இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் ட்ராவிடின் பதவிக்காலம் அடுத்த ஆண்டின் ஜூன் மாதம் வரை நீடிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
>> இலங்கை அணி அடுத்த ஆண்டு விளையாடவுள்ள தொடர்களின் விபரம் வெளியானது
ராகுல் ட்ராவிட்டின் பதவிக்காலம் ஒருநாள் உலகக் கிண்ணத் தொடருடன் நிறைவடைவதாக முன்னர் குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்படி ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியினை தழுவிய நிலையில், இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர் ஒருவர் நியமிக்கப்படுவார் எனவும் நம்பப்பட்டிருந்தது.
எனினும் கடந்த சில நாட்களாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைக்கும் (BCCI), ராகுல் ட்ராவிட்டுக்கும் நடந்த பேச்சு வார்த்தையின் அடிப்படையில் ட்ராவிட்டுக்கு அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை இந்திய அணியின் பயிற்சியாளராக செயற்பட பயிற்சிக்கால நீடிப்பு வழங்கப்பட்டிருக்கின்றது.
அடுத்த ஆண்டு ஜூன் மாதம் T20 உலகக் கிண்ணத் தொடர் நடைபெறவுள்ள நிலையில் இதனை அடிப்படையாகக் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டிருக்கின்றது. ஜூன் மாதம் 03ஆம் திகதி ஆரம்பமாகும் T20 உலகக் கிண்ணத் தொடர் ஜூன் மாதம் நிறைவடையவிருக்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
>> குஜராத் டைடன்ஸ் அணியில் இருந்து நீங்கும் ஹார்திக் பாண்டியா
தற்போது பதவி நீடிப்பினை பெற்றிருக்கும் ராகுல் ட்ராவிட் டிசம்பர் மாதம் 05ஆம் திகதி இந்திய T20 அணியுடன் தென்னாபிரிக்கா பயணமாகவிருப்பது சுட்டிக்காட்டத்தக்கது. இந்திய அணி தென்னாபிரிக்காவில் மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரில் ஆடுகின்றது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<