இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளின் பங்குற்றலுடன் எதிர்வரும் 6ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள சுதந்திர கிண்ண முத்தரப்பு T-20 தொடரில் பங்களாதேஷ் அணியின் தலைவரும், சகலதுறை ஆட்டக்காரருமான சகிப் அல் ஹசன் விளையாடுவதில் சந்தேகம் நிலவுவதாக அந்நாட்டு கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
[rev_slider LOLC]
இந்நிலையில், குறித்த தொடரில் சகிப் அல் ஹசனுக்கு விளையாட முடியாமல் போனால் அவர் ஒரு ஆலோசகராக அணியுடன் செயற்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வரும் பங்களாதேஷ் குழாமில் காயத்திலிருந்து மீளாத ஷகீப்
அடுத்த மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள சுதந்திர கிண்ண T-20 முத்தரப்பு
இந்த தொடருக்காக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 16 பேர் கொண்ட பங்களாதேஷ் அணியின் தலைவராக சகிப் அல் ஹசனை மீண்டும் நியமிக்க அந்ந நாட்டு கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்திருந்தது. எனினும், அவருடைய காயம் முழுமையாக குணமடையாத காரணத்தால் அவர் சுதந்திர கிண்ணத்தில் பங்கேற்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.
இந்நிலையில், விரலில் ஏற்பட்ட காயம் குறித்து மருத்துவ ஆலோசனை பெறுவதற்காக சகிப் அல் ஹசன் கடந்த திங்கட்கிழமை தாய்லாந்து சென்றுள்ளார். சகிப் சிகிச்சை பெறும் மருத்துவர்கள் தாய்லாந்தில் இருப்பதால் அவர் அங்கு சென்று காயம் குறித்து ஆலோசனை பெற உள்ளதாகவும், அதன்பிறகு முத்தரப்பு தொடரில் பங்கேற்பது குறித்து அறிவிக்கவுள்ளதாகவும் அந்நாட்டு கிரிக்கெட் சபை வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எனினும், சகிப் அல் ஹசன் மீண்டும் அணிக்கு திரும்புவதற்கு குறைந்தபட்சம் இரண்டு வாரங்கள் தேவைப்படும் என அந்நாட்டு கிரிக்கெட் சபையின் உடற்தகுதி வைத்தியர் டெபாஷிஸ் சௌத்ரி வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார். அதேநேரம், சகிப்புக்கு தாய்லாந்து அல்லது அவுஸ்திரேலியாவில் சிகிச்சை அளிப்பதற்கு இதுவரை எந்தவொரு தீர்மானமும் மேற்கொள்ளவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
சுதந்திர கிண்ணத்திற்கான இலங்கை அணி இதுதான்
மார்ச் 6 ஆம் திகதி ஆரம்பமாகும் சுதந்திர கிண்ண முக்கோண
இதேநேரம், முத்தரப்பு சுதந்திர கிண்ணத்தில் விளையாடவுள்ள பங்களாதேஷ் அணி இந்த வார இறுதியில் இலங்கைக்கு வருகை தரவுள்ளதுடன், இதன்போது சகிப் அல் ஹசனும் அணியுடன் இணைந்துகொள்ளவுள்ளார். எனினும், குறித்த தொடரில் சகிப் அல் ஹசனுக்கு விளையாட கிடைக்காவிடின், அவர் அணியின் ஆலோசகராக பணியாற்றுவார் என அந்நாட்டு கிரிக்கெட் சபையின் நிறைவேற்று அதிகாரி நிஸாமுத்தீன் சௌத்தி தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், சகிப் அல் ஹசன் எலும்பு முறிவு சம்பந்தமான மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்றுக்கொள்வதற்காக கடந்த திங்கட்கிழமை தாய்லாந்து பயணமாகியுள்ளார். அவர் நாடு திரும்பிய பிறகுதான் முத்தரப்பு தொடரில் விளையாடுவாரா என்பது பற்றி அறிவிக்க முடியும். எனினும், அவர் அணியுடன் இலங்கை செல்வார் எனவும் சௌத்தி தெரிவித்தார்.
இந்நிலையில், பங்களாதேஷ் தெரிவுக் குழுவின் தலைவர் மின்ஹாஜுல் ஆப்தீன் இதுதொடர்பில் கருத்து வெளியிடுகையில், முத்தரப்பு தொடருக்கான அணியை தெரிவுசெய்யும் போது முதலிரண்டு போட்டிகளின் பிறகு பங்களாதேஷ் அணியில் இணைந்துகொள்வதற்கான உடற்தகுதி சகிப் அல் ஹசனுக்கு இருப்பதை ஊகித்திருந்தோம். எனினும், தற்போதைய நிலைமையில் அவருக்கு உடனடியாக அணியில் இணைந்துகொள்வதற்கான வாய்ப்பு இல்லை என மருத்துவர்கள் அறிவுறுத்தியிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
முக்கியமான பலர் இன்றி இலங்கை வரும் இந்திய குழாம் அறிவிப்பு
அடுத்த மாதம் முதல் வாரத்தில் இலங்கையில் ஆரம்பமாகும் சுதந்திர கிண்ண
பங்களாதேஷ் அணியின் நட்சத்திர வீரரும், இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடர் முதல் புதிய அணித்தலைவராக நியமிக்கப்பட்டவருமான 30 வயதான சகிப் அல் ஹசன், இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற முத்தரப்பு ஒரு நாள் தொடரின் இறுதிப் போட்டியின் போது இலங்கை அணித் தலைவர் தினேஷ் சந்திமாலின் பிடியெடுப்பொன்றை மேற்கொள்ள முற்பட்ட வேளையிலேயே மைதானத்தில் விழுந்து உபாதைக்குள்ளானார். வலது கைவிரலில் ஏற்பட்ட திடீர் உபாதை காரணமாக அவருக்கு உடனே சிகிச்சை அளிக்கப்பட்டதுடன், எதிர்வரும் 3 வாரங்களுக்கு எந்தவொரு கிரிக்கெட் போட்டியிலும் விளையாட முடியாது எனவும் அறிவிக்கப்பட்டது.
இதன் கரணமாக, இலங்கை அணிக்கெதிரான டெஸ்ட் தொடரிலிருந்து சகிப் அல் ஹசன் விலகியதை அடுத்து, அவருக்குப் பதிலாக அணியை மஹ்மதுல்லாஹ் ரியாத் வழிநடத்தினார். தொடர்ந்து, எஞ்சிய 2 போட்டிகளைக் கொண்ட T-20 தொடரிலும் பங்களாதேஷ் அணியை மஹ்மதுல்லாஹ் வழிநடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எனவே, இம்மாதம் ஆரம்பமாகவுள்ள முத்தரப்பு T-20 தொடரிலும் சகிப் அல் ஹசன் விளையாடாவிட்டால், மஹ்மதுல்லாஹ் மீண்டும் அணியை வழிநடத்தவுள்ளதுடன், சகிப்புக்குப் பதிலாக மெஹெதி ஹசன் மிராஸ் விளையாடுவார் எனவும் அந்நாட்டு தெரிவுக்குழு அறிவித்துள்ளது.