இந்த ஆண்டுக்கான IPL பிரதான அனுசரணையாளராக ட்ரீம் லெவன்

208

இந்த ஆண்டுக்கான இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடரை நடாத்துவதற்கான பிரதான அனுசரணையாளராக (Title Sponsorship) இந்தியாவின் கிரிக்கெட் பொழுதுபோக்கு சேவை (Fantasy Cricket) வழங்குனரான ட்ரீம் லெவன் (Dream 11) நிறுவனம் மாறியிருக்கின்றது.  

டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியில் இணையும் என்ரிச் நோட்ஜே

ஐ.பி.எல். தொடரின் பிரதான அனுசரணையாளராக 2017ஆம் ஆண்டு தொடக்கம் ஐந்து ஆண்டுகளுக்கு சீனாவின் தொலைபேசி உற்பத்தியாளரான விவோ நிறுவனம் இருந்தது. எனினும், விவோ இந்த ஆண்டுக்கான (2020) அனுசரணையை இந்தியா – சீனா ஆகிய நாடுகள் இடையில் நிலவும் அரசியல் பிரச்சினைகள் காரணமாக இரத்துச் செய்தது. இதனால் இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடரின் பிரதான அனுசரணையினை யார் பெறுவார் என்பது தொடர்பில் எதிர்பார்ப்புக்கள் உருவாகியிருந்தன.  

தொடர்ந்து இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். இன் பிரதான அனுசரணையை பெற்றுக்கொள்ள இந்தியாவின் கல்விச் சேவை வழங்குனர்களான அன்அகடமி (Unacademy), பைஜூ (BYJU) மற்றும் ட்ரீம் லெவன் ஆகியவை இடையே பலத்த போட்டி நிலவி வந்த நிலையில், ட்ரீம் லெவன் நிறுவனம் பிரதான அனுசரணையை இந்திய நாணயப்படி 222 கோடி (இலங்கை நாணயப்படி 544 கோடி) ரூபாய்களுக்குப் பெற்றிருக்கின்றது.  

ட்ரீம் லெவன் நிறுவனம் இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். இன் பிரதான அனுசரணையைப் பெற்றிருக்கும் விடயத்தை ஐ.பி.எல். தொடரின் ஏற்பாட்டுக்குழுத் தலைவரான ப்ரிஜேஷ் பட்டேல் கிரிக்பஸ் செய்திச் சேவையிடம் உறுதி செய்திருந்தார். 

IPL தொடரை இந்தியாவில் நடாத்துங்கள் – வழக்கறிஞர் கோரிக்கை

இதேநேரம், இந்த ஆண்டுக்கான (2020) ஐ.பி.எல். பிரதான அனுசரணை மூலம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைக்கு கிடைக்கும் வருமானம் விவோ நிறுவனம் இல்லாத காரணத்தினால் அரைவாசியாக குறைந்திருப்பதும் சுட்டிக்காட்டத்தக்கது. விவோ நிறுவனம் ஐ.பி.எல். பிரதான அனுசரணையாளராக இருந்த காலப்பகுதியில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை ஆண்டு ஒன்றுக்கு இந்திய நாணயப்படி 440 கோடி ரூபாய் வரையில் வருமானம் ஈட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.   

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…