வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான கால்பந்து லீக்கின் மூன்றாம் வாரப்போட்டிகளின் அடிப்படையில் பிரிவு C இல் ஆதிக்கம் செலுத்தியிருந்த சம்பத் வங்கி மற்றும் கொழும்பு டொக்யார்ட் ஆகிய அணிகள் முதலிடத்தை பங்கிட்டுக் கொண்டதுடன் பிரிவு D மற்றும் E ஆகியவற்றில், எல்.பி பினான்ஸ் (B) மற்றும் யூனியன் வங்கி ஆகியவை முறையே முன்னிலை பெற்றுள்ளன.
குழு மட்டத்தில் முன்னிலையில் உள்ள எக்ஸ்ப்போ லங்கா, HNB நிறுவனங்கள்
ஒரு பாதிக்கு முப்பது நிமிடங்கள் மாத்திரமே வழங்கப்பட்ட நிலையில், வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான இந்த பிரிவுகளின் (C,D,E) ஆட்டங்கள் நடைபெற்றிருந்தது.
பிரிவு C
கொழும்பு டொக்யார்ட் எதிர் ஸ்ரீ லங்கா டெலிகொம்
ஸ்ரீ லங்கா டெலிகொம் அணியினர் 2-1 என்ற கோல்கள் அடிப்படையில் கொழும்பு டொக்யார்ட் அணியினரை வீழ்த்தினர். இங்கு இரு அணிகளாலும் பெறப்பட்ட அனைத்து கோல்களும் முதல் பாதியில் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
போட்டியின் முதலாவது கோல் 22 ஆவது நிமிடத்தில் E.L.R. சில்வாவினால் கொழும்பு டொக்யார்ட் அணிக்காக பெறப்பட்டிருந்தது. எனினும், முதல் கோல் பெறப்பட்டு ஐந்து நிமிடங்களின் பின்னர் திலான் மதுஷங்க டெலிகொம் அணிக்காக முதல் கோலினைப் போட்டு இரு அணிகளுக்கு இடையிலான கோல் எண்ணிக்கையை சமன் செய்தார்.
பின்னர் 30 ஆவது நிமிடத்தில் இமேஷ் மதுஷங்கவினால் போடப்பட்டிருந்த இரண்டாவது கோல் போட்டியின் வெற்றியாளர்கள் ஸ்ரீ லங்கா டெலிகொம் அணியினர் தான் என்பதனை உறுதிப்படுத்தியிருந்தது.
கோல் பெற்றவர்கள்
கொழும்பு டொக்யார்ட் – E.L.R. சில்வா 22’
ஸ்ரீ லங்கா டெலிகொம் – திலான் மதுஷங்க 27’, இமேஷ் மதுஷங்க 30’
செலான் வங்கி எதிர் HSBC வங்கி
HSBC வங்கி வங்கிக்கு எதிரான இந்தப் போட்டியில் 4-1 என்ற கோல்கள் அடிப்படையில் இலகு வெற்றி பெற்ற செலான் வங்கியானது அவ்வெற்றியுடன் 3 புள்ளிகளினையும் பெற்றுக்கொண்டது.
மொஹமட் IK மற்றும் ஜெப்ரி இர்ஷாத் ஆகியோர் பெற்றுக்கொண்ட கோல்களுடன் முதற்பாதியில் செலான் வங்கி முன்னிலை பெற்றது. இர்ஷாத் மேலும் இரண்டு கோல்களை இரண்டாம் பாதியில் பெற்று தனது ஹட்ரிக் கோல்களை பூர்த்தி செய்தார். போட்டி நிறைவடைய 7 நிமிடங்களுக்கு முன்னதாக தேசித வெலிகபொல ஆறுதல் கோலொன்றினை HSBC அணிக்காக பெற்றார்.
கோல் பெற்றவர்கள்
செலான் வங்கி – மொஹமட் IK 12’, ஜெப்ரி இர்ஷாத் 16’, 37’&40’
HSBC வங்கி – தேசித வெலிகபொல 53’
HSBC வங்கி எதிர் சம்பத் வங்கி
சம்பத் வங்கி இப்போட்டியில் 4-1 என்ற கோல்கள் அடிப்படையில் HSBC அணிக்கு அதிர்ச்சியளித்து அவ்வணிக்கு இரண்டாவது தோல்வியினைப் பரிசளித்தது.
போட்டியின் முதற்பாதியில் தினுஷ நாணயக்காரவின் இரட்டை கோல்கள் மற்றும் அவிந்த அதிகாரி பெற்ற கோல் ஆகியவற்றுடன் முதற்பாதியில் 3-0 என சம்பத் வங்கி முன்னிலை பெற்றது.
போட்டியின் இரண்டாம் பாதியில் அஷீம் பசாலினால் HSBC அணிக்கு ஒரு கோல் பெறப்பட்டது. வேறு எவராலும் அவ்வணிக்காக கோல்கள் பெற முடியவில்லை. போட்டியின் இறுதி நேரத்தில் அதிகாரி மீண்டும் ஒரு கோலினைப் போட்டு போட்டியின் வெற்றியாளர்களாக சம்பத் அணியினை மாற்றினார்.
கோல் பெற்றவர்கள்
HSBC வங்கி – அசீம் பசால் 34’
சம்பத் வங்கி – தினுஷ நாணயக்கார 8’ & 22’, அவிந்த அதிகாரி 16’ & 58’
கொழும்பு டொக்யார்ட் எதிர் செலான் வங்கி
மொஹமட் முர்ஷிதின் அபார ஆட்டத்துடன் கொழும்பு டொக்யார்ட் அணியினர் 4-0 என்ற கோல்கள் கணக்கில் செலான் வங்கியினரை வீழ்த்தினர்.
போட்டியின் முதற்பாதியின் 20 ஆவது நிமிடத்தில் முர்ஷிதினால் மாத்திரமே ஒரு கோல் பெறப்பட்டு கொழும்பு டொக்யார்ட் முன்னிலை அடைந்திருந்தது. போட்டியின் இரண்டாம் பாதியில் மேலதிக மூன்று கோல்களும் பெறப்பட்டிருந்தன. இரண்டாம் பாதி கோல்களில் மீண்டும் கோலடித்த முர்ஷித் உடன் சேர்த்து E.L.R. சில்வா மற்றும் V.R. பெர்னாந்து ஆகியோரும் தமது நாமங்களை கோல்களில் பொறித்துக்கொண்டனர்.
கோல் பெற்றவர்கள்
கொழும்பு டொக்யார்ட் – மொஹமட் முர்ஷித் 20’ & 40’, E.L.R. சில்வா, V.R. பெர்னாந்து 55’
பிரிவு D
வேர்ச்சூஸா எதிர் அமானா வங்கி
வேர்ச்சூஸா (Virtusa) அணி இரண்டாம் பாதியில் அபாரம் காட்டியிருப்பினும் போட்டியில் முழு ஆதிக்கம் செலுத்திய அமானா வங்கியினர் 4-2 என்ற கோல்கள் கணக்கில் போட்டியின் வெற்றியாளர்களாக மாறினர்.
போட்டியின் முதற்பாதியில் மொஹமட் நியாஸ், மொஹமட் இன்சாப் மற்றும் மொஹமட் சாஜித் ஆகியோரின் கோல்களுடன் அமானா வங்கி 3-0 என முன்னிலை வகித்தது.
போட்டியின் இரண்டாம் பாதி ஆரம்பித்து மூன்று நிமிடங்களில் நான்காவது கோலினை அமானா வங்கியிக்காக மொஹமட் இர்ஷாத் பெற்றுத் தந்தார். இரண்டாம் பாதியில் பெனால்டி வாய்ப்பொன்றின் மூலம் மதுஷான் சில்வா கோலொன்றினை வேர்ச்சூஸா அணிக்காக பெற்றதுடன், லோரன்ஸ் கொப்பின் இரண்டாம் கோலினை அதே அணிக்கு பெற்றுத்தந்தார்.
கோல் பெற்றவர்கள்
வேர்ச்சூஸா – மதுஷான் டி சில்வா (பெனால்டி) 36’, லோவ்ரன்ஸ் கொப்பின் 53’
அமானா வங்கி – மொஹமட் நியாஸ் 14’, மொஹமட் இன்ஷாப் 17’, மொஹமட் சாஜித் 25’, மொஹமட் இர்ஷாத் 33’
எல்.பி பினான்ஸ் (B) எதிர் வேர்ச்சூஸா
எல்.பி பினான்ஸ் (B) அணியினர் மிதமிஞ்சிய ஆட்டத்தினை வெளிக்காட்டி 7-1 என்ற கோல்கள் அடிப்படையில் வேர்ச்சூஸா அணியினரை இந்த போட்டியில் வீழ்த்தி தமது பிரிவில் முன்னிலை அடைந்து கொண்டனர்.
போட்டியின் முதற்பாதியில் 2-1 என சாதரணமாகவே கோல்கள் இருந்தன. எனினும், இரண்டாம் பாதியில் கலவரம் நடத்திய J.A.L. தரங்க, ஹட்ரிக் கோல்களுடன் போட்டியின் வெற்றி வாகையினை எல்.பி பினான்ஸ் (B) அணி சூடிக்கொண்டது.
கோல் பெற்றவர்கள்
எல்.பி பினான்ஸ் (B) – J.A.L. தரங்க 5’, 35’ & 41’, விஜித குமார 10’, அன்டொன் ஜோய்(பெனால்டி) 36’ & 39’, தரங்க பெரேரா 45’
வேர்ச்சூஸா – மதுஷான் டி சில்வா 20’
சிங்கர் எதிர் எல்.பி. பினான்ஸ் (B)
சிங்கர் அணியானது எல்.பி பினான்ஸ் அணிக்கு இப்போட்டியில் சற்றும் ஈடுகொடுக்காது 5-1 என்ற கோல்கள் கணக்கில் தோல்வியடைந்தது. போட்டியின் வெற்றியாளர்களான எல்.பி. பினான்ஸ் (B) அணியினர் 2-0 என முதற்பாதியில் முன்னிலை பெற்றிருந்தனர். அவ்வணிக்காக லக்ஷான் தனுஜ மொத்தமாக 4 கோல்களை பெற்றுத்தந்தார்.
கோல் பெற்றவர்கள்
சிங்கர் – K.S.J. சில்வா 50’
எல்.பி. பினான்ஸ் (B) – லக்ஷான் தனுஜ 10’, 20’, 38’ & 55’, அன்டொன் ஜோய் 35’
டயலொக் எதிர் சிங்கர் (1-1)
கோல் பெற்றவர்கள்
டயலொக் – அஹமட் மெளலானா 35’
சிங்கர் – A.S.M. செனவிரத்ன 57’
அமானா வங்கி எதிர் டயலொக் (1-1)
கோல் பெற்றவர்கள்
அமானா வங்கி – மொஹமட் றிப்கான் 52’
டயலொக் – றிபட் மாஹில் 28’
வேர்ச்சூஸா எதிர் டயலொக் (0-2)
கோல் பெற்றவர்கள்
டயலொக் – றிபட் மாஹில் 20’ & 45’
பிரிவு E
போட்டி முடிவுகள்
அக்பர் ப்ரதர்ஸ் 5 – 0 WNS குளோபல்
யூனியன் வங்கி 1 – 0 ஸ்டான்டர்ட் சாட்டரட் வங்கி
ஸ்டான்டர்ட் சாட்டரட் வங்கி 5 – 0 DFCC வங்கி
யூனியன் வங்கி 2 – 0 அக்பர் ப்ரதர்ஸ்
WNS குளோபல் 0 – 0 யூனியன் வங்கி
DFCC வங்கி 0 – 0 அக்பர் ப்ரதர்ஸ்