கால்பந்து உலகின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ பாலியல் பலாத்காரம் செய்ததாக இளம் பெண் தொடுத்த வழக்கில், மரபணு (DNA) பரிசோதனைக்கு ஆஜராகுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
போர்த்துக்கல் கால்பந்து அணியின் தலைவரும், ரியல் மெட்ரிட் அணியின் முன்னாள் வீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு ஜூவண்டஸ் அணியுடனான பயணத்தை தொடங்கும் முன், பாலியல் பலாத்கார சர்ச்சை தொற்றிக்கொண்டது.
இறுதி நிமிட அபாரத்தினால் ரினௌனை வீழ்த்தியது சோண்டர்ஸ்
டயலொக் சம்பியன்ஸ் லீக் தொடரில்…
கிறிஸ்டியானோ ரொனால்டோ கடந்த 2009 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக, 35 வயதான மொடல் அழகியும், முன்னாள் ஆசிரியையுமான காத்ரின் மேயோர்கா அதிர்ச்சித் தகவல் ஒன்றினை வெளியிட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தார்.
பல முறை தாம் மறுப்பு தெரிவித்தும் ரொனால்டோ பலவந்தமாக தன்னுடன் உறவு வைத்துக் கொண்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார். அதுமட்டுமின்றி இந்த தகவல்களை வெளியிடாமல் இருக்க சுமார் 3 கோடி ரூபாய் பணம் தருவதாக வாக்குறுதி அளித்ததாகவும் அவர் வெளிப்படுத்தியிருந்தார். அது மட்டுமின்றி ரொனால்டோவுடன் எடுத்த புகைப்படங்களையும் காத்ரின் வெளியிட்டிருந்தார்.
ஆனால் 33 வயதான ரொனால்டோ, இதற்கு மறுப்பு தெரிவித்ததோடு தான் குற்றமற்றவர், தன்னுடைய பெயருக்கு களங்கம் விளைவிக்க அந்த பெண் இவ்வாறு பொய்யான குற்றச்சாட்டை முன்வைப்பதாக தெரிவித்திருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக லாஸ் வேகாஸ் பொலிஸார் ரொனால்டோவிற்கு எதிராக கடந்த செப்டெம்பர் மாதம் வழக்கு ஒன்றைப் பதிவு செய்து விசாரணை செய்ய ஆரம்பித்தனர்.
இந்த வழக்கில் உச்சநீதிமன்றத்துக்கு செல்லத் தயார் என காத்ரின் மேயோர்காவின் வழக்கறிஞர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும், இதனை வெளியில் தெரியாமல் மறைப்பதற்காக ஒரு கணிசமான தொகை பணம் தனக்கு வழங்கினார் எனவும் அவர் குற்றம் சுமத்தியிருந்தார்.
இது இவ்வாறிருக்க, தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக கடந்த ஒக்டோபர் மாதம் வரை மௌனம் காத்துவந்த ரொனால்டோ, டுவிட்டர் வாயிலாக தன்னுடைய மௌனத்தை கலைத்தார்.
அதில், எனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை உறுதியாக நிராகரிக்கிறேன். கற்பழிப்பு என்பது ஒரு அருவருப்பான குற்றமாகும், அது எல்லாவற்றிற்கும் விரோதமானது என்று நான் நம்புகிறேன். எனது இத்தனையாண்டு காலகட்டத்தில் பல்வேறு தடவை இது போன்ற புகார்களில் சிக்கவைக்கப்பட்டேன். ஆனால் அவை யாவும் உண்மை இல்லை என்பது காலம் நிரூபித்தது. அது போன்றே அமெரிக்க இளம்பெண் எழுப்பியுள்ள குற்றச்சாட்டும் என பதிவிட்டிருந்தார்.
புளூ ஸ்டார் வீரர்கள் மீது நாவலப்பிடியில் தாக்குதல்
நாவலப்பிடி, ஜயதிலக்க…
எனினும், இந்த விவகாரம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், லாஸ் வேகாஸ் அதிகாரிகள், இளம் பெண்ணின் உள்ளாடையில் இருப்பது ரொனால்டோவின் மரபணுவுடன் ஒத்துப்போகிறாதா என்பதை பார்க்க அவரை பரிசோதனைக்கு ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளனர்.
இது குறித்து லாஸ் வேகாஸ் பொலிஸார் தரப்பில் வெளியிட்ட செய்தியில், ரொனால்டோ – காத்ரினா வழக்கில் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும். எனவே ரொனால்டோவை மரபணு பரிசோதனையில் ஈடுபடுத்துவது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ரொனால்டோவின் வழக்கறிஞர் பீட்டர் கிறிஸ்டியான்சென் இது தொடர்பில் கூறுகையில், கடந்த 2009 ஆம் ஆண்டு ஹோட்டலில் ரொனால்டோ – காத்ரின் இருவரும் சம்மதத்துடன்தான் சந்தித்துள்ளனர். 2009 ஆம் ஆண்டு சம்பவம் சம்பந்தப்பட்ட இருவரின் சம்மதத்துடன் தான் நடந்தது. அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. இதனால் ரொனால்டோவின் மரபணு காத்ரினாவிடம் ஒத்துப்போவதில் வியப்பு இல்லை என தெரிவித்தார்.
எனினும், குறித்த அறிவிப்பு தொடர்பில் ரொனால்டோ இதுவரை எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.
>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<