மீண்டும் இங்கிலாந்து அணியில் விளையாடுவாரா அலெக்ஸ் ஹேல்ஸ்?

168
@cricbuzz

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக செயற்பட்டு வந்த அலெக்ஸ் ஹேல்ஸ், மீண்டும் சர்வதேச போட்டிகளுக்காக இங்கிலாந்து அணிக்கு திரும்ப முடியும் என அந்த அணியின் தலைவர் இயன் மோர்கன் தெரிவித்துள்ளார். 

பார்வையளர்களின்றிய கிரிக்கெட்டிற்கு இங்கிலாந்து வீரர் ஆதரவு

கொரோனா வைரஸ் ஆபத்து இல்லாமல் போகும் சந்தர்ப்பத்தில் கிரிக்கெட் போட்டிகளை..

கடந்த ஆண்டு உலகக் கிண்ணத் தொடருக்கான ஆரம்ப குழாத்தில், இணைக்கப்பட்டிருந்த அலெக்ஸ் ஹேல்ஸ் ஊக்கமருந்து சர்ச்சை காரணமாக அணியிலிருந்து நீக்கப்பட்டார். இதன் காரணமாக உலகக் கிண்ணத் தொடரில் விளையாடாத இவர், சுமார் ஒருவருட காலப்பகுதியாக தேசிய அணிக்காக இணைத்துக்கொள்ளப்படவில்லை. 

எனினும், அணி வீரர்கள், பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் ஏனைய கிரிக்கெட் அணி  அதிகாரிகளிடம் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் நடந்துக்கொண்டால் அலெக்ஸ் ஹேல்ஸ் மீண்டும் தேசிய அணிக்கு திரும்புவதற்கு வாய்ப்பு உள்ளது என இயன் மோர்கன் குறிப்பிட்டுள்ளார்.

அலெக்ஸ் ஹேல்ஸ் முதற்தடவையாக ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கியிருந்த போது, அவருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டு, மீண்டும் அணியில் இணைக்கப்பட்டிருந்தார். எனினும், இரண்டாவது தடவையாக ஊக்கமருந்து சர்ச்சையில், சிக்கியதால், அணியின் கலாச்சாரத்தை மீறி செயற்படுவதன் காரணமாக அலெக்ஸ் ஹேல்ஸ் அணியிலிருந்து நீக்கப்பட்டார்.

அதன் பின்னர், தேசிய அணிக்காக அலெக்ஸ் ஹேல்ஸ் விளையாடாத போதும், அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற பிக் பேஷ் லீக் மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்ற பாகிஸ்தான் சுப்பர் லீக் போன்றவற்றில் அலெக்ஸ் ஹேல்ஸ் விளையாடியிருந்தார். இந்த தொடர்களில் மிகச்சிறப்பாக விளையாடியிருந்த ஹேல்ஸ், அதிகமான ஓட்டங்களையும் குவித்திருந்தார்.

இங்கிலாந்து – மே. தீவுகள் தொடர் எதிர்வரும் ஜூலையில்?

சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான…

இங்கிலாந்து அணியின் முன்னணி T20I துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக கருதப்படும் அலெக்ஸ் ஹேல்ஸ், இந்த ஆண்டு நடைபெறவுள்ள T20I  உலகக் கிண்ணத்தொடரை குறிவைத்து செயற்பட்டு வருகின்றார். ஆனால், அவரால் மீண்டும் அணிக்குள் வர முடியுமா? என்ற கேள்வி எழுந்து வரும் நிலையில், அபு தாபி T10 லீக் தொடரின் ஆரம்ப நிகழ்சியில் கலந்துக்கொண்டு இதற்கான பதிலை இயன் மோர்கன் தெரிவித்தார்.   

“தவறுகள் செய்வது மனித இயல்பு. அதனை தவிர்க்க முடியாது. எனினும், அதனை மறப்பதற்கு ஏனையோரிடம் நம்பிக்கையை வளர்க்க வேண்டும். நம்பிக்கையை வளர்ப்பதற்கு காலம் எடுக்கும். குறித்த சம்பவம் இடம்பெற்று 11 மாதங்கள் ஆகின்றன. எனவே, நீண்ட நாட்கள் இல்லை.  

அலெக்ஸ் ஹேல்ஸ் அணியிலிருந்து வெளியேறும் போது, ஒரு கடினமான கலாச்சாரத்தை அணியில் வைத்து சென்றார். இந்த விடயம், அலெக்ஸ் ஹேல்ஸின் மீது வீரர்கள் வைத்திருந்த நம்பிக்கையை உடைத்தெறிந்துவிட்டது. எனவே, குறித்த விடயம் சரியாக காலம் எடுக்கும். அவருக்கான கதவுகள் அணியில் திறந்திருந்தாலும், அவர் மேலும் நம்பிக்கையை வளர்க்க வேண்டும்” என்றார்.  

>> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<