறவுள்ளதுடன், இந்த தொடருடன் தென்னாபிரிக்காவில் SA T20 தொடர், அவுஸ்திரேலியாவில் பிக் பேஷ் லீக் மற்றும் பங்களாதேஷில் BPL தொடர்கள் மோதுகின்றன.

ILT20 தொடரில் இலங்கை அணியின் சரித் அசலங்க, தசுன் ஷானக, துஷ்மந்த சமீர, வனிந்து ஹஸரங்க, பானுக ராஜபக்ஷ மற்றும் வனிந்து ஹஸரங்க ஆகிய முன்னணி வீரர்கள் இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<