பாகிஸ்தான் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் அஹமத் ஷேசாத் மற்றும் மத்திய தரவரிசைத் துடுப்பாட்ட வீரர் உமர் அக்மல் ஆகிய இருவரையும் விராத் கொஹ்லி, டி வில்லியர்ஸ் போல் விளையாட வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள் என்று பாகிஸ்தான் அணியின் சகலதுறை வீரர் ஷெஹிட் அப்ரிடி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவரான ஷெஹிட் அப்ரிடி தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “அஹமத் ஷேசாத் மற்றும் உமர் அக்மல் இருவரும் விராத் கொஹ்லி, டி வில்லியர்ஸ் அளவுக்கு விளையாட வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு என்று நினைக்கிறேன்.
கொஹ்லி,டோனியை வைத்து ரவி சாஸ்திரி கூறியது என்ன?
அவர்களிடன் நாம் அதிகமாக எதிர்பார்ப்பதை நிறுத்த வேண்டும். அவர்களின் சொந்தப் பாணியில் விளையாட அனுமதிக்க வேண்டும். இருவரும் அதிகமான போட்டிகளில் விளையாடி அனுபவம் பெறும்போது அவர்களின் ஆட்டம் மேம்படும். அதேசமயம் ஒழுக்க நெறிகளில் எவ்வித சமரசமும் கூடாது”என்று தெரிவித்துள்ளார்.
தற்போது ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாகியுள்ள ஷேசாத் மற்றும் அக்மல் இருவரும் இங்கிலாந்து செல்லும் பாகிஸ்தான் அணியில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்