டயலொக் தேசிய கிரிக்கெட் விருதுகள் – 2016

908
Dialog domestic cricket awards

கடந்த திங்கட்கிழமை(20) தாஜ் சமுத்ராவில் நடைபெற்ற 2016ஆம் ஆண்டுக்கான டயலாக் தேசிய கிரிக்கெட் விருதுகள் வழங்கும் விழாவில்,  60 இற்கும் மேற்பட்ட விருதுகள், 2015/16ஆம் ஆண்டுகளில் உள்ளூர் மற்றும் சர்வதேச போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்திய கிரிக்கெட் வீர வீராங்கனைகளை கெளரவிக்கும் முகமாக வழங்கப்பட்டன.

இந்நிகழ்வின் போது இலங்கை கிரிக்கெட் சபைத் தலைவர் திலங்க சுமதிபால, டயலொக் ஆசியாட்டா பி.எல்.சி. குழு தலைமை நிர்வாக அதிகாரி – Dr. ஹான்ஸ் விஜேசூரிய, இலங்கை கிரிக்கெட் நிர்வாகக் குழு உறுப்பினர்கள், பங்குதாரர்கள், மற்றும் கௌரவ விருந்தினர்கள் மத்தியில், இலங்கை கிரிக்கெட் சபையின் அனுசரணையில் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் வீர வீராங்கனைகள் வெளிபடுத்திய திறமைகள் குறித்து அறிவிக்கப்பட்டது.

நடனம், சிரிப்பு மற்றும் பல்வேறான பொழுதுபோக்கு அம்சங்களுடன் வெகு விமர்சையாக நடைபெற்ற இந்த நிகழ்வில்,  நீண்ட காலமாக இலங்கை கிரிக்கெட் சபையில் ஒப்பற்ற சேவை புரிந்த உத்தியோகபூர்வ அதிகாரிகள் மற்றும் ஊடகவியளாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் மேலும் 11 விருதுகள் வழங்கப்பட்டது.

சிறந்த கிரிக்கெட் வீரராக அஞ்செலோ மெதிவ்ஸ் தெரிவு

நவம்பர் 3௦ஆம் திகதி (நேற்று) வோட்டர்ஸ்எஜ் உள்ளரங்கில் நடைபெற்ற டயலொக் கிரிக்கெட் விருது வழங்கும் விழாவில், இலங்கை கிரிக்கெட் அணித் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ் 2௦15ஆம் ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதைப் பெற்றுக்கொண்டார்.

தமிழ் யூனியன் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம் 65 வருடங்களுக்கு பின்னர் பிரிமியர் லீக் போட்டிகளில் சம்பியன் பட்டம் வென்றதோடு, அவ்வணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான தரங்க பரணவிதான சிறந்த துடுப்பாட்ட வீரர் விருதினையும், கொழும்ப் கிரிக்கெட் கழகத்தைச் சேர்ந்த இடது கை சுழல் பந்து வீச்சாளர் லக்ஷான் சந்தகன் சிறந்த பந்து வீச்சாளார் விருதையும் பெற்றுக்கொண்டனர். அத்துடன், 34 விக்கெட்டுகள் மற்றும் 54.25 சராசரிவிகிதத்துடன் 868 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட  தனஞ்சய டி சில்வா சிறந்த சகலதுறை வீரருக்கான விருதினை பெற்றுக்கொண்டதோடு இலங்கை தேசிய அணியிலும் இடம் பிடித்துக்கொண்டார்.

 

Photos: Dialog National Cricket Awards 2016

Photos of the Dialog National Cricket Awards 2016

மட்டுப்படுத்தப்பட்ட பிரிமியர் லீக் ஓவர் போட்டிகளில் சிங்கள விளையாட்டு கழக(SSC) ஆரம்ப துடுப்பாட்ட வீரர், தனுஷ்க குணதிலக்க 5 போட்டிகளில் 270 ஓட்டங்களை பெற்றுகொண்டதன் மூலம் சிறந்த துடுப்பாட்ட வீரருக்கான விருதினையும், NCC கழக அணித் தலைவர் பர்வீஸ் மஹ்ரூப் ஐந்து போட்டிகளில் 16 விக்கெட்டுக்களை வீழ்த்தியதன் மூலம் சிறந்த பந்து வீச்சாளருக்கான விருதினையும் பெற்றுக்கொண்டார். சோனகர் விளையாட்டு கழகத்தை சேர்ந்த சுழல் பந்து வீச்சாளர் சசித்திர சேரசிங்க 4 போட்டிகளில் 9 விக்கெட்டுகளை கைப்பற்றியதோடு 120 ஓட்டங்களை பெற்றுக்கொண்டமையால் சிறந்த சகலதுறை வீரருக்கான விருதைப் பெற்றுக்கொண்டார்.

பிரிமியர் T20 போட்டிகளுக்கான சிறந்த துடுப்பாட்ட வீரருக்கான விருதினை இரண்டு சதங்களை விளாசி 348 ஓட்டங்களை குவித்த தசுன் சானக பெற்றுக்கொண்டார். T20 போட்டிகளில் 13 விக்கெட்டுகளை வீழ்த்திய திலின துஷார சிறந்த பந்து வீச்சாளராகவும், சிறந்த சகலதுறை வீரருக்கான விருதினை இலங்கை இராணுவப்படை விளையாட்டு கழகம் சம்பியன் பட்டம் வெல்லுவதற்கு வழிநடத்திய அதிரடி வீரர் சீகுகே பிரசன்ன பெற்றுக்கொண்டார்.

மகளிர் கிரிக்கெட் விருதுகள்

• (டிவிசன் II) – சிறந்த துடுப்பாட்டக்காரர் – ஹன்சிமா கருணாரத்ன

(இலங்கை கடற்படை விளையாட்டு கழகம்)

• (டிவிசன் II) – சிறந்த பந்து வீச்சாளர் – சுதீபா அத்துகோரள (இலங்கை விமானப்படை விளையாட்டு கழகம்)

• (டிவிசன் II) – சிறந்த சகல துறை ஆட்டக்காரர் – ப்ரியாணி அதிகரி (இலங்கை கடற்படை விளையாட்டு கழகம்)

• (டிவிசன் II) – இரண்டாம் இடம் – இலங்கை கடற்படை விளையாட்டு கழகம் (B)

• (டிவிசன் II) – வெற்றியாளர் – இலங்கை விமானப்படை விளையாட்டு கழகம் (B)

• (டிவிசன் I) – சிறந்த துடுப்பாட்டக்காரர் – ஷசிகலா சிறிவர்தன (இலங்கை கடற்படை விளையாட்டு கழகம்)

• (டிவிசன் I) – சிறந்த பந்து வீச்சாளர் – ஓஷாடி ரணசிங்க (இலங்கை கடற்படை விளையாட்டு கழகம்)

• (டிவிசன் I) – சிறந்த சகலதுறை ஆட்டக்காரர் – ஷசிகலா சிறிவர்தன (இலங்கை கடற்படை விளையாட்டு கழகம்)

• (டிவிசன் I) – இரண்டாம் இடம் – இலங்கை விமானப்படை விளையாட்டு கழகம்

• (டிவிசன் I) – வெற்றியாளர் – இலங்கை கடற்படை விளையாட்டு கழகம்

23 வயதுக்கு உட்பட்ட கிரிக்கெட் போட்டிகள்

• (டிவிசன் III) – இரண்டாம் இடம் – ஹம்பந்தொட்ட கிரிக்கெட் கழகம்

• (டிவிசன் III) – வெற்றியாளர் – நடுநிலை கிரிக்கெட் கழகம்

• (டிவிசன் II) – சிறந்த துடுப்பாட்டக்காரர் – துலாஷ் உதயங்க (காலி கிரிக்கெட் கழகம்)

• (டிவிசன் II) – சிறந்த பந்து வீச்சாளர் – திசர பானுக (சுங்க கிரிக்கெட் கழகம்)

• (டிவிசன் II) – சிறந்த சகலதுறை ஆட்டக்காரர் – சச்சின் ஜயவர்தன (ப்ளூம் பீல்ட் கிரிக்கெட் மற்றும் மெய்வலுனர் கழகம்

• (டிவிசன் II) – இரண்டாம் இடம் – ப்ளூம்பீல்ட் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம்

• (டிவிசன் II) – வெற்றியாளர் – இலங்கை இராணுவப்படை விளையாட்டு கழகம்

• (டிவிசன் I) – சிறந்த துடுப்பாட்டக்காரர் – வணிது ஹசரங்க (இலங்கை துறைமுக அதிகார கிரிக்கெட் கழகம்)

• (டிவிசன் I) – சிறந்த பந்து வீச்சாளர் – அஷான் ரணசிங்க (இலங்கை கடற்படை விளையாட்டு கழகம்)

• (டிவிசன் I) – சிறந்த சகலதுறை ஆட்டக்காரர் – புலின தரங்க (தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம்)

• (டிவிசன் I) – கூட்டு சம்பியன்கள் – சோனகர் விளையாட்டு கழகம் & தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம்

அகில இலங்கை மட்டம் / தேசிய மட்டம்

• (டிவிசன் III) டெய்லி நிவ்ஸ் கிண்ணம் – இரண்டாம் இடம் – பழைய மாணவர் சாஹிரா கிரிக்கெட் கழகம்

• (டிவிசன் III) டெய்லி நிவ்ஸ் கிண்ணம் – வெற்றியாளர் – கந்துரட்ட விளையாட்டு கழகம்

• டோனவன் என்றி போட்டித்தொடர் – இரண்டாம் இடம் – கெஸ்டோ கிரிக்கெட் கழகம்

• டோனவன் என்றி போட்டித்தொடர் – வெற்றியாளர் – நாரம்மல விளையாட்டு கழகம்

பி. சரவணமுத்து கிண்ணம்

• சிறந்த துடுப்பாட்டக்காரர் – அகில் இன்ஹாம் (நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம்)

• சிறந்த பந்து வீச்சாளர் – கல்ஹான் சிநேத் (நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம்)

• சிறந்த சகலதுறை ஆட்டக்காரர் – முஹம்மத் பெஷால் (செபஸ்தியன் கிரிக்கெட் கழகம்)

வளர்ந்து வரும் லீக் போட்டிகள்

• சிறந்த துடுப்பாட்டக்காரர் – சுதேஷ் உமயங்க (பாணதுறை விளையாட்டு கழகம்)

• சிறந்த பந்து வீச்சாளர் – நவீன் கவிகார (களுத்துறை நகர கிரிக்கெட் கழகம்)

• சிறந்த சகலதுறை ஆட்டக்காரர் – டினுஷ்க மாலன் (இலங்கை கடற்படை விளையாட்டு கழகம்)

• இரண்டாம் இடம் – இலங்கை கடற்படை விளையாட்டு கழகம்

• வெற்றியாளர் – BRC

வளர்ந்து வரும் T20 போட்டிகள்

• சிறந்த துடுப்பாட்டக்காரர் – சஹான் ஜயவர்தன (இலங்கை கடற்படை விளையாட்டு கழகம்)

• சிறந்த பந்து வீச்சாளர் – விக்கும் சஞ்சய (BRC)

• சிறந்த சகலதுறை ஆட்டக்காரர் – அமித் எரங்க (இலங்கை கடற்படை விளையாட்டு கழகம்)

• இரண்டாம் இடம் – இலங்கை கடற்படை விளையாட்டு கழகம்

• வெற்றியாளர் – BRC

பிரிமியர் லீக் T20 போட்டிகள்

• சிறந்த துடுப்பாட்டக்காரர் – தசுன் சானக (SSC)

• சிறந்த பந்து வீச்சாளர் – திலின துஷார (கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம்)

• சகலதுறை ஆட்டக்காரர் – சீகுகே பிரசன்ன (இலங்கை இராணுவப்படை விளயாட்டு கழகம்)

• இரண்டாம் இடம் – தமிழ் யூனியன் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம்

• வெற்றியாளர் – இலங்கை இராணுவ விளையாட்டு கழகம்

மட்டுப்படுத்தப்பட்ட பிரிமியர் லீக் ஓவர் போட்டிகள்  

• சிறந்த துடுப்பாட்டக்காரர் – தனுஷ்க குணதிலக (SSC)

• சிறந்த பந்துவீச்சாளர் – பர்வீஸ் மஹ்ரூப் (NCC)

• சகலதுறை ஆட்டக்காரர் – சசித்ர சேரசிங்க (சோனகர் விளையாட்டு கழகம்)

• இரண்டாம் இடம் – கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம்

• வெற்றியாளர் – NCC

பிரிமியர் லீக் போட்டிகள்

• சிறந்த துடுப்பாட்டக்காரர் – தரங்க பரணவிதான (தமிழ் யூனியன்)

• சிறந்த பந்துவீச்சாளர் – லக்ஷான் சந்தகன் (கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம்)

• சகலதுறை ஆட்டக்காரர் –தனஞ்சய டி சில்வா (தமிழ் யூனியன்)

• இரண்டாம் இடம் – சோனகர் விளையாட்டு கழகம்

• வெற்றியாளர் – தமிழ் யூனியன் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம்

சிறப்பு விருதுகள்

• ஆண்டுக்கான சிறந்த போட்டி நடுவர் – நல்லையா தேவராஜன்

• ஆண்டுக்கான சிறந்த நடுவர் – தீபால் குணவர்தன

• ஆண்டுக்கான சிறந்த மைதான கவனிப்பாளர் – D சரத்

• ஆண்டுக்கான சிங்கள விளையாட்டு செய்தியாளர் – தம்மிக ரத்னவீர

• ஆண்டுக்கான தமிழ் விளையாட்டு செய்தியாளர் – நெவில் அந்தனி

சேவையாளருக்கான சிறப்பு அங்கீகார விருதுகள்

• தம்மிக் கபுறுபண்டார – 17 வருடங்கள்

• ரோய் பெரேரா – 18 வருடங்கள்

• லால் ஜயலத் – 19 வருடங்கள்

• எரங்க ரந்தெனிய – 19 வருடங்கள்

• லால் தாமல் – 23 வருடங்கள்

• S ஹேமபால – 30 வருடங்கள்