கிரிக்கெட் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பொருட்களை தயாரிக்கும் இந்திய நாட்டை சேர்ந்த டியூலக்ஸ் விளையாட்டு நிறுவனம் (DSC), 2017ஆம் ஆண்டுக்கான ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ண செய்திகளை வழங்குவற்காக முதல்தர விளையாட்டு மையமான thepapare.com உடன் கைகோர்த்துள்ளது.
பயமில்லை (Fearless) என்ற தொனிப்பொருளைக் கொண்டுள்ள இந்நிறுவனம், இக்கட்டான சூழ்நிலைகளில் சவால்களை எதிர்கொண்டு விளையாட்டில் கடும் போட்டிக்கு மத்தியில் திறமைகளை வெளிப்படுத்தி சாதிக்கும் வீரர்களை அடையாளமாக கொண்டுள்ளது.
DSC நிறுவனமானது, இந்திய நாட்டில் தரமான விளையாட்டு உபகரணங்கள் தயாரிக்கும் மற்றும் நாடு முழுவதும் 1000 இற்கும் மேற்பட்ட விநியோகஸ்தர் வலையமைப்பைக் கொண்டுள்ள அதேநேரம், இலங்கை கிரிக்கெட் வீரர்களான குமார் சங்கக்கார, நிரோஷான் திக்வெல்ல, சீக்குகே பிரசன்ன மற்றும் அசேல குணரத்ன ஆகிய கிரிக்கெட் வீரர்களை விளம்பர தூதர்களாகக் கொண்டுள்ளது
[rev_slider ct17-dsccricket]
ஜூன் 1ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை நடைபெறவுள்ள ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ணம் குறித்த செய்தி, ஓட்ட எண்ணிக்கை, படங்கள் மற்றும் காணொளிகளை உடனுக்குடன் அளிக்கவுள்ள அதேநேரம் 2017ஆம் ஆண்டுக்கான ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ணத்துக்கான உத்தியோகபூர்வ பங்குதாரராகவும் செயற்படவுள்ளது.