கொவிட் – 19 வைரஸினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நலனுக்காக தான் பயன்படுத்திய துடுப்பு மட்டை மற்றும் ஜேர்சி ஆகியவற்றை ஏலத்தில் விடுவதற்கு தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான பாப் டூ பிளெசிஸ் தீர்மானித்துள்ளார்
3TC கிரிக்கெட் தொடரின் தங்கத்தை வென்ற டி வில்லியர்ஸின் ஈகல்ஸ்
சர்வதேச அளவில் கொவிட் – 19 வைரஸ் ஏற்படுத்தியுள்ள பாதிப்பு சொல்லில் அடங்காதது. நாளுக்கு நாள் இதன் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அனைத்து துறைகளிலும் கொரோனா வைரஸ் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
அதிலும் குறிப்பாக, ஆதரவற்ற நிலையில் கொரோனாவால் குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்காரணமாக ஐக்கிய நாடுகள் சபையின் யுனிசெப் நிறுவனமும் பல்வேறு முறையில் நிதிகளை திரட்டி வருகின்றது.
இதன்படி, கொவிட் – 19 வைரஸினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நலனுக்காக தென்னாபிரிக்கா கிரிக்கெட் வீரர்கள் இணைந்து நிதி திரட்டும் முன்னெடுப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், தென்னாபிரிக்கா அணியின் முன்னாள் வீரரான ஏபி டி வில்லியர்ஸ் உள்ளிட்ட வீரர்களின் அழைப்பை ஏற்று தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர வீரருமான பாப் டு ப்ளெசிஸ் தன்னுடைய IXU ரக புதிய துடுப்பு மட்டை மற்றும் தான் அணிந்த 18ஆம் இலக்க இளஞ் சிவப்பு நிற ஜேர்சி என்பவற்றை கொவிட் – 19 வைரஸினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நலனுக்காக ஏலம் விட தீர்மானிதுள்ளார்.
குறித்த ஜேர்ஸியானது 2016இல் இங்கிலாந்து அணியுடன் நடைபெற்ற ஒருநாள் போட்டியின் போது டு ப்ளெசிஸ் அணிந்திருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
இவ்வாறு ஏலத்தில் விடப்படும் தன்னுடைய பொருட்களின் மூலம் வரும் தொகையை தென்னாபிரிக்காவில் கொவிட் – 19 வைரஸ் பாதிப்பிற்குள்ளான குழந்தைகளின் நலனுக்காக கொடுக்க டு ப்ளெசிஸ் முன்வந்துள்ள நிலையில், தென்னாபிரிக்கா பணப் பெறுமதியில் 5 இலட்சம் வரையில், இவ்வாறு நிதி திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இந்த திட்டம் ஹில்சோங் ஆப்ரிக்கா பவுண்டேஷன் சார்பில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பாப் டு ப்ளெசிஸ் கொவிட் – 19 வைரஸினால் பாதித்தவர்களுக்கு உதவி செய்வது இது முதல் முறையல்ல. கொவிட் – 19 வைரஸ் காரணமாக சர்வதேச சமூகமும் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ள நிலையில், முன்னதாக தன்னுடைய மனைவி இமாரி விசருடன் இணைந்து தொண்டு நிறுவனம் மூலம் நிதி திரட்டி தென்னாபிரிக்காவின் 35,000 குழந்தைகளுக்கு உணவளிக்க அவர் உதவி செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க