DSI சுப்பர் ஸ்போர்ட் பாடசாலை கரப்பந்து சம்பியன்ஷிப் 2019

177

இந்நாட்டில் பாடசாலை மட்டத்தில் அதிக அவதானம் பெற்ற போட்டித் தொடரான ‘ DSI சுப்பர் ஸ்போர்ட் பாடசாலை கரப்பந்து சம்பியன்ஷிப்’ தொடரை தொடர்ச்சியாக 19ஆவது வருடமாக இவ்வாண்டிலும் நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன. இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனம், பாடசாலை கரப்பந்தாட்ட சங்கம் மற்றும் கல்வி அமைச்சு இணைந்து ஏற்பாடு செய்கின்ற இந்தத் தொடருக்கு DSI நிறுவனம் அனுசரணை வழங்குகிறது.

இந்நாட்டின் திறமையான பாடசாலை கரப்பந்து வீரர்களுக்கு தமது திறமையை காண்பிக்க முடியுமான போட்டித் தொடரான இந்தப் போட்டிகள் 1999 ஆம் ஆண்டு முதல் முறை நடத்தப்பட்டது. முதல் போட்டித் தொடர் 198 பாடசாலைகளின் பங்கேற்புடன் இடம்பெற்றது. எனினும், மிகப் பெரிய அபிவிருத்தி கண்டுள்ள இந்த போட்டித் தொடரில் இம்முறை சுமார் 5000 பாடசாலைகளின் பங்கேற்பை எதிர்பார்ப்பதாக ஏற்பாட்டுக் குழு குறிப்பிடுகிறது.

Photo Album : DSI Supersport School Volleyball Championship 2019 | Press Conference

இம்முறை போட்டித் தொடரில் மாவட்ட மட்டம் மற்றும் தேசிய மட்டம் என இரண்டு கட்டங்களாக போட்டிகள் நடத்தப்படுவதோடு, மாவட்ட மட்ட போட்டிகள் ஏப்ரல் மாதம் 27 ஆம் திகதி தொடக்கம் மே மாதம் 05 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன. தேசிய மட்ட போட்டிகள் ஜூலை மாதம் 01 ஆம் திகதியில் இருந்து 07 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன. தொடரின் இறுதிப் போட்டிகள் ஜூலை 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் நடத்த ஏற்பாடாகியுள்ளது.  

11 வயதின் கீழ், 13 வயதின் கீழ், 15 வயதின் கீழ், 17 வயதின் கீழ் மற்றும் 19 வயதின் கீழ் ஆகிய வயது மட்டங்களில் ஆண்கள் மற்றம் பெண்கள் பிரிவுகள் என இரண்டு பிரிவுகளிலும் இம்முறை போட்டிகள் இடம்பெறும்.  

இந்த போட்டிகளுக்கான விண்ணப்பப் படிவம் இம்மாதம் (பெப்ரவரி) 28 ஆம் திகதிக்கு பின்னர் நாடெங்கும் உள்ள DSI காட்சி அறைகளிலும் குறித்த பாடசாலைகள் மூலமாகவும் பெற்றுக்கொள்ள முடியும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவங்கள் மார்ச் மாதம் 29 ஆம் திகதிக்கு முன்னர் எந்தவொரு DSI கட்சி அறைக்கு சமர்ப்பிப்பது அல்லது இலக்கம் 257, ஹைலெவல் வீதி, நாவின்ன, மஹரகம என்ற முகவரியில் அமைந்திருக்கும் DSI விற்பனைப் பிரிவுக்கு அனுப்ப முடியும்.

>>மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க<<